G-19 ரோகிணி தியேட்டர்

G-19 ரோகிணி தியேட்டர்

பிபி வாயால் பிரம்மரிஷி பெற்ற படமாச்சுதேன்னு கொஞ்சம் கேஷ¤வலாத்தான் ரெயின்போ காலனி படத்தைப் பார்க்கப் போனேன். சும்மா சொல்லக் கூடாது, இயக்குனர் செல்வராகவன் அடி பின்னியிருக்கார். ரீடி·ப் தளத்துலே சமீபத்துலே செல்வராகவன் நேர்காணல் ஒன்றை படிச்சப்போ, ஒரு சுமாரான, அதி தீவிர புத்திசாலியல்லாத, சும்மா ஊர்சுற்றிவருவதைத் தவிர வேற எதுவுமே தெரியாத, ஒரு நகரத்து நடுத்தர குடும்பத்துப் பையனோட கதை தான் இந்த ரெயின்போ காலனின்னு சொல்லி இருந்தார். உண்மை.

பன்னிரண்டு பேப்பர் அர்ரியர்ஸ் வெச்சிருக்கிற ஒரு பிகாம் இறுதியாண்டு மாணவனுக்கும், பிரசிடென்ஸி காலேஜில் பி.எஸ்ஸி கம்ப்யூட்டர் சைன்ஸ் இறுதியாண்டு படிக்கிற ஒரு சேட்டு பொண்ணுக்கும் இடையில் நடக்கிற சம்பவங்களும், நிலவுகின்ற உறவு முறைகளும், அதன் முடிவும் தான் மொத்த கதை.

முதலிலே வெறுப்பு.. பிறகு பச்சாதாபம், பின் நட்பு, அதுக்குப் பிறகு காதல், காமம்ன்னு…. இன்ச் இன்ச்சா படம் விரியுது. பல கட்டங்களிலே நுணுக்கமான காட்சிகள். சோனியா அகர்வாலின் அருமையான முகபாவங்கள்… ஏ-க்ளாஸ். இன்னிக்கு தேதிக்கு டைட் க்ளோசப் வைக்கிற தைரியத்துக்காகவே பாராட்டலாம்.

சினிமாத்தனம் கொஞ்சமும் இல்லாத பல காட்சிகள். இந்த காட்சிக்குப் பிறகு இதுதான் வரணும்னு, நம்மை, நம் சினிமாக்கள் தயார் செஞ்சு வெச்சிருக்கு. அது அத்தனையும் உடைத்து விட்டு, நிஜவாழ்வில் அந்த சம்பவம் நடந்தால் எப்படிப் பட்ட விளைவுகள் வருமோ, அது படத்திலே வருது. அதன் காரணமாகவே படம் பல இடங்களில் ஸ்லோவாகச் செல்வது போன்ற பிரமை. சினிமா காட்சி ரூபம் என்பதை நன்றாகப் புரிந்து வைத்துக் கொண்டிருக்கிறார் இயக்குனர். படம் முடியும் தருவாயில், ஹீரோ கதிர், தற்கொலை செய்ய முயற்சி செய்வதாக வரும் காட்சி சுமார் பதினைந்து நிமிடம் நீடிக்கிறது. ஒரே ஒரு வசனம் கூட இல்லை. முழுக்க முழுக்க விஷ¤வல்களும், நம்ம சிங்கக்குட்டியின் ராக ராஜாங்கமும் தான்.

ஊகிக்க முடியாத படிக்கு உச்சகட்ட காட்சி.

closer to reality அப்படின்னுவாங்களே.. அது போன்ற, திடுக்கிடும் திருப்பங்கள், வில்லன் என்று எதுவும் இல்லாத படம். சில இடங்களைத் தவிர ( நடுவீதி சண்டைக் காட்சி) மத்த படி முழுப் படமும் நம்ம காலனிக்குள்ளே நடக்கிற கதை மாதிரி இருக்கு.

ஆனால், இத்தனை நல்ல படம் எல்லாம் தமிழ் நாட்டு ரசிகமகாஜனங்களுக்கு ஒத்துக்குமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி..

3 thoughts on “G-19 ரோகிணி தியேட்டர்

  1. 1/3rd அரங்கம் மட்டும் தான் நிரம்பி இருந்தது. அதான் அந்த கடைசி வரி. ஆனா இப்பவே சொல்ல முடியாது.. இன்னும் ரெண்டு மூணு வாரம் கழிச்சு, சொல்லாம்

  2. its running to packed houses till date in udayam. i havent seen the movie yet,but dont you think the dubbed voice for heroine is odd.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s