டியர் மிஸ்டர் வருண பகவான்…..

இது நியாயமா , நீங்களே சொல்லுங்க இது நியாயமா? மெட்ராஸ்ங்கறதை, சென்னைன்னு பெயர் மாற்றின மாதிரி, சென்னைங்கறத மறுபடியும் சிரபுஞ்சின்னு பேர் மாற்றிட்டாங்கன்னு யாராச்சும் உங்களுக்குத் தப்பா தகவல் சொல்லிட்டாங்களா? அப்படியெல்லாம் எதுவும் இல்லைங்க சார். இது எழுதிக்கிட்டு இந்த நேரத்துல, தெருமுக்கு வரையிலும் தண்ணி நிக்கிது. சும்மா கடை கண்ணிக்கு போகலாம்னா கூட, வீட்டை விட்டு கிளம்ப முடியலை. ஒரு தரம் அடிச்சு விட்டுதுன்னா, தண்ணியை பம்ப் அவுட் பண்ணிட்டு, அடுத்த வேலையைப் பாக்கலாம். நீங்கதான் எப்ப வருவீங்கன்னே தெரியலையே? அப்பறம் என்னத்தை நிவாரணம் பண்ணி என்னத்தைப் பாழாப் போறது? மானம் பார்த்த பூமியா, காஞ்சு போன சமயங்களிலேலே உங்களை திட்டினது உண்டுதான்…சில சமயம் கெட்ட வார்த்தையால கூட… ஆனா, அதை எல்லாம் உங்ககிட்ட யாராச்சும் போட்டுக் குடுத்துடுவாங்கன்னு ங்கொப்பராணையா நினைக்கலை. அப்படியே யாராச்சும் கோள்மூட்டி இருந்தாலும் இப்படி பழிவாங்கலாமா?

நீங்க எவ்வளோ பெரியவர்? ஏபிநாகராஜன், அவர் எடுத்த படங்களிலேயெல்லாம் உங்களுக்குச் சான்ஸ் குடுத்து சந்தோஷப்படுத்தினாரே, அதை மறந்துட்டீங்களா? இல்லை, சாதாரண அறிவியல் விஷயமான evoporation-condensation process க்கு கூட, வருணபகவான்னு பேர் வெச்சு, மிதாலஜியிலே உங்களை சேத்து, கொழந்தைங்களுக்கு எல்லாம் கதை சொல்லி ஏமாத்தி உங்களை சந்தோஷப்படுத்தினோமே அதை மறந்துட்டீங்களா? எந்த தெலுங்கு சினிமாவாச்சும், நீங்க இல்லாம இருக்கா? வெள்ளை நிற உடையிலே, ஈரோயினி டான்ஸ் ஆடாம, எந்தத் தெலுங்குப் படமாவது வந்திருக்கா? அதை எல்லாம் மறந்துட்டு இப்படி அநியாயம் பண்றீங்களே, இது அடுக்குமா?

போன மாசம் கொட்டி நின்ன மழையால தமிழகம் முழுசுலயும், எத்தனை ஆயிரம் கோடி நஷ்டம் தெரியுங்களா? இதுக்கெல்லாம் யாரு ஜவாப்தாரி? அதான் சென்டிரல் கெவர்மண்டுல துட்டு கொடுக்கிறாங்கன்னு சொல்வீங்க, ஆனால், அதெல்லாம் அத்தனை லேசில கிடைச்சுராது. அதுக்கு மேலேயும், இப்படி விடாம அழும்பு பண்ணிகிட்டே இருந்தா, ஒருத்தர் எவ்வளவுதான் தூக்கிக் கொடுப்பாங்கங்கறதுன்னு வேணாம்? இந்த மழையால காலியாயிட்ட ரோடுங்களையெல்லாம் மராமத்துப் பண்ண, எத்தனை மாசம் ஆவும் , எவ்வளவு செலவு ஆவும்னு தெரியுமா? கடலூர்ல பேஞ்ச மழையோட பொருளாதார ரீதியான பாதிப்பு, சுனாமிய விட அதிகம்னு அந்த ஊர் கலக்டர் ககன்தீப் சிங் பேடி என்டிடிவியிலே ஒரு பாட்டம் அழறார்.. உங்க ஊர்ல என்டிடிவி வருதா? அதுக்கு செட்டாப் பாக்ஸ் தேவையில்லை. free-to-air channel தான். வேணா போட்டுப் பாருங்க.. ஒரு சர்தார்ஜிக்கு இருக்கிற கன்சிடரேஷன் கூட, நம்மாளா இருந்துகிட்டு உங்களுக்கு இல்லை.. உங்களுக்கு வருண பகவான்னு சுந்தரத் தமிழ்ல பேர் வேற..

இங்க பாருங்க… பருவமழை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாலேயே வந்தீங்க.. சரின்னு விட்டோம்.. இப்ப தலை தீவாளிக்கு வந்து பொங்கல் வரைக்கும் தங்கற மாப்பிள்ளை மாதிரி, இங்கேயே டேரா போட்டா எப்படி? நெறைய வேலை இருக்கு… வந்தமா போனமா இல்லாம , என்ன கூத்து இது? நீங்க போய்ட்டீங்கன்னு நம்பி, நாளைக்கு ·ப்ரெண்ட்ஸ்சோட ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு வேற பண்ணியிருந்தேன்.. நடத்தறதா வேணமான்னு ஒரே கொழப்பம்..

