மவனே… ஒனக்கு இதெல்லாம் தேவையா?

கோவை குறும்பட பயிற்சிப் பட்டறையில் எடுத்த பயிற்சிப் படம் இங்கே.. ( டைட்டில் கார்டை நல்லா உத்து பாருங்க )

யூ ட்யூபிலே நூறு மெகா பைட்டுக்கு மேலே ஏத்த முடியாது. அதனாலே, ஏதோ ஜிகிடி வேலை செஞ்சு, கோப்பு அளவை குறைச்சு ஏத்தியிருக்கிறேன். ஒளி/ஒலிபரப்பு கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கும்..

படம் கையிலே கிடைச்சு மூணு நாலு மாசத்துக்கு மேலே இருந்தாலும், யார் கிட்டவும் போட்டுக் காட்ட தெகிரியம் வரலை… யாராச்சும் பார்த்திருந்தா என்ன சொல்லியிருப்பாங்கன்னு தெரியலை.. ஆனால், என் மனசாட்சி என்ன சொல்லுச்சு தெரியுமா?

இந்த இடுகையின் தலைப்பை இன்னுமொரு முறை படிங்க…

9 thoughts on “மவனே… ஒனக்கு இதெல்லாம் தேவையா?

 1. பிரகாசு மாமோய்! இது உமக்கு கண்டிப்பாக தேவைதான்! 🙂

  பெருசை இன்னும் கொஞ்சம் பேசவிட்டிருக்கலாம்.

  இதுபோல நிறைய பட்டறை கண்டு உங்கள் திறமையை புடம்போட வாழ்த்துக்கள்!

 2. பிரகாஷ், படம் நல்லா இருந்தது. ஆனா ஆடியோ பார்ட்ட பயன்படுத்தவே இல்லை எனத் தோணுகிறது. அவர் (ஆசாரி) பேசுகிற எதுவும் கேட்கவில்லையே! அந்தப்பகுதியையும் பயன்படுத்தியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். எனினும் முதல்முயற்சியில் இது பாராட்டத்தக்கதே!

 3. இளவஞ்சி : நன்றி.

  தங்கமணி : நாங்கள் அவரது குரலிலேயே பதிவு செய்தோம். ஆனால், ஆனால் ஒலிப்பதிவு, மிக மோசமாக வந்ததிருந்தது. சில நுட்பங்களில் வாயிலாக, ஒலிப்பதிவை துல்லியமாகச் செய்யலாம் என்று அறிந்தாலும், நேரமும், வசதிகளும் அங்கு இல்லை. வேறு வழியில்லாமல், எழுதி வைத்து படித்து, ஒலிப்பதிவு செய்து சேர்த்துவிட்டோம். தொகுத்தவரின் கணிணியிலேயே இருந்த ஒரு இசைக் கோர்ப்பையும் சேர்த்துவிட்டோம்.

  பாராட்டுக்கு நன்றி..

 4. Hi ப்ரகாஷ்,

  படம் நன்றாக இருந்தது. ஏன் ‘உனக்கு இது தேவையா’ மாதிரி கேள்வியெல்லாம்? 🙂 ஆடியோவைக் கேட்கும்போது ஒரு யோசனை தோன்றியது (யோசனைதான்.): ஆரம்பத்தில் கேட்கும் ‘டக் டக்’கென்ற செதுக்கும் ஓசையை வைத்து Rap மாதிரி ஏதாவது செய்திருக்கலாம், இல்லை? அவர்கள் தேர் செதுக்கும் பகுதிகளை சின்னப் பகுதிகளாகச் சேர்த்து ஒட்ட வைத்திருக்கலாம் என்றும் தோன்றியது. Anyhow, it’s your project. சுவாரசியமாக இருந்தது. அடுத்து என்ன செய்யப்போகிறீர்கள்? பார்க்க ஆவலாக இருக்கிறேன்.

 5. அன்பு பிரகாஷ்,

  ‘குறும்படத் தயாரிப்பு’ நல்ல முயற்சி!
  பயிற்சி பட்டறையில் பயின்ற விஷயங்களைப் பதியுங்கள். தங்களைப் போன்ற ஆர்வலர்களுக்கு பயன் படும்!

  வாழ்த்துக்களுடன்,
  எல்.ஏ.வாசுதேவன்,
  மலேசியா.

 6. பிரகாஷ்,
  படம் நல்லாத்தான் இருக்கு, நுட்பக்குறைகளை தவிர்த்துப்பார்த்தால். பேசும் வார்த்தை உச்சரிப்பில் பிழைகள் உள்ளன.. அவசியம் தவிர்க்கப்படவேண்டியவை. “கலை”யை “களை” எனச் சொல்வது தவிர்க்கப்படவேண்டியது 🙂

  அது தவிர்த்து, தத்துவார்த்தமாகப் பார்த்தால், 60 வருடங்களில் 40 க்கும் மேல் தேர்களைச் செய்தவர் இன்னும் மிகவும் எளிய வாழ்வுகளியே நிலைத்திருப்பது உழைப்பும் ஊதியத்துக்குமான நியதிகளையும் தமிழ்நாட்டின்/இந்தியாவின் போற்றுதல்களையும் ஞாபகப்படுத்தியது.

 7. டைட்டில் கார்டு மேட்டரு…. பெயர்கள் எல்லாம் பதிவர்கள் சிலரின் பெயர்களா?
  நீங்க ஜெயப்பிரகாஷா? ஆம் என்றால் உங்க ஊரு பல்லாவரமா: P (பல்லாவரம்? புகழ் ஜெயப்பிரகாஷை ஞாபகம் இருக்குதானே?)

 8. அசத்தலான பதிவு.

  “மவனே.. உங்களுக்கும் எங்களுக்கும் இது போன்ற பதிவுகள் தேவையே”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s