Blogs in Tamil, A Letter dated May 14, 2003

ராயர் காபி க்ளப் குழுமத்தில், மாலன் அவர்கள் நான்கு வருடங்களுக்கு முன்பு எழுதிய மடல்,

அன்பு நண்பர்களுக்கு,

இணையத்தில் உலாவுகிறவர்களில் பலர், Blog என்பதைப்பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். நம் எண்ணங்களைப் பதிந்து கொள்ள, பகிர்ந்து கொள்ள, பிரசுரிக்கிற உதவும் இணைய வாய்ப்பு அது. ஆங்கிலத்தில் ஆயிரக்கணக்கில் Blogகள் இருக்கின்றன. தமிழில் நான் அறிந்த வரை அதிகம் இல்லை.

தமிழில் Blogகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். இது வரை தமிழில் இரண்டு Blogகளை வெவ்வேறு தளங்களில் உருவாக்கியுள்ளேன்.ஒன்று என் எழுத்துக்களை வெளியிடும் Blog.மற்றொன்று தமிழ் ஹைக்கூக்களை வெளியிட.

அவை:

http://maalanblog.blogspot.com
http://tamilhaiku.rediffblogs.com

கணினி உலகைச் சேர்ந்த சிலர் இந்த Blog களைப் படித்து கருத்துக்கள் அனுப்பியுள்ளார்கள். ஆங்கிலththil Blog ஒன்றை வெளியிட்டு வரும் நானறியாத கிங்ஸ்லி என்ற நண்பர் இந்த Blogகளைப் பார்த்து உற்சாகம் அடைந்து அவரது Blogl தமிழில் எழுதிப்பார்த்து இருக்கிறார்.

என்றாலும் பலர் இந்த Blogகளை படிக்க முடியவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

Blogல் ஆர்வம் உள்ள நண்பர்கள் இந்த இரு முகவரிகளுக்கும் சென்று அவற்றை வாசிக்க முடிகிறதா என்று தெரிவித்தால், தமிழில் Blogகள் உருவாக்கும் முயற்சியைத் தொடர இயலும். தொழில் நுட்ப வல்லுநர்கள் பிரசினைக்குத் தீர்வுகளையும் சொல்ல முன்வந்தால் மகிழ்ச்சி அடைவேன். இணையத்தின் எல்லா நவீன அம்சங்களுக்கும் நாம் தமிழை எடுத்துச் சென்று தமிழ் எந்தவகையிலும் எவருக்கும் சளைத்ததல்ல என்பதை நிறுவக் கடமைப்பட்டுள்ளோம்.

நன்றி

இந்த நான்கு வருடங்களில் எத்தனை மாற்றம்? பிரமிப்பாக இருக்கிறது

2 thoughts on “Blogs in Tamil, A Letter dated May 14, 2003

  1. !!!!

    முக்கியமான கடிதம். பகிர்ந்ததற்கு நன்றி. இப்படி வளரும் என்று மாலன் நினைத்திருப்பாரா !! தமிழ்நாட்டில் இணைய அணுக்கம் ஊடுறுவும்போது இன்னும் அதிக வளர்ச்சியை தமிழ்ப் பதிவுலகம் காணும்

  2. ரவிசங்கர், இந்த மடலை ஒட்டி எழுந்த விவாதங்கள், அதை விட சுவாரசியம். நான் கூட, வலைப்பதிவெல்லாம் வேண்டாத வேலைன்னு நினைச்சு எதிர்ப்புக் குரலெல்லாம் கொடுத்திருக்கேன்🙂 அதல்லாம் ஒரு காலம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s