கடிதங்கள்.

முதலிலே டீசே தமிழன் எழுத, பிறகு செல்வராஜும் தொடர்ந்து எழுத, எனக்கும் கை சும்மாயிருக்கவில்லை. பிறரிடம் பகிர்ந்து கொள்ளுகிற மாதிரியான கடிதங்கள் எனக்கு வந்திருக்கிறதா அல்லது நான் யாருக்காவது எழுதியிருக்கிறேனா என்று எத்தனை யோசித்துப் பார்த்தாலும் எனக்கு நினைவுக்கு வரவில்லை. ஆனால், பதிவு போட்டு சில நாட்கள் ஆகிவிட்ட நிலையில், யாருடைய தொந்தரவும் இன்னும் கொஞ்ச நேரத்துக்கு இருக்காது என்ற உத்தரவாதமான சூழ்நிலையில், இந்த மாதிரி ஒரு ‘bloggable idea’ வை தூக்கி தூரப் போடவும் மனசில்லை.

பேனா பிடித்து தமிழில் எழுதியது கல்லூரி நாட்களோடு போயிற்று. பரீட்சைக்குக் பணம் கட்ட, மெஸ் பில்லுக்கு, புத்தகங்கள் வாங்க என்று பணம் கேட்டு எழுதிய நாட்களில் சங்கப் பாடல்களில் இருந்தோ, ஆத்மாநாமின் கவிதைகளில் இருந்தோ மேற்கோள்கள் தேவைப்படவில்லை. பணத்துக்கும், கவித்துவத்துக்கும் தூரம் அதிகம். கவரிலே வரைவோலையை வைத்து, கூடவே, ‘ ஒழுங்காப் படி’ என்று அப்பா எழுதியதிலும் கவலையுடன் கூடிய மிரட்டல் தான் இருக்கும். விடுமுறயின் போது சந்திக்கும் நண்பர்களும் கடிதம் எழுதுகிற ஜாதி இல்லை. ஆக, என் கடிதங்கள், உலகாயத நோக்கம் கெ¡ண்டவை மட்டுமே. சும்மா, ஏதாவது சுவாரசியமாகக் கிட்டுமா என்று நோண்டிக் கொண்டிருந்த போது கிடைத்த கடிதங்களில் இருந்த செய்தியை ஓரி வரிகளிலே எழுதி விடலாம்.

” சனிக்கிழமை அன்று நவஜீவன் எக்ஸ்பிரஸிலே வருகிறோம். ஸ்டேஷனுக்கு வரவும்”

” ஆன்சிலரி சப்ஜெக்ட்டில் நூறு மார்க் எடுப்பது ஒன்றும் பிரயோசனப்படாது. மேஜரில் நல்ல மார்க் எடுக்க வேண்டுமாம். சின்னு மாமா அப்படித்தான் சொல்கிறார்”

” பாட்டி உடல் நலமில்லை. காளியப்பாவில் சேர்த்திருக்கிறோம்”

” கீதாவின் கணவர் இறந்து விட்டார். நீ வரவேண்டியதில்லை. பிராக்டிகல் எக்ஸாம் முடித்து விட்டு வந்தால் போதும்..”

எடுத்து படித்துக் கொண்டிருந்ததிலே, எல்லாமே, இந்த மாதிரியான கடிதங்கள் தான். செய்தியை தெரிவிக்கும் கடிதங்கள்.

கல்லூரிக் காலத்துக்குப் பிறகு, தமிழில் எழுதுவதும், தமிழ் கடிதங்களை எதிர்கொள்வதும் முற்றிலுமாக இல்லாமல் போனது. இணையத்துக்கு வந்த பிறகு, எல்லாமே மின்னஞ்சல் தான். நிறைய மடல்கள். அதிலிருந்து ஒன்று..

சுஜாதா குறித்த நான் எழுதிய கட்டுரைக்கு, அவரிடமிருந்து வந்த மடல்..

பிரகாஷ்,

தங்கள் நீண்ட வலைக்குறிப்புக்கு வந்தனம். தங்களைப் போன்ற வாசகர்கள் இருப்பதுதான் என்னை மேலும் எழுதத்தூண்டுகிறது. அனைவருக்கும், அனைத்துக்கும் நன்றி!

– சுஜாதா. செனனை 3- 5- 2005

5 thoughts on “கடிதங்கள்.

 1. பிரகாஷ், சுஜாதா போலன்றி நீங்கள் ‘சின்னச் சின்னதாக’ அல்லது உங்களுக்கு ‘சின்னச் சின்னதாக’ கொடுக்கப்பட்ட காதல் கடிதங்களையும் பதிந்துவிடலாமே 🙂

 2. DJT
  Dont you know that such short love letters are not ‘written’ but ….
  (you know what and where) :).
  So how can you expect Prakash to
  ‘show’ them :). All I know is
  some Pankajam is involved in them :).

 3. லோகாயத கடிதங்களிலும் சில சுவரஸ்யமானவையாகவே இருக்கும்.
  சரி அது என்ன பங்கஜம்?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s