To Suresh, Hemalatha, Kalaivani & Vinod

ஒரு முன்னாள் மாணவனிடம் இருந்து

* இந்நேரம் தமிழ் ஆங்கிலம் தேர்வு முடிஞ்சு, கணக்கு, வேதியியல் பாடங்களுக்குத் தயார் பண்ணிட்டு இருப்பீங்க.. கவனமாப் படிங்க, ஆனால், உடலையும் மனசையும் ரொம்ப வருத்திகிட்டு, தேர்வு எழுத முடியாத படிக்கு அதிகமா உழைக்க வேணாம். அப்பறம் உள்ளதும் போயிரும்.

* பொறியியல் கல்லூரியில் நுழையறதுக்கு அடிப்படையான மதிப்பெண்கள் எடுத்தாலே போதும். இப்பல்லாம், சீட் எண்ணிக்கை அதிகம். ரொம்பவெல்லாம் முட்டி மோத வேண்டிய அவசியம் கிடையாது. மேலும், இப்ப எந்த பொறியியல் கல்லூரியிலே படிச்சாலும், பட்டம் வழங்கறது அண்ணா பல்கலைக்கழகம் தான்.

* நாங்க படிக்கற காலத்திலே, பொறியியல் இல்லாட்டி மருத்துவம் தான் மோட்சத்துக்கு ஒரே வழி. இது ரெண்டுல ஏதாவது ஒண்ணுல சேரலைன்னால், பெற்றோர்கள் ரொம்ப நொந்து போவாங்க.. ( நாங்க அதையல்லாம் கண்டுக்காமல், லோக்கல் கல்லூரியிலே பொருளாதாரம் படிச்சுட்டு ஊர் சுத்தி இப்ப உருப்பட்டுட்டோம்னு வைங்க). ஆனால், இந்த காலத்துல நிலைமை வேற. விளம்பரத் துறை, மாறுகடையியல் ( marketing), சில்லறை விற்பனை, எழுத்து, பதிப்புத் துறை, காப்பீட்டுத் துறை, சமையல் கலை, நடிப்பு, ன்னு ஏகப்பட்ட சம்பாதிக்கும் வழிகள் இருக்கின்றன. அதனாலே, பொறியியல் இடம் கிடைக்கலன்னா, ஒண்ணும் குடி முழுகிடாது.

* ஐஐடி மீது ரொம்ப நம்பிக்கை வைக்காதீங்க. அதல்லாம் கொஞ்சம் கஷ்டம். அதுவும் இல்லாமல், பாட திட்ட அளவிலே, பிற கல்லூரிகளுக்கும், ஐஐடிக்கும் அதிக வேறுபாடு இல்லை. நம்பலைன்னா, ஒரு விஷயம் சொல்றேன் கேளுங்க..’ கடந்த ஆறுமாச ஹிந்து நாளிதழை எடுத்துக்கங்க. அதிலே பொறியியல் கல்லூரி மாணவர்கள் பற்றி அடிக்கடி செய்தி வரும். அதாவது, “இந்த கருத்தரங்கத்திலே பேசினார், அந்தப் போட்டியிலே வெற்றிபெற்றார், புதுசாக ஒரு கருவியைக் கண்டுபிடித்தார், ஸ்டூடண்ட் எக்ஸ்சேஞ் திட்டத்தில் அமெரிக்கா செல்கிறார்..” இது போல செய்திகளில் அடிபடுகிறவர்க மாணவர்களில் 90 சதவீதம் பேர், சென்னை நகரைச் சுற்றி இருக்கும் தனியார்
பொறியியல் கல்லூரியில் படிக்கிறவர்கள் தான். அதனாலே, எங்க படிக்கறோங்கறது முக்கியம் இல்லை. எப்படிப் படிக்கறோம்ங்கறது. அதுவுமில்லாமல், ஐஐடிலே படிச்சாத்தான் அமெரிக்கா போகலாம்னு உங்க நைனா ( வினோத், உங்கப்பாருதான்) பேத்திட்டு இருக்கார். அந்த காலமெல்லாம் மலையேறிப் போச்சுன்னு சொல்லு. இல்லாட்டி நானே நேர்ல பாத்து சொல்றேன்.

