பட்டியல் – Review


ராம்கோபால் வர்மா ஸ்டைலில் வந்திருக்கும் ஒரு தமிழ்த் திரைப்படம். ( ராம்கோபால் வர்மாவின் எந்தப் பட ஸ்டைலில் என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.)

சித்திரம் பேசுதடி படத்துக்கும் பிறகு, சென்னையின் நிழலாளிகள் பற்றிய படம். களமும், மாந்தர்களும் எத்தனை தூரம் அசலுக்கு அருகிலே இருக்கிறதா என்பதை நாராயண் போன்றவர்கள் சொல்லலாம்.

கதை?

சின்ன வயசில் இருந்தே, சென்னைக் குப்பத்தில் பிறந்து வளர்ந்து, ‘போட்டுத் தள்ளுவதையே’ தொழிலாகக் கொண்ட இரு நண்பர்கள் கோசி ( ஆர்யா) செல்வா ( பரத் ). அவர்கள் வாழ்க்கையில் நடக்கும் நம்பவங்களை ஒன்றன் பின் ஒன்றாக பட்டியல் இட்டு காட்டுவதுதான் பட்டியல். கோசி யை இதற்கு முன்பே, அறிந்தும் அறியாமலும் படத்தில் பார்த்திருக்கிறோம். அதே வசன உச்சரிப்பு, அதே குணச்சித்திரம். தண்ணி அடித்து விட்டு புலம்பும் போதும், போட்டுத் தள்ளியவன் சவ ஊர்வலத்திலேயே குத்தாட்டம் போடும் போது, மேலே வந்து விழும் நாயகி ( பத்மபிரியா) மீது எரிந்து விழும்போதும், பின்னர் அவளையே காதலிக்கும் போதும் நன்றாகவே செய்திருக்கிறார்.

செல்வா(பரத்) பாத்திரம் புதுசு. வாய் பேசாத, காது கேளாதவர். ஓட்டல் ரூமில் கதவைத் தட்டி, உள்ளே வருபவரை, ஒரே குத்தில் கொலை செய்து, வாஷ் பேசினில் நிதானமாக கத்தியை கழுவித் துடைத்து, வெளியேறுவதற்கு முன்னர், தொலைக்காட்சியில் சானல் மாற்றி, கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு வருமளவுக்கு அசால்ட்டனவர். மருந்துக் கடையில் வேலை பார்க்கும் நாயகி மீது ( பூஜா ) மீது காதல் கொள்வதும், பின்னர் ரௌடி என்று தெரிந்ததும் வெறுத்து ஒதுக்கும் போது, அவருக்குப் புரிய வைக்க முயற்சி செய்யும் காட்சியிலும் அவரது நடிப்பு நன்றாக இருக்கிறது. ஒரு பெரிய புள்ளியை போட்டுத் தள்ளும் அசைன்மெண்ட்டில், இறுதியில் என்ன நடக்கிறது என்பதுதான் உச்சகட்டம்.

முகம் தெரியாத நிழலாளிகளின் தேவைகள், சந்தோஷங்கள், கோபதாபங்கள், உணர்ச்சிகளை நன்றாக உள்வாங்கி நடித்திருக்கிறார்கள். பரத், ஆர்யா, பத்மபிரியா ஆகிய மூவருக்குமான உறவு நன்றாக வெளிப்பட்டிருக்கிறது. ( இன்னும் நன்றாக இருந்திருக்கலாம் என்ற போதும்)

இருவருக்கும் தொடர்ந்து வேலை கொடுக்கும் கொச்சின் ஹனீபா, சத்யா படத்தின் ஜனகராஜை நினைவு படுத்துகிறார். பல காட்சிகள், சத்யாவை, பிதாமகனை, நினைவு படுத்துகின்றன.

அறிந்தும் அறியாமலும் படத்தில் இருந்த மாதிரியான pleasant surprise எதுவும் இந்தப் படத்தில் இல்லை. அதுதான் பெரிய குறை. எல்லாம் எதிர்பார்த்த மாதிரியே நடக்கின்றன.

விஷ்ணுவர்த்தன் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கவேண்டும்.

11 thoughts on “பட்டியல் – Review

 1. இன்னாபா நீ இம்புட்டி எளுதிகீறே ம்யூஸிக் எப்புடிக்கீது, பேக்ரவுண்ட்ஸ் இல்லாம் நல்லா வந்துகிதா, பொறவால யுவன் ஸங்கரு ம்யூஸிக் பாட அவுரு ராசா பாடிக்றது இன்னாமா கீது இதெல்லாம் எளுதவேயில்ல.

  புதுப்பேட்டய பட்டியலு முந்திகினதால புதுப்பேட்ட கலீஸன் காலியாவுமா?

 2. இப்பல்லாம் ரெளடீ படங்களாகவே வருது… ஊருக்கு வரவே பயமா இருக்குது 🙂

 3. ப்ரீவ்யூ ஷோ? சுடச்சுட விமர்சனம் (‘நம்ம காட்டுல் மழ பெய்யுது’ பாடலைப் பற்றி ஒண்ணுமே சொல்லலியே… யாருப்பா ஆடறது?)

