Chennai Tamil Bloggers Meet – 2005

சென்னை வலைப்பதிவாளர்கள் சந்திப்பு – 2005

வருகிற ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி, மாலை ஐந்து மணியளவில், கடற்கரையில், காந்தி சிலை அடிவாரத்தில், வலைப்பதிவாளர்கள் அனைவரும் சந்தித்து ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக் கொள்ளலாம்.

இது கூட்டமோ மாநாடோ அல்ல. வெறும் சந்திப்பு மட்டுமே. இதற்கென்று நிகழ்ச்சி நிரல் ஏதும் இல்லை. இந்தக் கூட்டத்தை நெறிப்படுத்தி நடத்துபவர் என்று யாரும் கிடையாது. வரவேற்புரை, தலைமை உரை, நன்றி நவிலல் என்ற சம்பிரதாயங்கள் கிடையாது இந்தச் சந்திப்பிற்கு, சென்னை, மற்றும் சுற்றி இருக்கும் நகரங்களில் இருப்பவர்கள், தவறாமல் வந்து கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

யார் யார் எல்லாம் இந்தச் சந்திப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்?

1. சென்னையில் இருக்கும் வலைப்பதிவாளர்கள்
2. தமிழகத்தின் பிற பகுதிகளில் இருக்கும் வலைப்பதிவாளர்களும், அண்டை மாநில வலைப்பதிவாளர்களும்
3. அயல்நாட்டில் இருந்து சென்னைக்கு விடுப்பில் வந்திருப்பவர்களும், வர இருப்பவர்களும்
4. வெளிநாட்டில் இருப்பவர்கள், தத்தம் முதலாளிகளுக்கு, ” as i am suffering from fever… ” என்று தொடங்கும் விடுப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து விட்டோ, லீவ் கிடைக்காத பட்சத்தில், ” நீயாச்சு, ஒன் வேலையுமாச்சு… ” என்று கால்கடுதாசு கொடுத்து விட்டோ வந்து கலந்து கொள்ள வேண்டும்.
5. ஆங்கிலத்தில் வலைப்பதியும் தமிழர்கள்
6. சொந்தமாக வலைப்பதிவு வைத்துக் கொள்ளாமல் பின்னூட்டம் தந்தே புகழ் பெற்றவர்கள்.
7. பின்னூட்டம் கூடத் தராமல், வாசித்து விட்டு அப்பால் அகன்று விடுபவர்கள்.

இந்தச் சந்திப்பு ஏன் நடக்க வேண்டும்?

ஏன் நடக்கக் கூடாது என்பது இதற்கு பதிலாக அமையும் என்றாலும்., இணையத்தில், மட்டும் சந்தித்து அளவளாவுபவர்கள், நேரில் சந்தித்து பேசினால், அறிமுகப்படுத்திக் கொண்டால், வலைப்பதிவு இயக்க முறையில் ஏதேனும் புதிய ரசாயன மாற்றம் நிகழலாம். இல்லாவிட்டாலும் ஒன்றும் பாதகமில்லை. சனிக்கிழமை ‘உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக” ஒளிபரப்ப்பபடும் ‘திராபை’ படங்களை பார்ப்பதைக் காட்டிலும், ஒரு சனிக்கிழமையின் மாலைப் பொழுதை, சென்னைக் கடற்கரையில், நண்பர்களுடன் கழிப்பது சிலாக்கியமாக இருக்கும்.

இந்த சந்திப்பின் அஜண்டா என்ன?

ஒண்ணுமே இல்லை. சும்மா பார்த்து கைகுலுக்கி விட்டு அரட்டை அடித்து விட்டு நகர்கிறோம். வலைப்பதிவாளர்கள் ஏதேனும் உருப்படியான காரியத்தை சேர்ந்து செய்யலாம் என்று நினைத்திருந்தால், அதற்கு, ஒரு ஆரம்ப கட்டமாக இந்தச் சந்திப்பு அமையும்.

கலந்து கொள்ள சாத்தியம் இருப்பவர்களின் உத்தேசமான பட்டியல் என்ன?

