arbor mentis – The cucumber seller of Chennai

சமீபமாக, இந்தியாவைப் பற்றியும் , குறிப்பாக தமிழ் நாடு பற்றியும் ஆஹா ஓஹோ என்று புகழும் கட்டுரைகள் சிலவற்றை பத்திரிக்கையில் படிக்க நேர்ந்தது. அந்த வரிசையில் இங்கே ஒரு கட்டுரை. இந்த வார பிசினஸ் வேர்ல்ட் பத்திரிக்கையில் வந்த column. அது.

அந்தக் கட்டுரை

படிங்க, படிச்சுப் பாத்துட்டு ஏதாச்சும் சொல்லணும்னு தோணினா சொல்லுங்க

5 thoughts on “arbor mentis – The cucumber seller of Chennai

 1. கொஞ்சம் ஓவராகத்தான் தெரிகிறது. வெள்ளரிக்காய் வியாபாரிக்கு பொது அறிவு பொங்கி வழிய சாத்தியமே இல்லை என்று நான் சொல்லவில்லை. கொதிக்கும் வெய்யிலில் தன் காலில் செருப்பு ஒன்றுகூடப் போட்டுக்கொள்ளாமல் ரூ. 1 க்கு ஒரு வெள்ளரி கொடுத்து “customer satisfaction” தான் முக்கியம், தன் வாழ்க்கை முக்கியமில்லை என்று நினைக்கும் பரமாத்மாவை நான் இதுவரை பார்த்ததில்லை. மேலும் ரூ. 1 சுப்ரதோ பாக்ச்சிக்கு வேண்டுமானால் குறைவானதாகத் தோன்றலாம். ஆனால் சந்தைப் பொருளாதாரம் என்று ஒன்று இருப்பதை அவர் அறியாமல் விட்டாரோ என்னவொ? சென்னையில் தெருவுக்குத் தெரு இதே, அல்லது இதைவிடக் குறைந்த விலையில்தான் வெள்ளரிக்காய் விற்கிறது, ஸ்ரீரங்கத்தில் இதில் கால் பங்குதான்!

  மற்றபடி சென்னையில் வெளியாகும் தமிழ் செய்தித்தாள்களிலும், ஆங்கில செய்தித்தாள்களிலும் கர்நாடக பட்ஜெட்டைப் பற்றியோ, மஹாராஷ்டிர பட்ஜெட்டைப் பற்றியோ வெறும் மேலோட்டமான செய்திகளை மட்டும்தான் எப்பொழுதும் பார்த்திருக்கிறேன். ஒரிஸ்ஸாவில் பட்ஜெட் என்பது கூட வராது. பட்ஜெட் முடிந்ததும் எதோவொரு மஹாபாத்ரா பட்ஜெட் அறிக்கையைப் படித்தார் என்று நான்கு வரிச்செய்தி மட்டும் இருக்கும். உண்மையா, இல்லையா சொல்லுங்கள்…

 2. சொன்னா நம்ப மாட்டீங்க… இந்தக் கட்டுரையை படித்து விட்டு, என் கொலீகுடன் பேசிக் கொண்டிருக்க, அவன் இது டுபாகூர் மேட்டர் என்று கேரண்டியாகச் சொன்னான். எனக்குக் கூட அப்படித் தோன்றியது. ஆனால், அத்தனை பெரிய மனுஷர்
  பொய் சொல்ல மாட்டரே என்று இங்கே எடுத்துப் போட்டேன்.

 3. நுங்கம்பாக்கம் ஹை ரோடில் நல்லி சில்க்ஸ் எங்கே இருக்கிறது என்று இந்த நச நச மழைக்கிடையில் தேடினேன் – கிடைக்கவில்லை. உங்களுக்குக் கண்ணில் பட்டால் சொல்லுங்கள்.

  இந்த ரீதியில் போனால் இதுபோல் இன்னொரு கட்டுரை வர வாய்ப்பிருக்கிறது:-

  சில ஆண்டுகளுக்கு முன் வீரப்பனை காட்டில் சந்தித்தேன், அவன் யானையின் பலான பாகத்தை full bloom-ல் கட் பன்ணி என்ன லாவகமாக வெள்ளரிக்காய் துண்டுபோல் slice செய்து அதில் பஜ்ஜி போட்டுக் கொடுத்தான்! அவன் அமெரிக்க அதிபர் தேர்தல் முறை பற்றியும் பாலஸ்தீனிய விடுதலை பற்றியும் எவ்வளவு தெளிவான கருத்துக்களை கான்வெண்ட் இங்க்லீஷில் சொன்னான்.
  அப்படியே அவனது பந்துக்களைத் தொட்டு வணங்கினேன்!

 4. SK :-))

  ப்ரகாஷ், நானும் பத்ரியின் கருத்தோடு ஒத்துப்போகிறேன். ஒரு வேளை, பெண்களூர்காரருக்கு சென்னையில் ஒரு ரூபாய்க்கு வெள்ளரிப்பிஞ்சு கிடைப்பது ஆச்சர்யமான விஷயமாக இருக்கலாம். நான் திண்டிவனத்தில் படித்துக்கொண்டு இருந்தபோது இரவு நேரங்களில் ஒரு ரூபாய்க்கு ஐந்து பச்சை வாழைப்பழம் கிடைக்கும். இதை நம்ப முடியுதா?

  பொதுஅறிவு விஷயம், நம்ம ஊர்ல முடித்திருத்தகத்திலே இதை விட சூப்பரா பொதுஅறிவு கொட்டி கிடக்கும். நல்லவேளையாக இந்த column எழுதியவர் அங்கே எல்லாம் போகவில்லை.

 5. பொதுவாகவே வட இந்தியர்களுக்கு தென்னிந்தியர்கள் பற்றி, எளிமையானவர்கள் – விவரமானவர்கள் என்று ஒரு அபிப்பிராயம் உண்டு. இந்த கருத்தோடு அவர் பார்த்திருப்பார். ஆனாலும் போன வாரம் BW ல் அந்தக் கட்டுரையைப் படித்தபோது அசந்துதான் போய்விட்டேன். முதலில் சந்தேகமாக இருந்தாலும், பிறகு தோன்றிற்று -ஒரு நல்ல பத்திரிகையில் பத்தி எழுதுபவர் ரீல் விடுவாரா என்று. தவிர, இப்போல்லாம் வேலையில்லா திண்டாட்டத்தில் நிறைய பட்டதாரிகள் எந்த வேலையானாலும் செய்யத் தயாராக இருப்பதுதான் உண்மை நிலை. Ph.D படித்தவர் ஓட்டிய ஆட்டோவில் பயணம் செய்திருக்கிறேன். நன்றாக எல்லா விஷய்ங்களைப் பற்றியும் பேசிக்கொண்டே வண்டி ஓட்டினார். இப்படி பலர். இருந்தாலும் நுங்கம்பாக்கம் ஹைரோடில் “நல்லி” கொஞ்சம் நிறையவே இடிக்கிறது :-)பார்த்த இடம் எது என்று மறந்து போயிருப்பார் 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s