 4. ஒரு அவசர பின்னூட்டம்: ரவுடிக்களை நாயகர்களாகக் காட்டும் கருத்து சுதந்திரம் பாதிப்பு என்ற ஜல்லிகளையெல்லாம் மீறி திரைப்படங்களை சட்ட ரீதியிலாவது தற்காலிகமாக தடை செய்ய வேண்டும் என்று நம்புகிறேன். இள மனங்களில் (குறிப்பாக சேரிகளில் வாழும் இளைஞர்கள்) இந்த பட பாத்திரங்கள் ஏற்படுத்தும் வசீகரம் சமூக வன்முறையை அதிகரிக்கும் என்றும் தோன்றுகிறது.

  = Suresh kannan

 5. ம்ஹூம், “ஒயிட் எலிபெண்ட்ஸ்” படத்துக்காக தான் நான் வெயிடிங்.

  சுரேஷ் அண்ணாச்சி, இந்த மாதிரி படங்களைப் பார்த்து பாதிப்பு என்பதெல்லாம், 1980கள் சமாச்சாரம். இப்ப அவனவன் தெளிவா இருக்கான்.

 6. * பாட்டு எப்படி இருக்கு? சூப்பரா?

  * அடிக்கடி வலைப்பதியக் கூடாதா?

  * < spoilers ahead > closing tag போடாததால் என் கமெண்ட் கடைசியில் நானே போட்டுவிடுகிறேன்.

  * இந்தப் பதிவிற்கான ‘வெங்கட்’ என்பவரது கமெண்ட் கனடா வெங்கட் எழுதியதா? ப்ரொஃபைலில் டொமெஸ்டிகேட்டட் ஆனியன் தளத்தைதான் காண்பிக்கிறது. ஆனால் கமெண்ட் எழுதிய விதம் நம்பமுடிய வில்லை…வில்லை…வில்லை…

  </ spoilers ahead >

  சு. க்ருபா ஷங்கர்

 7. சுரேஷ், என்னைப் பொறுத்தவரை, திரைப்படம் சமூக வன்முறையை வளர்க்கத் தேவையில்லை, ஒரு நடை அரசு அலுவலகங்களுக்கு சிபாரிசு இல்லாமல் சென்று வந்தாலே போதும்.

 8. இன்றைய பெரும்பாலான குற்றவாளிகளின் வயது 16ல் இருந்து 25 வயதிற்குள்தான் இருக்கிறது. அவர்களின் சூழ்நிலையும் வளர்ப்பு முறையும் பிரதான காரணங்களென்றாலும், இன்றைய திரைப்படங்களில் காணப்படும் அதீத வன்முறைக்காட்சிகளும் இதற்கு உப காரணிகளாகின்றன. இயன்றால் இதைப் பற்றி தனியாக ஒரு பதிவிட முயல்கிறேன்.

  //படங்களைப் பார்த்து பாதிப்பு என்பதெல்லாம், 1980கள் சமாச்சாரம். இப்ப அவனவன் தெளிவா இருக்கான். //

  என்ன சொல்கிறீர்கள் நாராயண்? ஒரு குற்றத்தை செய்துவிட்டு சட்டத்தின் பிடியிலிருந்து சாமர்த்தியமாக தப்பிக்கும் தெளிவா?

 9. //இள மனங்களில் (குறிப்பாக சேரிகளில் வாழும் இளைஞர்கள்) இந்த பட பாத்திரங்கள் ஏற்படுத்தும் வசீகரம் சமூக வன்முறையை அதிகரிக்கும் என்றும் தோன்றுகிறது.//

  சுரேஷ், வன்முறை அதிகரிக்கும் என்பது எத்தனை தூரம் சாத்தியம் என்று தெரியவில்லை. ஏனென்றால் இந்தப் படத்தில் புதிதாக ஒரு வழியை இளைஞர்களுக்கு இயக்குநர் காட்டிவிடவில்லை. நாட்டில் பல இடங்களில் சர்வசாதாரணமாக நடப்பதை தான் காட்டி இருக்கிறார்.

  சுலபமாக காசு சம்பாதிக்கலாம் என்ற ஒரே காரணத்திற்காக பின்னர் வரும் விபரீதங்களை நினைக்காமல் அரிவாள் தூக்கும் பல பதின்வயதினரை நான் நேரடியாக பார்த்திருக்கிறேன். காசு மட்டுமல்லாது கொஞ்சம் தாதா இமேஜும் ஒரு காரணம். ஆனால் முடிவு எப்போதுமே இந்தப் படத்தில் காட்டி இருப்பது போல தான் (கத்தி எடுத்தவன் கத்தியால தான்).

 10. ப்ரீவ்யூ ஷோ? சுடச்சுட விமர்சனம் (‘நம்ம காட்டுல் மழ பெய்யுது’ பாடலைப் பற்றி ஒண்ணுமே சொல்லலியே… யாருப்பா ஆடறது?)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s