வலைப்பதிவுப் பட்டியலில் இருந்து, எனக்குத் தெரிந்தவரையிலான வலைப்பதிவாளர்கள் : அண்ணா கண்ணன், அருணா ஸ்ரீனிவாசன், அருள் செல்வன், ஆர்.வெங்கடேஷ், இரா.முருகன், ராஜ.தியாகராஜன், இராம.கி, ஈஸ்வரபிரசாத் ( கர்நாடகா), ந.உதயகுமார், எஸ்.ராமகிருஷ்ணன், ‘யளனகபக’ கண்ணன் ( பெங்களூர்), கண்ணன் ராமநாதன் ( பெங்களூர்), சந்தோஷ் குரு, சித்ரன், கிருபாஷங்கர், சுரேஷ் கண்ணன், டோண்டு ராகவன், தமிழ் சசி, தேசிகன் ( பெங்களூர்), நாகூர் ரூமி ( ஆம்பூர்) , பத்ரி, பவித்ரா ஸ்ரீனிவாசன், மதுரபாரதி, மனுஷ்யபுத்திரன், மாலன், மீனாக்ஸ் ( பெங்களூர் ), முத்துராமன், ராஜா ( நாமக்கல்), லலிதா ராமச்சந்திரன் ( பெங்களூர்), வே.சபாநாயகம் ( விருத்தாசலம்), ரஜினி ராம்கி, ஷங்கர், ஹரன் பிரசன்னா, சொ.மணியன் என்கிற என்.சொக்கன் ( பெங்களூர்), ஐயப்பன் ( பெங்களூர்). நாராயணன், அரவிந்தன் ( பெங்களுர்), நிர்மலா ( கொல்கத்தா), எஸ்.கே (கிச்சு), முன்னாள் வலைப்பதிவாளர் பா.ராகவன் et al

பாஸ்டன் பாலாஜி, உஷா , ஆசாத் ஆகியோர், இந்தச் சந்தர்ப்பத்தில் சென்னைக்கு வர இருப்பதாகத் தெரிகின்றது. அவர்களும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டால் நலம்.

இன்னும் அதிகமானோர் , சென்னையில் இருந்து கொண்டு வலைப்பதிகிறார்கள் என்றாலும், எனக்குத் தெரியவில்லை. அவர்கள், இந்தப் பதிவின் பின்னூட்டத்திலோ அல்லது icarus1972us@yahoo.com என்ற முகவரிக்கு தனிமடலோ எழுதி, கலந்து கொள்ளச் சம்மதம்/சம்மதமின்மையை தெரிவிக்கக் கோருகிறேன்.

மேலதிக விவரங்கள், அடுத்த பதிவில்.

47 thoughts on “Chennai Tamil Bloggers Meet – 2005

 1. ஒரு வலைப்பதிவை ஆரம்பித்துவிட்டு ஒரு கட்டுரையும் எழுதாத நான் இந்த வலைப்பதிவர் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியுமா….அனுமதியுண்டா……

 2. அநேகமாக நான் கலந்து கொள்ளக் கூடும் என்று பட்சி சொல்கிறது. ஆனா அஞ்சு மணிக்கு சென்னையில வெயிலு கணிசமா இருக்குமேன்னு நினைக்க சொல்லோ பகீர்னு கீது.

 3. Great to know Mr.Prakash

  Great initiation.

  I may not be participating, but always wish the goodwill.

  Mr.Sridhar Sivaraman, eventhough you haven’t disclosed your gems yet, I see a good critique in you. You always put up your words for articles. Thats the greatest of the contribution.

  You are always welcome sir!!!

 4. மீனாக்ஸ் வெயிலைப் பார்த்தா ஆவுமா? . மறக்காம…. வந்துடுங்க…. அப்படியே பெங்களூர் பார்ட்டிங்களை எல்லாம் தள்ளிகிட்டு வந்துடுங்க….

