Dear Maanga Madayan from Minneapolis

இனிமேல் இந்தியாவுக்கு வராதே… வந்தாலும்…. “சும்மா வா மச்சீ… பார்த்து எவ்ளோ வருஷமாச்சு” என்று ஃபோனிலே மொக்கை போடாதே…சரி போனால் போகிறது என்று வந்தாலும், சில விஷயங்களைக் கவனத்தில் கொள்.

* பாரீன் சிகரட்டு புடிக்கச் சொல்லி வற்புறுத்தாதே… என் பிராண்ட் தவிர வேற எதைப் பிடித்தாலும், இரவுகளில் குத்திருமல் வரும்.

* லைஃப் ஸ்டைல் தவிர, அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் அதிக வித்தியாசமில்லை என்பதைப் புரிந்து கொள்.

* இந்திய பியர்கள் சாப்பிடுவதால் மனுஷன் செத்துப் போவதில்லை.

* கனடா என்பது யூஎஸ்ஏவில் இல்லை, அது வேறு தேசம் என்பது எனக்குத் தெரியும்.

* அக்ரீட். ருபிஆன்ரெய்ல்ஸ் என்றால் என்ன என்று எனக்குத் தெரியாது. அதே போல வேர்ட்பிரஸ் என்றால் என்ன என்று உனக்குத் தெரியாது.

* என் ப்ளாகை தொடர்ந்து வாசிக்கிறாய் என்று ஒப்புக் கொள். இல்லாவிட்டால் *அந்த* விஷயம் உனக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

* நான் அமெரிக்காவிலே வேலை தேடவில்லை. வேறு வழியில்லாமல் நான் பிசினஸ் செய்யவில்லை. விருப்பப்பட்டே செய்கிறேன். அதிலே நல்ல காசு வருகிறது. ‘சரி வருகிறேன் என்று சொன்னால், ராத்திரி ஃப்ளைட்டுக்கே கூட்டிக் கொண்டு போய் விடுகிற மாதிரி’ சீன் போடாதே.

இல்லாவிட்டால், அடுத்த தரம் வரும் போது, திரும்பச் செல்வதற்கு நீ உசுருடன் இருக்கமாட்டாய்..

அன்புடன்
நண்பன்.

17 thoughts on “Dear Maanga Madayan from Minneapolis

 1. vicky : ஆமாம். கொலை வெறிதான் 🙂

  பாலாஜி : மினியாபொலிஸ் உங்க ஊர்லேந்து எவ்ளோ தூரம்?

  wa : அவர் ஊருக்குத் திரும்பி ஒரு மாசத்துக்கு மேல ஆகுதுங்க… இது போன வாரம் நடந்த மேட்டர் 🙂

 2. Next time if I get a chance to see you, I will not mention I am from Boston (I haven’t taken any life insurance so far) :).

  Minneapolis, two hours if you travel by plane.

 3. 🙂 நான் மொன்ரியல்பா! தப்பிச்சேன்.

  சரி, சென்னைக்கு வர்ர பிரெண்ட்ஸ்ஸ உங்களப் பாக்க சொல்லுறதா இல்லையா? 😉

 4. ஆஹா! இப்படிப்பட்ட பாயிண்டெல்லாம் சொல்லறதுக்கு ஒரு ஆள் இருக்காருன்னு நெனச்சாலே புல்லரிக்குதே!

 5. வெட்டி : இது கொலை வெறியா? நான் எவ்ளோ கட்டுப்படுத்திகிட்டு எழுதியிருக்கேன்…

  ராஜேஷ் : வாங்க… அவசியம் பார்ப்போம்.. ஆனால், எழுதமாட்டேன்… கவலை வேணாம் 🙂

  மதி : அய்யோ… நான் அந்தூர்ல இருக்கிற எல்லாரையும் பத்தி எழுதலை.. எனக்குத் தெரிஞ்ச ஒரு மாங்கா மடையனைப் பத்திதான் எழுதியிருக்கேன்…

  சுரேஷ் : யாம் உள்ளோம்… அஞ்சற்க 🙂

 6. நல்லவேளை, நாம சந்திச்சு வருஷங்கள் ஆகுது. சந்திச்சப்போ நான் உங்களை சிகிரெட் குடிக்கச் சொல்லலை.

