நாராயணமூர்த்தி நாடாள வந்தால் நாடு தாங்குமா?

திடீரென்று ஏதோ ஒரு ஆங்கிலத் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டு இருக்கும் போது, அங்கே கோட் சூட் அணிந்த கனவான்கள் நாலைந்து பேர் வட்டமாக அமர்ந்து, நாராயண மூர்த்தி, அடுத்த குடியரசுத் தலைவராக வரலாமா கூடாதா என்று விவாதம் செய்து கொண்டிருந்தார்கள். அவுட்லுக்கின் வினோத் மேத்தா தவிர மற்ற யாரையும் அடையாளம் தெரியவில்லை.விவாதத்தின் போக்கு, நாராயணமூர்த்தி அவர்களுக்குச் சாதகமாகவே இருந்தது. ஸ்க்ராலிலே, நாராயணமூர்த்தி, தலைவராக வருவதற்கு 48 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்திருந்தார்கள், பங்கு பெற்ற நேயர்கள்.

இந்த அபிப்ராயம் எங்கேயிருந்து துவங்கி இருக்கும் என்று புரியவில்லை. ஒரு வேளை, அவ்வப்போது, அரசாங்கத்தை விமர்சித்து அறிக்கை விடுகிறார் என்பதால் இருக்குமோ? அல்லது, இந்தியாவின் நம்பர் ஒன் நிறுவனத்தை வைத்து நடத்துகிறவருக்கு, இந்தியாவை கட்டிமேய்க்கத் தெரியாதா என்று ஊடகங்கள் நினைத்திருக்கலாம். அல்லது ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட்டாக இருந்ததும் ( இருந்ததாகச் சொன்னதும்), பின்னாளின் மனம் திருந்தி முதலாளியானதும், இந்து சமூகத்தைச் சேர்ந்தவராக இருப்பதும், காங்கிரஸ், வலது சாரி, இடது சாரி பெருந்தலைகளுக்கு ஆட்சேபம் தெரிவிக்க வகையில்லை என்பதாக இருக்குமோ? will you become a president ? என்று பிரணாய் ராய் கேட்ட கேள்வியை, ஊதி ஊதிப் பெருசாக்கி, இன்றைக்கு, அனேகமாக, அடுத்த ஜனாதிபதி நாராயண மூர்த்திதான் என்று நினைக்க வைத்த ஊடகங்களின் பலம், எனக்கு வியப்பு ஏற்படுத்தவில்லை, மாறாக அச்சத்தையே தருகிறது.

********

தனிப்பட்ட நோக்கில், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத எந்த அரசியல் பதவி மீதும் எனக்கு அவ்வளவாக மரியாதை இல்லை. குறிப்பாக, ஜனாதிபதி என்கிற ரப்பர்ஸ்டாப் பதவியில், யார் வந்தாலும் எனக்குப் பிரச்சனை இல்லை என்கிற போது, அப்பதவிக்கு நாராயணமூர்த்தி அவர்கள் தெரிவு செய்யப்பட்டால் மட்டும் என்ன பிரச்சனை? ஒன்று மில்லைதான்… ஆனால், அவரை முன்மொழிபவர்களும், வழிமொழிபவர்களும் அக்கருத்துக்கு ஆதரவாகச் சொல்லும் விஷயங்கள், சகிக்க முடியாதவையாகவும், பலநேரங்களில் அபத்தமாகவும் இருக்கின்றன.

*******

கற்பிதம் ஒன்று : நாராயண மூர்த்தி, சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர். அவர் வந்தால் நாட்டு மக்களுக்கு நல்லது.

உண்மை : குடியரசுத் தலைவர் பதவிக்கு யார் வந்தாலும், ஒன்றும் கழட்டமுடியாது. கையெழுத்துக்காக ஏதாவது காகிதம் வந்தால், அதிலுள்ள விஷயம் தனக்குப் பிடிக்கவில்லை என்றால், காலம் தாழ்த்தலாம். அவ்வளவே.. மற்றபடி, மத்திய அரசு சொல்வதைக் கேட்டு, அதன் படி நடக்க வேண்டும்.

கற்பிதம் இரண்டு : அவர் ஒரு மிகச் சிறந்த நிர்வாகி. அவரால் இந்தியாவை ஆள முடியாதா?