 5. //ஒரு வலைப்பதிவை ஆரம்பித்துவிட்டு ஒரு கட்டுரையும் எழுதாத நான் இந்த வலைப்பதிவர் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியுமா….அனுமதியுண்டா…… //

  ‚¾÷ º¢ÅáÁý, ºó§¾¸§Á §Åñ¼¡õ. þó¾ ºó¾¢ôÒìÌ «Åº¢Âõ ÅçÅñÎõ.

 6. //ஒரு வலைப்பதிவை ஆரம்பித்துவிட்டு ஒரு கட்டுரையும் எழுதாத நான் இந்த வலைப்பதிவர் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியுமா….அனுமதியுண்டா…… //

  ‚¾÷ º¢ÅáÁý, ºó§¾¸§Á §Åñ¼¡õ. þó¾ ºó¾¢ôÒìÌ «Åº¢Âõ ÅçÅñÎõ.

 7. பிரகாஷ்,

  நான் ஏப்ரல் 18-ம் தேதி விடுமுறையில் வருகிறேன். இரண்டு வாரங்கள் கழித்து இது நடக்கக் கூடாதா என்று ஏக்கமாக இருக்கிறது.

  வினோபா
  parisal.weblogs.us

 8. அமெரிக்காவுல இருந்து அந்த வாரம் தான் வரேன், ஆனா ஊருல மொட்டை போடனும் தலைவா. ஜஸ்ட்ல மிஸ் ஆயிடிச்சே !!

  பேஜாருடன்

  டுபாக்கூர்

 9. பிரகாஷ் உங்கள் செல்பேசி எண்ணைக் கொடுங்கள். உபயோகமாக இருக்கும்.
  அன்புடன்,
  டோண்டு ராகவன்

 10. வலைப்பதிவாளர்கள் ஏதேனும் உருப்படியான காரியத்தை சேர்ந்து செய்யலாம் என்று நினைத்திருந்தால், அதற்கு, ஒரு ஆரம்ப கட்டமாக இந்தச் சந்திப்பு அமையும்

  வர வர ரொம்ப கெட்டுப் போய்ட்டீங்க. என்ன தைரியம் இருந்தா இப்படி ஒரு ஐடியா குடுப்பீங்க! ம்ம்ம்!!!!!! உருப்படாதோர் சங்கத்தின் சார்பாக இப்படிச் சொன்னதை வன்மையாகக் கண்டிக்கிறேன். :-))

  இப்படி தட்டச்சடித்த தோஷம் போகுமாறு அடுத்த பதிவு ஒன்றைப் போடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

 11. நேத்தே சொல்ல நெனச்சி விட்டு போச்சு! நாராயணன் கொஞ்ச நாளைக்கு முன்ன ‘இணைய திரையரங்கம் சாத்தியமா’ன்னு ஒரு பதிவு போட்டு, எல்லோரும் ஓட்டு போட்டு, கருத்து சொல்லி கலாய்ஞ்சதே, அத வேணா உருப்பட வைக்க முடியுமான்னு பாருங்க, ஸார்.

 12. நான் கண்டிப்பா பேசறேன் வசந்த். அது வர்ற மக்களைப் பொறுத்தது.

 13. பிரகாஷ், கொஞ்சம் ஆப் டாபிக், என்பதிவிலிட்டதை இங்குமிடுகிறேன்.

  வசந்த், இதைப்பற்றி பேசிப் பார்க்கிறேன். மக்களின் ஆதரவைப் பொறுத்துதான் எல்லாமே, இல்லாவிட்டால், கடைதிறந்து வைத்துவிட்டு, ஈ யோட்ட வேண்டியதிருக்கும். சமீப காலங்களில் மாற்று சினிமா பற்றிய சிற்றிதழ்கள் அதிகரித்து இருக்கின்றன (நிழல், கனவு, கலை, சொளந்தர குகன்) – இதைத் தாண்டி காலச்சுவடு, உயிர்மை, கவிதாசரண் போன்ற இதழ்களிலும், அவ்வப்போது மாற்று சினிமா செய்திகள் வருகின்றன.