  முக்கியமா, நான் மினியாபொலிஸல இல்லை 🙂

 7. Add these:-

  1) ஃப்ளைட்லேர்ந்து இறங்கியவுடனேயே “ஸ்ஸ்ஸ்.. மெட்ராஸ்ல செம வெயில்-ஆயிடுச்சுன்னு புலம்பாதே” நீ இருக்கும்போது இருந்த அதே 40 டிகிரி ப்ளஸ்தான் இப்பவும்

  2)”இந்தியாவுல விலைவாசி பயங்கரமா ஏறிடுச்சு.. ஒரு ஷாம்பு பாட்டில் நாப்பது ரூபா”-ன்னு அறுக்காதே.. எல்லா நாட்டுலயுந்தான் ..பத்து வருஷத்துக்கும் முந்தி இருந்த அதே விலை இல்லை. எங்க நாட்டுல இன்கமிங் ஃப்ரீ.. மொபைல்-ல ஒரு கால் 40 பைசா.. தெரியுமுல்ல?

  3)”அப்புறம்.. கோலிவுட் நியூஸ் என்ன? நயன் – சிம்பு விஷயம் என்னாச்சு? “ன்னு ரம்பம் போடாதே.. இன்டர்நெட்-ல பாத்து தெரிஞ்சிக்க

  4)” சன் டிவி மாறவேயில்லை.. அதே அறுவை”-ன்னு மொக்கை போடாதே.. ஓப்ரா வின்ஃரே 25 வருஷமா போடாத பிளேடா?

  5)”மெட்ராஸ் மாறிடுச்சு.. ஃப்ளைஓவர் , மால் ..”-ன்னு புளிச்ச விஷயத்தை அரைக்காதே

 8. Blogeswari கலக்கல் 🙂

  பிரகாசரே, உங்க மறுமொழிகள் நெருப்புநரியிலே (firefox) சரியா தெரிய மாட்டேங்குது. கொஞ்சம் கவனிங்க…

 9. :):):) lol

  //* நான் அமெரிக்காவிலே வேலை தேடவில்லை. வேறு வழியில்லாமல் நான் பிசினஸ் செய்யவில்லை. விருப்பப்பட்டே செய்கிறேன். அதிலே நல்ல காசு வருகிறது. ‘சரி வருகிறேன் என்று சொன்னால், ராத்திரி ஃப்ளைட்டுக்கே கூட்டிக் கொண்டு போய் விடுகிற மாதிரி’ சீன் போடாதே.
  //

  சில பேர் உண்மையிலே இப்படித்தான் இருக்காய்ங்க இல்ல!

  kvr : நெருப்புநரி!!!!!! ரொம்பத்தான்! 🙂

  Blogeswari :

  //மெட்ராஸ் மாறிடுச்சு.. ஃப்ளைஓவர் , மால் ..”-ன்னு புளிச்ச விஷயத்தை அரைக்காதே
  //

  இது கொஞ்சம் டூ மச். ஏங்க எது சொன்னாலும் கிண்டலடிக்கறதா? உண்மையிலே மெட்ராஸ் மாறியிருக்கா இல்லையா? புதுசு புதுசா ப்ளைஓவர் மால் எல்லாம் வந்திருக்கா இல்லையா? cost of living கூடியிருக்கா இல்லையா? அதத்தான சொல்றாங்க! 😦

 10. //நான் அமெரிக்காவிலே வேலை தேடவில்லை.// இந்த பாயிண்ட் ‘போல்ட்’ல போட்டாக்கா மெத்த மகிழ்ச்சி.. ரொம்ப கடுப்படிக்கிற மேட்டர் இதுதான்.. என்னமோ இங்க இருக்கறவன் எல்லாம் சும்.. மாதிரி

  இப்படி இவுன விடுற டகால்டியில மயங்கி போயி நம்ம சொந்தபந்தங்க.. ‘ஏம்பா நல்ல வேலை செஞ்சா சீக்கிரம் அமேரிக்கா அனுப்புவாங்களாம்.. நீ எப்ப போற’ன்னு கேக்கும் போது, நிசமாவே, மவனே நீ அடுத்தவாட்டி வா உன்ன பொலி போட்டுடறேன்னு ஒரு கோவம் வரத்தான் செய்யுது

  Blogeswari :
  //மெட்ராஸ் மாறிடுச்சு.. ஃப்ளைஓவர் , மால் ..”-ன்னு புளிச்ச விஷயத்தை அரைக்காதே//

  இந்த டயலாக் நான் கூட சொன்னேனே.. மூணு வருசத்துக்கப்புறம் உஸ்மான் ரோட்டை பார்த்ததும்..
  so, இத மட்டும் லிஸ்ட்டுல இருந்து எடுத்துடுங்க..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s