உண்மை : தான் உருவாக்கிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வருபவர்களை மட்டும், நியமித்து, வேலை வாங்கி, கட்டிமேய்ப்பதற்கும், இந்தியா போன்ற பன்முகத் தன்மை கொண்ட கும்பலை அவ்விதமாக கட்டி மேய்ப்பதற்கும் வேறுபாடுகள் உள்ளன. தன்னுடைய சட்டதிட்டத்துக்கு ஒத்துவராதவர்களை, தன் அதிகார எல்லையில் இருந்து தூக்கி எறிய முதலாளி நாராயணமூர்த்திக்கு உரிமை உண்டு. அந்த உரிமையை நாட்டின் தலைவருக்குக் கொடுக்க முடியுமா?

கற்பிதம் மூன்று : அவர் ஒரு மிகச் சிறந்த பிசினஸ்மேன். சில ஆயிரங்கள் சொச்சத்தில், நிறுவனத்தைத் துவக்கி, இப்பொது பல பிலியன் டாலர் மதிப்புள்ள நிறுவனமாக ஆக்கியவர். குடியரசுத் தலைவராக வந்தால், நாடு பொருளாதார ரீதியில் முன்னேறும்.

உண்மை : பொருளாதாரக் கொள்கைகளுக்கும் குடியரசுத் தலைவரின் அதிகாரத்துக்கும் யாதொரு தொடர்புமில்லை. அவர் மிகச் சிறந்த பிசினஸ்மேனா என்பதிலேயே,எனக்குச் சந்தேகங்கள் உண்டு. அப்படியே இருந்தாலும், அது, குடியரசுத் தலைவர் தெரிவுக்கான காரணியாக இருக்க முடியாது.

கற்பிதம் நான்கு : அவர் ரொம்ப நல்லவர், நேர்மையானவர்.

உண்மை : இருக்கலாம். எனக்குத் தெரியாது.

கற்பிதம் ஐந்து : நாரயணமூர்த்திதான், இந்திய ஐடி துறை வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தவர். இன்றைக்கு நாடே சுபிட்சமாக இருப்பது ஐடி துறையின் அசுர வளர்ச்சியால் தான். அவரை, நாட்டின் தலைவர் ஆக்கினால் தான் என்ன?

உண்மை : ஐடி துறையின் வளர்ச்சிக்கு அவர்தான் காரணம் என்பது போன்ற அபத்தம் வேறு எதுவும் இல்லை. அவர் ஒரு பிரைவேட் என்டர்பிரைஸின் தலைவர். தன் நிறுவனத்துக்கும், பங்குதாரர்களுக்கும் என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்து, லாபம் ஈட்டினார். தன் நிறுவனத்துக்கு அப்பால், தேசிய அளவில் ஐடி துறையின் வளர்ச்சிக்கு அவரது பங்களிப்பு என்ன என்பது கேள்விக்குரியது. தனியார் நிறுவனங்களில் இடஒதுக்கீடு, ஐஐஎம் /ஐஐடி போன்ற உயர்பீட கல்வி நிலையங்களில், இட ஒதுக்கீடு குறித்த அவரது கருத்துக்கள், அபத்தமானவை. எல்லாமே நல்ல விஷயம் தான் என்று நேராக, மேம்போக்காக யோசிக்கும் அப்துல் கலாம் போன்றவர்களை விட, கையில் அதிகாரம் கிடைத்தால், ஜஸ்ட் லைக் தட், சரி செய்துவிடலாம் என்று நினைக்கும் நாராயணமூர்த்தி போன்றவர்கள் ஆபத்தானவர்கள். இந்தியா , இன்ஃபோசிஸ் நிறுவனம் போல ஒற்றைப்படைத் தன்மை கொண்டதல்ல.

கற்பிதம் ஆறு : நாராயணமூர்த்தி போல ஒருவர் நாட்டின் தலைவராக வந்தால், உலக அரங்கில், நம் நாட்டுக்கு மரியாதை கிடைக்கும்.

உண்மை : நல்லா வருது வாயிலே…….

11 thoughts on “நாராயணமூர்த்தி நாடாள வந்தால் நாடு தாங்குமா?

 1. கலக்கல் பதிவு ப்ரகாஷ். வர வர இந்த மீடியாகாரங்க அட்டூழியம் தாங்க முடியலை. விட்டா நாரயணமூர்த்தியை ஜனாதிபதி ஆக்கிட்டுதான் மறுவேலை பார்ப்பாங்க போல இருக்கு. என்னவோ போங்க.