  நான் தற்போது யோசித்துக் கொண்டிருப்பது, ஏதேனும் ஒருவழியில் இவர்களையும், உலகமுழுக்க படமெடுப்பவர்களுக்குமான ஒரு பாலத்தினை உருவாக்குதல். இணையம் தான் இதிலும் மிக முக்கியமாக தெரிகிறது. பேசிப் பார்க்கிறேன்.

 14. சந்திப்பு சுவாரசியமானதாக இருக்க வாழ்த்துக்கள். ரொம்ப கனமான சமாசாரமெல்லாம் பேசுவதைவிட, முதலில் ஒருவரையொருவர் அறிந்துகொள்ள இது உதவட்டும் என்பது என் கருத்து.

  பார்க்கலாம், போய்விட்டு வந்து யார் பதிவு முதலில் வருகிறதென்று:P

  நேத்து முக்கி முக்கிப் பாத்தேன். இங்கே எழுத முடியவில்லை. ப்ளாக்கருக்கு என்மேல் கோபம் பொல.:(

 15. //’இணைய திரையரங்கம் சாத்தியமா’ன்னு ஒரு பதிவு போட்டு, எல்லோரும் ஓட்டு போட்டு, கருத்து சொல்லி கலாய்ஞ்சதே, அத வேணா உருப்பட வைக்க முடியுமான்னு பாருங்க, ஸார்.//

  ரோசா : இது போல உருப்படியாக எதையாச்சும் பேசலாம் என்று முன்கூட்டியே திட்டம் எதுவும் போடவில்லை. எந்தத் திசையில் போகிறது என்று பார்த்துவிட்டுத்தான் மற்றது எல்லாம். நாராயண் கை கொடுத்தால் கொஞ்சம் டிரை செய்யலாம்.

  //சமீப காலங்களில் மாற்று சினிமா பற்றிய சிற்றிதழ்கள் அதிகரித்து இருக்கின்றன (நிழல், கனவு, கலை, சொளந்தர குகன்) – இதைத் தாண்டி காலச்சுவடு, உயிர்மை, கவிதாசரண் போன்ற இதழ்களிலும், //

  நாராயண் : இது மாதிரியெல்லாம் பேசினால், போட்டுத் தள்ளிவிட மாட்டாங்களா? 🙂 . ” ஒன்னும் ஒன்னும் ரெண்டு/நா வேப்பேரி நண்டு/ ரெண்டும் ரெண்டும் நாலு/ நா ராயபுரம் வாலு” ன்னு கானா பாடலாம்னு இருக்கேன்:-)

  //ரொம்ப கனமான சமாசாரமெல்லாம் பேசுவதைவிட, முதலில் ஒருவரையொருவர் அறிந்துகொள்ள இது உதவட்டும் என்பது என் கருத்து//

  காசி : சுவாரசியமாக நடப்பது, கலந்து கொள்ளுகிறவங்களைப் பொறுத்த விஷயம். முதலிலேயே சொன்ன மாதிரி, எந்த விதமான முன் தீர்மானமும் இல்லாம, சும்மாச் சந்திக்கிறோம். ஜாலியாப் பேசி இன்டராக்ட் செய்வது மட்டும் தான் இப்பத்திய முடிவு.

  //நேத்து முக்கி முக்கிப் பாத்தேன். இங்கே எழுத முடியவில்லை. ப்ளாக்கருக்கு என்மேல் கோபம்
  பொல.:( //

  ” சீலை கேக்கலாம்னு சின்னாயி வீட்டுக்குப் போனா..
  அவ, ஈச்சம் பாயைக் கட்டிகிட்டு எதிர்லே வந்தாளாம்” ங்கற கதையைக் கேட்டிருக்கீங்களா? என் ப்ளாகுக்குள்ளே நானே நுழைய முடியாம, ரெண்டு நாளா மல்லுக் கட்டி, நேத்தைக்குத் தான் பதிவையே போட முடிஞ்சது. இந்தக் கதையை எங்க போய் அழறதுன்னு தெரியாம, ப்ளாக் சப்போர்ட்டுக்கு எழுதிக் கேட்டா, கிணத்துலே போட்ட கல் 😦

 16. “…..என் ப்ளாகுக்குள்ளே நானே நுழைய முடியாம, ரெண்டு நாளா மல்லுக் கட்டி, நேத்தைக்குத் தான் பதிவையே போட முடிஞ்சது. இந்தக் கதையை எங்க போய் அழறதுன்னு தெரியாம, ப்ளாக் சப்போர்ட்டுக்கு எழுதிக் கேட்டா, கிணத்துலே போட்ட கல் 😦 ……..”

