Chennai Sangamam Scandal – Jaya TV

நேற்று இரவு, சென்னை சங்கமம் பற்றிய ஒரு செய்தித் தொகுப்பு ஜெயா டிவியில் வெளியானது.

தமிழ்ப் பண்பாடு, தமிழர்களின் நாட்டுப்புறக் கலைகள் ஆகியவற்றை அரங்கேற்றும் விதமாக கடந்த வாரம் நடந்த சென்னை சங்கமம் நிகழ்ச்சியின் பின்புலத்தில், வெளிவராத தகவல்களும் மர்மங்களும் இருக்கின்றன என்று ஜெயா தொலைக்காட்சியின் புலனாய்வுக் குழு(?) , ஒரு சிறப்புச் செய்தித் தொகுப்பை அளித்தது. அது முன்வைக்கும் குற்றச்சாட்டுகள்,

* சென்னை சங்கமம், இளவரசி கனிமொழியை, மன்னர் கருணாநிதி , அரசியலுக்குக் கொண்டு வரும் நிகழ்வு. ( அப்படித்தான் ஜெயாவிலே சொன்னார்கள்)

* இந்த நிகழ்ச்சியை முன்நின்று நடத்திய தமிழ் மையம் என்கிற அமைப்பின் தலைவரான ஜெகத் கஸ்பாருக்கும், தமிழ் ஈழ விடுதலைக்கு, பணம் சேகரிக்கும் ஒரு வெளிநாட்டு அமைப்பின் உறுப்பினர் ஒருவருக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

* இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு ஆகும் செலவுக்கு, உச்சவரம்பு இல்லை என்று, விழா நடத்துனர்களுக்கு ஆதரவாக அரசாணை பிறப்பித்தது.

சோ-வும், ஞாநியும் , குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாகப் பேசினார்கள். சோ- வழக்கம் போல ஜால்ரா அடித்தார் என்றாலும், ஞாநி, நிகழ்ச்சியை நடத்த, தமிழ்மையம் என்கிற அமைப்பைத் தன்னிச்சயாகத் தேர்வு செய்த முறை பற்றி மட்டுமே பேசினார். தமிழகத்தில், நாட்டுப்புறக் கலைகள் மீது ஈடுபாடு, செயல்பாடு கொண்ட அமைப்புகள் ஏராளமாக இருக்கும் போது, கனிமொழி உறுப்பினராக இருக்கும் தமிழ்மையத்தைத் தேர்வு செய்தது எப்படி என்று கேட்டார்.

என் பார்வையில்…. ஜெகத் கஸ்பாருக்குத் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருக்கிறது என்று நிறுவ அவர்கள் செய்த முயற்சி ரொம்ப காமெடியாக இருந்தது. எங்கெஙகோ, சுற்றி வளைத்துச் சொன்னது அபத்தமாக இருந்தது. [ அப்படிப் பார்த்தால், ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் கைதான புகைப்படக் கலைஞர் சுபா.சுந்தரம், சோவுக்கு, ஒரு காலத்தில் நண்பர். துக்ளக்கில் புகைப்படக் கலைஞராக இருந்திருக்கிறார். சோ இயக்கத்தில் வெளி வந்த சில பழைய திரைப்படங்களில், டைட்டில் கார்டில் ‘ஸ்டில்ஸ் : சுபா. சுந்தரம்” என்றும் பார்த்த நினைவு. அதை வைத்து, சோவுக்கு தனி ஈழப் போராளிகளுடன் தொடர்பு உண்டு என்று சொன்னால், சோவின் அரசியலை வெறுப்பவர்கள், ஒரு வேடிக்கைக்காகக் கூட ஓத்துக் கொள்ள மாட்டார்கள்.]

மாநிலம் தழுவிய, அரசுப் பணம் புழங்கும் விழாவில், செலவினங்கள் குறித்த சர்ச்சைகள் எழுவது இயல்பு. முறையாகச் செலவு செய்யப்படவில்லை என்ற சந்தேகம் இருந்து, அதற்காக ‘புலனாய்வுக் குழு’ வேலை செய்து, ஆதாரங்களைக் காட்டி இருந்தாலாவது உருப்படியாக இருந்திருக்கும்.

அத உட்டுட்டு….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s