வலைப்பதிவாளர் சந்திப்பு – நினைவூட்டல்

நாள் : ஏப்ரல் 9, 2005
இடம் : காந்திசிலை , மெரீனா கடற்கரை
நேரம் : மாலை ஐந்து மணி

வலைப்பதிவாளர் சந்திப்புக்கு இத்தனை உற்சாகமான வரவேற்பு இருக்கும் என்று முன்பே தெரிந்திருந்தால், இன்னும் முன்னதாகவே ஏற்பாடு செய்திருக்கலாம் என்று தான் முதலில் தோன்றியது.

வர இயலாது ஆனால் வாழ்த்துக்கள் உண்டு என்று வாழ்த்திய நண்பர்களுக்கு முதற்கண் நன்றி.

எனக்குப் பரிச்சயம் ஏற்பட்டிருந்த நண்பர்கள் தவிர்த்து ” அதெப்படி என் பெயரை விடலாம்? , நானும் அவசியம் வருவேன்” தனிமடலில் உரிமையுடன் கோபித்துக் கொண்ட நண்பர்களுக்கும் நன்றி.

இந்தச் சந்திப்புக்காகவே, வெளியூரில் இருந்து வருவதாக வாக்களித்த நண்பர்களுக்கும் நன்றி.

தொலைபேசியிலும், தனிமடலிலும், பொதுவிலும், இந்தச் சந்திப்புக்கு வருவதாக் வாக்குக் கொடுத்த நண்பர்களுக்கு கொஞ்சூண்டு நன்றியும், எக்கச்சக்கமான எச்சரிக்கையும் மட்டுமே… “அச்சச்சோ மறந்தே போச்சு, மாமா பொண்ணுக்கு காது குத்தல், ஆபீசில் லீவ் கிடைக்கலை, சுண்டு விரலில் சுளுக்கு, இந்தியா பாகிஸ்தான் மேட்ச், ஆட்டோ கிடைக்கலை,” என்று சில்லறைக் காரணங்களுக்காக டகால்ட்டி கொடுக்க நினைத்தால்…

நினைத்தால்? என்ன செய்ய முடியும்?

ஒண்ணும் செய்ய முடியாது… அடுத்த ஒரு வாரத்துக்கு உங்க ப்ளாகர் வேலை செய்யாமல் போகக் கடவது
என்ற சாபம் மட்டும் குடுக்கமுடியும்.

அதனாலே கட்டக் கடேசியாக சொல்லிக் கொள்வது என்ன என்றால்…

come, participate and make this event a memorable one.

4 thoughts on “வலைப்பதிவாளர் சந்திப்பு – நினைவூட்டல்

 1. //வலைப்பதிவாளர் சந்திப்புக்கு இத்தனை உற்சாகமான வரவேற்பு இருக்கும் என்று முன்பே தெரிந்திருந்தால், இன்னும் முன்னதாகவே ஏற்பாடு செய்திருக்கலாம் என்று தான் முதலில் தோன்றியது.//

  ஒரு மாதகாலத்திற்கு முன்பாவது வலைப்பதிவர் சந்திப்பின் நாளைக் குறிப்பிட்டால் நல்லது, இந்த அவகாசம் மற்ற நிகழ்ச்சிகளை தள்ளி வைப்பதற்கு உதவியாக இருக்கும்.

  16 நாள் வித்தியாசத்தில் வலைப்பதிவர் சந்திப்பை நான் தொலைத்திருக்க மாட்டேன்.

 2. ஜமாய்ங்க!!!! வாழ்த்துக்கள்!!!
  ஃபோட்டோக்கள் எல்லாம் போடுங்க. அப்படியே என்ன நடந்ததுன்ற விவரமும்.

  என்றும் அன்புடன்,
  துளசி( நியூஸிலாந்து)

 3. மெட்ராஸ்ல மழை வரும்போல இருக்கே பிரகாஷ். பேசாமல் நேரு இண்டோர் ஆடிடோரியத்தில் முயற்சி செய்யலாமே;-)

 4. அபூ முஹை : இந்த முறை விட்டுடுங்க… 🙂 அடுத்த முறை இன்னும் விரிவாக திட்டமிட்டு செய்யலாம்.

  துளசிகோபால் : நன்றி. புகைப்படங்களும் வர்ணனையும் விரைவில் வரும். மெரினா பீச், wi-fi ஸ்பாட்டாக இருந்தால், ஆன்லைன் ஒளிபரப்பே செய்யலாம் தான் 🙂 அதுக்கு இருக்கு இன்னும் சில வருஷங்கள்…:-)

  சொடலைமாடசாமி… : நேத்திலேந்து வானிலை அறிக்கை பார்த்துகிட்டு இருக்கேன். இப்ப கொஞ்சம் வானம் தெளிவாக இருக்கு. ..திடுதிப்புன்னு மழை வந்துட்டா என்ன செய்யறதுன்னு ஒரே கிலியா இருக்கு.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s