  கவலைப் படாதீங்க பிரகாஷ். எனக்கும் இரண்டு நாள் முன்பு ப்ளாகரில் இதே பிரச்சனை. ஆனால் பிளாகர் சப்போர்ட் உடனே தந்தி பதில் போட்டுவிட்டார்கள். ” சில சமயம் எங்க சர்வரிலே இபப்டிதான் ஆகும். கொஞ்சம் நேரம் பொறுத்து முயற்சி செய்யுங்கள். அப்படியும் பிர்ச்சனை தீரவில்லையென்றால் உங்க ப்ரௌசரைக் கொஞ்சம் சுத்தம் செய்துவிட்டு மறுபடி முயற்சி செய்யுங்கள். மற்றபடி எங்கள் சேவையை நீங்கள் தொடர்ந்து ஆதரிப்பதற்கு மிகவும் நன்றி…” ஹ்ம்ம்… ரொம்ப உபயோகமான பதில்.:-( எப்படியோ திக்கி திணறி இரண்டு நாள் முன்பு பதிவை மேலே ஏற்றினேன்.

  அதுசரி, நீங்கள் இப்படி சந்திப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது எல்லோருக்கும் தெரிய வேண்டாமோ? சென்னையில் இருக்கும் / விஜயம் செய்யும் பதிவாளர்கள் பிரகாஷ் கிரானிகலுக்கும் விஜயம் செய்தால் தெரிந்து கொள்வார்கள். இங்கே வர மறந்து போயிருந்தால்?

  இந்த மாதிரி அறிவிப்புக்கெல்லாம் தமிழ் மணம் முகப்பில் ஒரு அறிவிப்பு பலகை இருந்தால் தேவலை. எதற்கும் காசியிடம் சொல்லி வைக்கலாம்.

  காசி, முடியுமா?

  அருணா.

 17. தலைவரே, மறக்காம 24ரூபாய் தீவு & வசந்த கால குற்றங்கள், இப்போவே சொல்லிட்டேன், அப்புறம் மறந்துட்டேன்னு சொதப்பாதிங்க.

 18. //இந்த மாதிரி அறிவிப்புக்கெல்லாம் தமிழ் மணம் முகப்பில் ஒரு அறிவிப்பு பலகை இருந்தால் தேவலை. எதற்கும் காசியிடம் சொல்லி வைக்கலாம்.//

  அருணா : முதல் முறையாகச் செய்கிறோம். ஆகவே, இப்பவே இதுக்கு ஓவர் பில்டப் வேண்டாம் என்று நினைத்தேன். அதுவுமில்லாமல், இப்படி ஒரு அறிவிப்பை, தமிழ்மணம் வாயிலில் வைத்தால், தொடர்ந்து இது போல, நிறைய அறிவிப்புகளுக்காக வேண்டுகோள் வந்து காசிக்கு சங்கடம் ஏற்படுத்தலாம். தொடர்ந்து நண்பர்களுக்கு தனி மடல் எழுதியும், தொலைபேசி மூலமாகவும் அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கிறேன். இது வெற்றிகரமாக நடந்தால், அடுத்த முறை வேண்டுமானால், இன்னும் சிறப்பாகச் செய்யலாம். நீங்களும் , எந்த விதமான சாக்கு போக்கும் சொல்லாமல், அவசியம் வந்து கலந்து கொள்ள வேண்டும். உங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்கள்.