* ஹேமலதா, சரபேசுவரன் கோயிலுக்கு தினமும் போறதுக்கும், அடுத்த நாள் தேர்விலே கேள்விகள் எளிமையாக இருக்கிறதுக்கும் எந்தத் தொடர்புமில்லை. சத்தியமா… அதனாலே, முந்தின நாள் கோயிலுக்குப் போக
முடியலங்கறதுக்காக, டென்ஷன் ஆகறது ரொம்ப தப்பு.

* எளிமையாக இருக்கிற கேள்விகளை எல்லாம் முதல்ல எழுதணும்னு சொல்றதுக்கு ஒரு காரணம் இருக்கு. ஏன்னா அதைத் தான் வேகமாக எழுத முடியும். மிச்சம் இருக்கிற நேரத்துல, விடை தெரியாத கேள்விகளை ஊகிச்ச்சு எழுதலாம்.

* திருட்டுத்தனமெல்லாம் பண்ண வேணாம் ராசா. அதை எல்லாம் கல்லூரியிலே வெச்சுக்கலாம். இதிலே மாட்டினா அவ்ளோதான்.டங்குவார் கிழிஞ்சுரும்.

* டீவி பாருங்க… ஆனால், படிச்சதல்லாம் மறந்து போகிற அளவுக்கு, மூழ்கிடாதீங்க… கலை, பருத்திவீரன் கேன் வெய்ட். பசங்களா, நம்ப மாட்டீங்க… உங்களை மாதிரி புள்ளைங்களுக்காகத்தான், சன் டீவி ‘ உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக’ வகைப் படங்களை எல்லாம் மூட்டை கட்டி வெச்சுட்டு, ‘ அன்பேவா, காதலிக்க நேரமில்லை போன்ற பழைய படங்களை மட்டுமே இந்த மார்ச் மாசம் முழுசும் போடறாங்க.. அதுக்கு கொஞ்சம் மரியாதை குடுங்க

* எல்லாம் ஒழுங்கா முடிச்சுட்டு வெற்றிகரமாகத் திரும்பி வாங்க, ‘சிவாஜி’க்கு சொல்லி வெச்சிருக்கேன். first day first show,.

All the Best…

6 thoughts on “To Suresh, Hemalatha, Kalaivani & Vinod

 1. ஞாபகம் வருதே !! ஞாபகம் வருதே !!.பரிட்சை சமயதத்ில் பயந்தது,படித்தது எல்லாம் ஞாபகம் வருதே !!. கலக்குங்க பசங்களா!!
  Good Luck!!
  ..Ag

 2. கலக்கல் … 🙂

  நம்ம பங்குக்கு … 😉

  சுரேஷு, எப்பவுமே நம்மை படுத்தறதுக்கே மார்ச் மாசத்துல முக்கியமான கிரிக்கெட் மேட்சுல்லாம் வரும். இண்டியன் டீமும் நம்ம பரிட்சை முடியறவரைக்கும் நல்ல விளையாடி நம்ம வாழ்க்கையிலும் விளையாடுவாங்க … ரிசல்ட் தெரிஞ்ச வேர்ல்டு கப்பை சண்டை போட்டு பார்த்துட்டு நம்ம ரிசல்ட் அன்னிக்கு பீல் ஆகாத !!!

 3. […] To Suresh, Hemalatha, Kalaivani & Vinod நாங்க படிக்கற காலத்திலே, பொறியியல் இல்லாட்டி மருத்துவம் தான் மோட்சத்துக்கு ஒரே வழி. இது ரெண்டுல ஏதாவது ஒண்ணுல சேரலைன்னால், பெற்றோர்கள் ரொம்ப நொந்து போவாங்க.. ( நாங்க அதையல்லாம் கண்டுக்காமல், லோக்கல் கல்லூரியிலே பொருளாதாரம் படிச்சுட்டு ஊர் சுத்தி இப்ப உருப்பட்டுட்டோம்னு வைங்க). ஆனால், இந்த காலத்துல நிலைமை வேற. விளம்பரத் துறை, மாறுகடையியல் ( marketing), சில்லறை விற்பனை, எழுத்து, பதிப்புத் துறை, காப்பீட்டுத் துறை, சமையல் கலை, நடிப்பு, ன்னு ஏகப்பட்ட சம்பாதிக்கும் வழிகள் இருக்கின்றன. அதனாலே, பொறியியல் இடம் கிடைக்கலன்னா, ஒண்ணும் குடி முழுகிடாது. […]

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s