ஆமா, தெரியாமத்தான் கேக்கிறேன், உங்களுக்கும் சன்டீவிக்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை எதாவது இருக்கா? தோ வருது, தோ வந்துட்டுதுன்னு பயங்கர அறிவிப்பு கொடுத்துட்டு இருக்கறப்ப, புத்தர் மாதிரி அமைதியா இருக்கீங்க.. , அவங்க புயல் அபாயம் நீங்கிட்டதுன்னு சொல்றப்ப வந்து சும்மா பிச்சு எடுக்கறீங்க?

எதுனா பிரச்சனைன்னா சொல்லுங்க, வாங்க, பேசித் தீத்துக்கலாம், அதை விட்டுட்டு இது என்ன சின்னபுள்ளைத்தனமா….

10 thoughts on “டியர் மிஸ்டர் வருண பகவான்…..

 1. ///சாதாரண அறிவியல் விஷயமான evoporation-condensation process க்கு கூட, வருணபகவான்னு பேர் வெச்சு, மிதாலஜியிலே உங்களை சேத்து, கொழந்தைங்களுக்கு எல்லாம் கதை சொல்லி ஏமாத்தி ….////

  சாதாரண அனிச்சையான இயற்கை நிகழ்ச்சிக்குத்தான் “வருணன்” என்று பெயர் என்று “புரட்சிகரமாக” கருதும் நீங்கள் (எப்படி, எப்படி … குழந்தைகளை ஏமாற்றி… யா?) அந்த அனிச்சையான விஷயத்துக்கு இத்தனை நீட்டி முழக்கி லெட்டர் எழுதுவதேன்?

  ஏதாவது டாக்டரிடம் காண்பித்துக் கொள்ளுங்களேன்?

  நன்றி.

  ஜயராமன்

 2. சென்னைவாசிகள் அன்று கேட்டதும் “தண்ணீர் தண்ணீர்”. இன்று கதறுவதும் “தண்ணீர் தண்ணீர்” 🙂
  அன்று குன்னக்குடி வாசித்தால் வருவாரென்ற வருணபகவான் இன்று யார் வாசித்தால் விலகுவார் ? :))

 3. ஜயராமனுக்கு நட்டு கழண்டு விட்டது என்று நினைக்கிறேன். நம்ம டேண்டு ப்ளாக்லயும் போய் இதே மாதிரி ஒரு பின்னோட்டம் இட்டிருந்தார். அறிவு ஜீவி என்று நினைப்பு போல. ரசனை இல்லாத மனுசனாக இருப்பார் போல. அதுக்கு எதுக்கைய்யா எல்லா ப்ளாக்லயும் போய் புலம்புகிறீர். நல்ல டாக்டரா நீங்க சீக்கிரம் பாக்கிறது நல்லது. மனுசன் டை கோட் எல்லாம் போட்டு சோக்கா தான் இருக்கார் 🙂

  மன்னிச்சிருங்க பிரகாஷ், தேவை இல்லாத பிரச்சினை என்று நினைத்தால் என்னோட பின்னோட்டதை நீக்கிக்கொள்ளுங்கள்.

 4. //இப்ப தலை தீவாளிக்கு வந்து பொங்கல் வரைக்கும் தங்கற மாப்பிள்ளை மாதிரி, இங்கேயே டேரா போட்டா எப்படி? //

  இது சூப்பர்…:-)

 5. Dear Prakash,
  Va endral vuruvathrkum po endral povatharkum iyarkai enna ungal vettu velaikarana TRC

 6. பெரகாசு,

  தமிழர்களுக்கு வர வர நகைச்சுவை உணர்ச்சி குறைந்து விட்டதுன்னு வாத்தியார் சொன்னபோது, தனக்காகன்னு புலம்பிக்கிறார்னு நெனைச்சேன். உங்க பின்னூட்டப் பெட்டியைப் பாத்தாதான் தெரியுது..

  BTW, நல்ல super லெட்டர்.

  அது சரி. வருண பகவான் தமிழ் படிக்கமாட்டாரு. சமஸ்கிருதம் மட்டுந்தான் தெரியும்னு வேற யாராவது வந்து சொல்லப் போறாங்க. நல்ல கூத்து 🙂

 7. //இப்ப தலை தீவாளிக்கு வந்து பொங்கல் வரைக்கும் தங்கற மாப்பிள்ளை மாதிரி..//

  வாய்விட்டு சிரிக்க வைத்த வரிகள் 🙂

 8. இத்தனைக்குப்புறமும்… நிக்கவச்சு(வைக்க) கேள்வி கேக்கறீங்க, தெனாவட்டு ஜாஸ்தியாடுச்சுய்யா…:)

 9. ஆனாலும் ரெயின் ரெயின் கோ அவே” என்று பாட மனசு வரலை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s