 19. //தலைவரே, மறக்காம 24ரூபாய் தீவு & வசந்த கால குற்றங்கள், இப்போவே சொல்லிட்டேன், அப்புறம் மறந்துட்டேன்னு சொதப்பாதிங்க//

  நாராயண் : வஸந்த காலக் குற்றங்கள் கேரண்ட்டி. 24 ரூபாய் தீவு , யார் கிட்ட குடுத்திருக்கிறேன் என்று மூளையைச் சுரண்டிக் கொண்டிருக்கிறேன். அதுக்குள் கிடைத்தது என்றால் அவசியம் கொண்டு வருகிறேன். எதுக்கும், சந்திப்பு நடக்கிற அன்னைக்கு, காலையிலே ஒரு ரிமைண்டர் கால் கொடுங்க. மெமரி ப்ளஸ் சாப்பிடுகிற ஆசாமி நான் 🙂

 20. பிரகாஷ்,

  அருணா சொன்னதை செய்துவிட்டேன். நீங்க சொன்னதும் சரியே. இந்த மாதிரி அறிவிப்புகளைத் தவிர்ர்ப்பது நல்லது என்பதே என் விருப்பம். ஆனால் இது பொதுவான அனைத்து வலலப்பதிவருக்கும் ***சமமாக பலன்கிட்டக்கூடிய*** ஒன்று என்பதால் இம்மாதிரி அறிவிப்புகளை மட்டும் செய்யலாம். ‘என் வீட்டில் கல்யாணம்’, ‘என் நண்பர் புத்தகம் வெளியீடு… ‘ போன்ற விஷயங்களை, அனைத்து வலைப்பதிவர்களும் கலந்துரையாட இவையும் ஒரு வாய்ப்புக் கொடுக்கும் என்றாலுமே, ***கிட்டும் பலன் எல்லாருக்கும் சமமாக இல்லை*** என்பதால் வெளியிட இயலாது என்பதையும் சொல்லிக்கொள்கிறேன்.

 21. நான் ஆஜர் பா!
  ஆனா சண்டை வராம யாராவது பார்த்துக்க முடியுமா?

  வா.மணிகண்டன்.

 22. //நான் ஆஜர் பா!
  ஆனா சண்டை வராம யாராவது பார்த்துக்க முடியுமா? -.மணிகண்டன்.//

  வாங்க.. வாங்க.. சண்டை வேணாமா? மறுமொழியிலே போட்டுக்கிற சண்டையை, ஒரு நாள் ஆ·ப்லைன்லே போட்டாதான் என்ன ? 🙂

 23. கலந்து கொள்ள ஆர்வமிருந்தாலும், வாய்ப்பு இல்லை. வலைப்திவர்களின் ஒரு மாலை நேர சந்திப்பிற்கு வாழ்த்துக்கள்!

  ”நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.”

  நண்பர்கள் ஒருவரையொருவர் தளராமல் தாங்கிக் கொள்ளுங்கள்

 24. கலந்து கொள்ள ஆர்வமிருந்தாலும், வாய்ப்பு இல்லை. வலைப்பதிவர்களின் ஒரு மாலை நேர சந்திப்பிற்கு வாழ்த்துக்கள்!

  ”நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.”

  நண்பர்கள் ஒருவரையொருவர் தளராமல் தாங்கிக் கொள்ளுங்கள்.

 25. காசி, என் வேண்டுகோளை ஏற்றுகொண்டதற்கு மிக்க நன்றி 🙂

 26. சென்னை வலைப்பதிவாளர் சந்திப்புக்கு எனது முன் வாழ்த்துக்கள். ஒலி,ஒளிப் பதிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

 27. ப்ரகாஷ்… இந்த ஐடியா உங்களுக்கு கொஞ்சம் முன்னால உதித்திருக்கலாம்!… எதாவது சொல்லி கிளம்பியிருப்பேன். ம்ம்ம்… மிஸ் பண்ணப் போறேன் 😦

 28. ஆஹா… நல்ல சந்தர்ப்பம் ஆனாலும் என் போன்ற பலரால் கலந்துக் கொள்ள முடியாது. இருப்பினும் நண்பர்களே.. தோழியர்களே அந்த மாலைப் பொழுது மகிழ்வை ரசனைக் குன்றாமல் நீங்கள் அனைவரும் தமிழ்மணத்தில் அள்ளி வீசுவீர்கள் என்று காத்துக் கொண்டிருக்கிறோம்.