 2. நல்ல பதிவு பிரகாஷ்.

  கடைசில நாராயண மூர்த்தி நமோ நமஹானு ஆக்கிடுவாங்க போல இருக்கு.

 3. நீங்க சொல்றது எல்லாம் சரி தான்

  ஆனா நாராயண மூர்த்தியை குடியரசு தலைவரா ஆக்காம

  விட மாட்டாங்க போல இருக்கே ஒரு சில தொ(ல்)லைக் காட்சிகள்

 4. அவுங்க என்ன செய்யுவாங்க, நகர்ப்புற படித்த நடுத்தர வாசகர்க்ளுக்கான மன’அரிப்பை’ சொறிஞ்சு விட்டுத்தான் அவுங்க அவுங்க ரேட்டிங்கை நிலைநிறுத்த வேண்டி இருக்கு.. பாவம்.. நிசாமாலுமே அஃப் தி ஸ்க்ரீன் ப்ரணாய்ராய் கிட்ட இந்த கேள்விய கேட்டா, அவரும் நீங்க சொன்ன மாதிரி ‘நல்லா வருது வாயிலே…….’ன்னு சொல்லலாம்?? 🙂

  இந்த ஐஸ் – அபி சமாச்சாரம் மூணு டீவியில லைவ் காட்னாங்களே பார்த்தீங்களா?? டெலிவரி வேற.. ஒருத்தனையும் காணோமேன்னு நான் பதட்டமா தேடுனா.. கான்பரன்ஸ் ரூம் டீவியில லைவ்’வா ரெண்டு பேரு வூட்டு வாசலையும் காட்றாங்க, நம்ம ‘தூண்’கள் அதைய குர்குர்ரே சாப்பிட்டுட்டு கூட்டமா உக்காந்து பார்த்திட்டிருக்குதுக.. நமக்கு தான் ‘நல்லா வந்துச்சு வாயுல. ‘
  வந்து வேலைய பாருங்கம்மான்னு சொன்னா ‘இருப்பா, என்ன கலர் சேலைன்னு பார்த்துட்டு வர்றேன்’னு சொல்லுதுக.. என்ன செய்வீங்க???

 5. //ஐடி துறையின் வளர்ச்சிக்கு அவர்தான் காரணம் என்பது போன்ற அபத்தம் வேறு எதுவும் இல்லை//

  நச் !

 6. அதும் பத்தாம ஐஷ்யும் அபிசேக்கும் எங்க honey moon போலாம்னு காலையில ஒரு டப்பா FM(Hello FM)ல SMS Contest வேற

  அதும் போதாதுன்னு suppose தமிழ் நாட்டுக்கு அவங்க வந்தா எங்க வருவாங்க ஏன்னு கேள்வி வேற

  கடவுளே எங்க போயி முட்டிகிறதுன்னு தெரியல

 7. […] Posted by Visitor on April 23rd, 2007 பிரகாஸு கேக்குறார். என்ன சார், இது நியாயமான கேள்வியா? படிச்சுட்டு நீங்களே முடிவு பண்ணுங்க… ….. இந்தியாவின் நம்பர் ஒன் நிறுவனத்த… […]

 8. செந்தில், நிர்மல், பிரியா, அமாம் சோப்பு [ நேர்மைன்னா அமாம் தானே? :-)] நன்றி

 9. கொங்கு ராசா : ‘லைவ் ஃப்ரம் பிரதீக்ஷா’ ன்னாலே ப்ளட் பிரஷர் ரொம்ப ஏறிப்போய், அந்தப் பக்கமே போகாமல், சன் மீசிக் பார்த்துட்டு இருந்தேன்.. எதுக்கு இவ்ளோ பரபரப்புன்னே புரியலை (:

  சேவியர் : நன்றி.

  கதம்பமாலை : பரிந்துரைக்கு நன்றி.

 10. Mannikkanum prakash for english. NM is useless. If we pretty well know that the post is a pure rubber stamp post, i sincerely support our ex CM O.Paneer Selvam for the same post. He carries better resume for being a rubber stamp and can do the job very well i guess. In any case, he has to go with either one of the “ammas” either Jaya or Soniya. Ithu eppidi irukku ? [Patha vechutiyae paratai ;)]

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s