uLLivayan perungaya dappa

ரிச்மண்ட் தமிழ்ச் சங்கர் ரிச்மண்ட் சங்கத் தமிழர் மண்டையை பிச்சுக் கொண்டிருக்கிறார் என்று இப்போதுதான் தெரிந்தது.

பெருங்காய டப்பா யார் என்று சங்கத் தமிழர் போலவே எனக்கும் தெரியாது. டப்பாவே சொன்னது இது

சாந்த சொரூபன் தகர டப்பா (Tin Drum) என்கிற மொழியியல் அறிஞரைத் தெரியாதவர்கள் தமிழ் இணைய உலகில் வெகுசிலரே எனலாம். அவர் எழுதுவதை நிறுத்தி ரொம்ப காலம் ஆகிறது என்பது தெரிந்த விசயம் தான்.

ஆனால், உங்களை எல்லாம் மகிழ்விக்க தமிழ்நெட்டில் இப்போது புதிதாக உள்ளிவாயன் பெருங்காய டப்பா (Hing Drum) என்கிற பாபாஜி அவர்கள் எழுந்தருளியிருக்கின்றார். அவரது வருகை நாம் எல்லோரும் பெற்ற பெரும்பாக்கியமே எனலாம்.

பொதுவாக, துணுக்குப் படிப்பவர்கள், ஒருவித மெத்தனமான ரிலாக்ஸ்டு மனதோடு படிப்பார்கள். அவர்களே, கவிதை என்று ஒன்றைக் கையில் கொடுத்தால், ஏதோ அட்டென்ஷனில் தேசிய கீதத்தைக் கேட்பதுபோல, பீடத்தில் வைத்து சூடத்தைக் கொளுத்தாத குறையாக, பயபக்தியோடு ரொம்பவே மரியாதையோடு படிப்பார்கள். இது சகஜம். மரபுக்கும் கவித்துவத்திற்கும் நாம் கொடுக்கும் மரியாதையின் அடையாளமே அது.

பெருங்காய டப்பாவின் கவிதைகள், தமிழினத்தை சீர்திருத்துவதற்காக எழுதப்பட்டவை என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. எனவே, பெருங்காய டப்பாவின் கவிதைகளை படிப்பதற்கு முன், “மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்” என்று சொல்லிவிட்டு, துணுக்குப் படிப்பதுபோல, ஜாலியாக ரசித்துப்படியுங்கள். அதில் வரும் சத்தமும் சந்தமும் தானாகவே உங்களை ஆட்கொள்ளும்.

பெருங்காய டப்பாவின் மூன்று கவிதைகளை இன்று அனுப்புகிறேன். மற்றவற்றை
இன்னொரு நாள் அனுப்புகிறேன். உங்களது விமரிசனங்கள் எதனையும் தாங்கும் வலிமை பெருங்காய டப்பாவுக்கு உண்டு என்று நம்பலாம்.”வாசமில்லா டப்பாயிது… வசந்தத்தைத் தேடுது…” என்று பாடினாலும் அசமந்தமாகக் கேட்டுக்கொள்ளும்.

எதையும் தாங்கும் இதயம்கொண்ட டப்பாயிது;
எளிதில் நொறுங்கிப் போகா டப்பாயிது;
வெள்ளத்தால் அழியாத, வெந்தணலால் வேகாத,
மோப்பக் குழையா பெருங்காய டப்பாவே!

மேற்படி விஷயம்,காப்பிக் கடையில் நான்கு வருடங்களுக்கு முன்பு சொன்னது …

*************

டப்பாவின் மற்றொரு கவிதை

உலகமாதா வாத்து (டெடிகேட்டட் டு ஆல் திண்ணை ரைட்டர்ஸ்)
——————————————————

யுகம் புரண்ட புருஷன் அவம் திரண்ட கருடன்
சூக்மதாரி அடங்காப்பிடாரி இயமம் நியமம்
சோதிடம் சொல்லா நித்ய ஞான கோவணதாரி
காட்டாரி மலையாளபகவதி வேதசகாயி
சின்னக்கருப்பி மஞ்சுள நாட்சி
சரணவ மால ராஜநாயகி அம்மா நரநர
பாவி கந்த சிவம் இடப்பாகி ஜிலேபி
குலேபகாவலி ஆதரி நீயெனை
அம்மா படிந்தேன் சரணம்
ஹரி போல் ராம் ராம்
கோவண்ணப்பால் ராம நமோ நமோ
மலமறு ராட்ஸசி சூத்திரதாரிதன்
சூல்தரு மோகி சரவணத்தாயே
ஜெய ஜெய ஜெய ஜெய
உலகம் வாழ அருள்பொழி மாதா!
___

உள்ளிவாயன் பெருங்காயடப்பா.

One thought on “uLLivayan perungaya dappa

  1. தலீவா டைம் பாத்து எட்து வுட்றே. மூக்கு வேறே முந்தாநேத்து வெச்ச மீங்கொழம்பயே ஊத்திக்கிட்டிருக்கு. உள்ளிவாயன் பெருங்காயடப்பா வேறெ எங்கினியோ ரெஸ்ட்ராண்டுல யாருக்கோ கிண்டின அல்வாவ சாந்தசொரூபன் தகரடப்பா ரங்கபாஷ்யம் காப்பிகபேயாண்டே வம்புக்கு வித்துச்சுன்னு நெஜமாலுமே தெர்யாதா, நய்னா? நக்கீரைகிராக்கியே நன்றாக கண்ணைத் தொறந்து பாரு!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s