 29. நாங்க ஊர்ல இருக்கிற நேரத்திலே இந்த மாதிரி ஐடியாவெல்லாம் உங்களுக்கு தோணாதே :-((

 30. மூர்த்தி : நன்றி. ஒலிப்பதிவு/ஒளிப்பதிவு கிடைக்குமா என்று தெரியவில்லை. நிழற்படப் பதிவு நிச்சயம் கிடைக்கும்.

  நிர்மலா : அதுக்கென்னங்க… நீங்க ஏர் டெக்கான்லே, சீஸன் டிக்கட் வாங்கி வெச்சிருக்கறதா கேள்விப்பட்டேனே? சட்டுன்னு கிளம்பி வந்துடுங்க..

  புதுமாப்பிள்ளை : அதுக்கென்ன ஓய்… நீர் வர்ரப்பவும் ஒரு மீட்டிங் போட்டுட்டா போச்சு.

  அபூ முஹை, சுடர் : நன்றி.

 31. ஒரு வாரம் கழித்து வைத்திருந்தால் நானும் கலந்து கொண்டிருக்க முடியும்.
  பரவாயில்லை. வாழ்த்துக்கள்.

 32. ப்ரதீப் : வலைப்பதிவாளர் சந்திப்புக்கான அறிவிப்பு, அனைத்து வலைப்பதிவாளர்களுக்கும் தான். நான் என் பதிவில் குறிப்பிட்டு இருந்தது, ஒரு illustrative list மட்டுமே. ஆகவே, சென்னையில் இருக்கிற நீங்கள், by default, வந்தே ஆகவேண்டும். வாங்க, மத்ததை, நேர்ல பேசிக்குவம்.

 33. பெரிய மனது படைத்தவர்கள், ஒரு பெரிய பை நிறைய “நொறுக்ஸ்” சகிதம் வருவார்கள் என் எதிர்பார்க்கலாமா? கடற்கரை சுண்டல் வகையறா அவ்வளவு சுகமில்லை என்று கேள்வி.

  சுண்டல், கடலை தவிர உங்கள் சௌகரியப்படி வடை (மசால்வடை உட்பட), முறுக்கு, தேன்குழல், தட்டை, நாடா, சீடை, டைமண்ட் மிக்ஸர், பொரி, காராசேவு போன்ற தினுசுகள் கொண்டுவரத் தடையே இல்லை. ஒரே அயிட்டத்தை பலர் கொண்டு வந்தால் என்ன செய்வது என்கிறீர்களா? கவலைப் படாதீர்கள். நான் எதற்கு இருக்கிறேன்!

  மிளகாய் பஜ்ஜி மட்டும் கடற்கரைப் பிராந்தியத்திலேயே வாங்கிக் கொள்ளலாம். ஆனால் Dutch முறை அமுலில் இருக்கும்!

 34. அன்புள்ள பிரகாஷ்,

  உங்க இணைய நண்பர்கள் சந்திப்பு வெற்றிபெற வாழ்த்துக்கள்!!! கட்டாயமா அதைப் பத்தி விளக்கமா எழுதுங்க! படிச்சாவது திருப்திப் பட்டுக்கறேன்.

  என்றும் அன்புடன்,
  துளசி.

 35. என்னப்பா நாளைக்கு தயாராகிட்டீங்களா………..

 36. // மேலதிக விவரங்கள், அடுத்த பதிவில். //

  பிரகாஷ், அடுத்த பதிவு எப்போபோபோபோபோ 🙂 ?

 37. Since last 2 days, i’m unable to post a new message. Hence im posting it here

  வலைப்பதிவாளர் சந்திப்பு – நினைவூட்டல்

  நாள் : ஏப்ரல் 9, 2005
  இடம் : காந்திசிலை , மெரீனா கடற்கரை
  நேரம் : மாலை ஐந்து மணி

  வலைப்பதிவாளர் சந்திப்புக்கு இத்தனை உற்சாகமான வரவேற்பு இருக்கும் என்று முன்பே தெரிந்திருந்தால், இன்னும் முன்னதாகவே ஏற்பாடு செய்திருக்கலாம் என்று தான் முதலில் தோன்றியது.

