ஒரு கதை, ஒரு நாடகம், ஒரு பாட்டு

அம்மணியின் குட்டிக் கதைகள் படிக்கிற வழக்கம் உண்டோ? நாளொன்றுக்கு, நல்ல ஆங்கிலத்தில், நச்சென்று நாலுவரியில் அவர் போடுகிற quick tales என்ற குட்டிக் கதை வரிசைக்கு, நிறைய ரசிகர்கள் உண்டு. ( சில வாரங்களுக்கு முன்னால், இந்தக் குட்டிக் கதை தமிழில் பெயர்க்கப்பட்டு, சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் பத்தியில் இடம் பெற்றது). அவருடைய முக்கால் வாசிக் கதைகள், பெண்களிள் உலகத்துக்குள் எட்டிப் பார்க்கிறவர்களைக் கேள்வி கேட்பதாகவும், கேலி செய்வதாகவும், சில சமயம் பச்சாதாபம் தொனிக்கிறதாகவும் இருந்தாலும், கடைசி வரிப் பஞ்ச்-கள் சட்டென்று மனசுக்குள் ஒட்டிக் கொள்கின்றன. ஓரிரு வார்த்தைகளில் வெளிப்படும் நகைச்சுவையும், குறிப்பாக கதைகள் முழுக்க அடிக்கும் மெட்ராஸ் வாடையும்… ம்ம்ம்ம்ம்.

புஸ்தகமா வந்தால் நன்றாக இருக்கும்.

அந்த தொடரில் எனக்கு ரொம்ப பிடிச்ச கதை இதுதான்

திடுதிப்பென்று ஆனந்த் ராகவ் கிட்டேயிருந்து ஒரு மெயில் வந்தது. இசை குடும்பம் ஒன்றைப் பின்புலமாக வைத்து ஆனந்த் ராகவ் எழுதிய நாடகத்தை தீபா ராமானுஜம் வெளிநாடுகளில் அரங்கேற்றி, இப்போது சென்னையிலும் அரங்கேற்ற இருக்கிறார். இந்த நாடகம், வருகிற ஜூலை மாசம் முதல் வாரம் சென்னையில் அரங்கேற இருக்கிறது. நான் போக இருக்கிறேன். இஷ்டப்பட்டவர்கள் என் கூட ஜாய்ன் பண்ணிக்கிடலாம்.

ரொம்ப நாளாத் தேடிக்கிட்டு இருந்த பாட்டு. ஏன் தேடிக்கிட்டு இருந்தேன்-ங்ற விவரம் யாருக்கும் தேவைப்படாது…

பாட்டை கொடுத்த கூல்கூஸ், நீ வாழ்க…

கலை தந்தாள்…………
கோடியென தனம் தந்தாள்
காதலெனும் கவி தந்தாள்
வாழ்க்கையெனும் வரம் தந்தாள்…
.
திருமகள், அன்பு கலைமகள்,
ஆசை
மலைமகள் என் வசம்
மணமகள், நாளை மருமகள்,
இன்ப தமிழ் மகள் என்னிடம்

லக்ஷ்மீ வந்தாள்… மகராணி போல்…
எனையாளவே…. நன்னாளிலே…

பாட்டை இங்கே இறக்கிக் கொள்ளலாம்.

பணம் பெண் பாசம் என்ற படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடல், எஸ்.பி.பியின் அபூர்வமான ஹிட் பாடல்களில் ஒன்று. ஜாவர் சீதாராமன் கதையை ( நான் படித்ததில்லை) படமாக எடுத்தார்கள். முத்துராமன், சரிதா போன்றவர்கள் நடித்தார்கள். பின்னாளில், இது தொலைக்காட்சி சீரியலாகவும் எடுத்து, ஜாவர் சீதாராமனுக்கு அழியா களங்கத்தை ஏற்படுத்தினார்கள். மேல் தகவல் தெரிந்தவர்கள் எழுதலாம்.

One thought on “ஒரு கதை, ஒரு நாடகம், ஒரு பாட்டு

  1. ப்ரகாஷ்,

    அம்மணியின் குட்டிக்கதைகள் சுட்டிக்கு நன்றி – அருமை!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s