  வர இயலாது ஆனால் வாழ்த்துக்கள் உண்டு என்று வாழ்த்திய நண்பர்களுக்கு முதற்கண் நன்றி.

  எனக்குப் பரிச்சயம் ஏற்பட்டிருந்த நண்பர்கள் தவிர்த்து ” அதெப்படி என் பெயரை விடலாம்? , நானும் அவசியம் வருவேன்” தனிமடலில் உரிமையுடன் கோபித்துக் கொண்ட நண்பர்களுக்கும் நன்றி.

  இந்தச் சந்திப்புக்காகவே, வெளியூரில் இருந்து வருவதாக வாக்களித்த நண்பர்களுக்கும் நன்றி.

  தொலைபேசியிலும், தனிமடலிலும், பொதுவிலும், இந்தச் சந்திப்புக்கு வருவதாக் வாக்குக் கொடுத்த நண்பர்களுக்கு கொஞ்சூண்டு நன்றியும், எக்கச்சக்கமான எச்சரிக்கையும் மட்டுமே… “அச்சச்சோ மறந்தே போச்சு, மாமா பொண்ணுக்கு காது குத்தல், ஆபீசில் லீவ் கிடைக்கலை, சுண்டு விரலில் சுளுக்கு, இந்தியா பாகிஸ்தான் மேட்ச், ஆட்டோ கிடைக்கலை,” என்று சில்லறைக் காரணங்களுக்காக டகால்ட்டி கொடுக்க நினைத்தால்…

  நினைத்தால்? என்ன செய்ய முடியும்?

  ஒண்ணும் செய்ய முடியாது… அடுத்த ஒரு வாரத்துக்கு உங்க ப்ளாகர் வேலை செய்யாமல் போகக் கடவது
  என்ற சாபம் மட்டும் குடுக்கமுடியும்.

  அதனாலே கட்டக் கடேசியாக சொல்லிக் கொள்வது என்ன என்றால்…

  come, participate and make this event a memorable one.

 38. அல்வாசிட்டி.விஜய் says:

  சும்மா சீரியஸ பேசாம ஒருத்தரையொருத்தர் கலாய்ச்சிக்கோங்க. முதல் சந்திப்பு தானே. ரிலாக்ஸ்டாக கலக்குங்கள். ஸ்கூல் பையன மாதிரி பெஞ்சில ஏத்தி விட்டு உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லாமல், எல்லாத்தையும் சுமூகம பேசித் தீர்த்துக்கோங்க. ஹி ஹி… அடுத்த ப்ளாக்கர் மீட்ல நானும் சிங்கப்பூர்ல இருந்து டிராண்ஸ்பர் ஆகி சென்னையில் உங்க ஜோதியில ஐக்கியமாகிருவேன்னு நினைக்கிறேம்….

 39. நம்ம பெங்களூர் மக்கள் பலர் கலந்துக்கப் போகிற இந்த கலக்கல் விழாவில் நான் இல்லையே என்று மிக வருத்தமாக இருக்கிறது. எப்படி இருந்தது நிகழ்ச்சி என்று அறிந்து கொள்ள ஆர்வமுடன் காத்திருக்கிறேன்.

 40. பிரகாஷ்,

  முடிந்தால் இந்த சமாச்சாரத்தில் மக்களின் எண்ணம் என்ன என்று கேட்டுப்பாருங்கள். ஏனென்றால் பெரும்பான்மையோர் பங்கேற்காவிட்டால் நான் மெனக்கெட்டு அந்த பிடிஎஃப் தயாரிக்கும் நிரலில் நேரத்தை வீணாக்கவேண்டியதில்லை. அதற்காக இந்த உதவி.

  ஆமா, நீங்களே அதுக்கப்புறம் பேசக்காணோம்?…

  நன்றி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s