பொழுது போகலைன்னா….. இப்படித்தான் ஏதாச்சும்….

சில வருஷங்களுக்கு முன்னே ( 17/18 வருஷம் இருக்கலாம் ) , ஒரு பயணம் போன போது, அந்த பி.ட்டி ஓட்டுனர் வச்சிருந்த ஒலிநாடாவிலே இந்தப் பாட்டைக் கேட்டிருக்கிறேன். அந்தப் பாட்டு, தென்னாற்காடு வள்ளலார் மாவட்டங்களிலே ரொம்ப பிரபலமான பாட்டுன்னு அந்த ஓட்டுநர் சொன்னது நினைவிருக்கு. முதல் தடவை கேட்கிறப்போ, ஒரு மாதிரியா இருந்தாலும், கேட்க கேட்க மனசு அந்தப் பாட்டிலே ரொம்பவும் லயிச்சு போச்சு. பயணம் முடிகிற வரை, திரும்பத் திரும்ப அந்தப் பாட்டைப் போட்டுக் கேட்டுக்கிட்டே இருந்தோம்.

ஒரு நல்ல வாட்ட சாட்டமா இருக்கிற ஆனால் தன் அழகு பத்தின அக்கறை இல்லாம இருக்கிற , வெள்ளந்தியான கிராமத்துப் பெண், தன்னை யார் யாரெல்லாம் சுத்தி வராங்கன்னும்,. தன் கிட்ட என்ன இருக்குதுன்னு எல்லாரும் இப்படி மேல வந்து விழறாங்கன்னும் புரியலயேன்னு அப்பாவித்தனமா பாடற ஒரு அட்டகாசமான கிராமத்து கானாப் பாட்டு. பாடல் வரிகள் சிலது வெவகாரமா இருக்கும் கொஞ்சம் விரசமாவெல்லாம் கூட இருக்கும்… இல்லே இல்லே… நம்ம நவீன பெண்கவிஞர்கள் டைப்ல இல்லே… இது கி.ரா டைப்.

நான் முதல்ல கேட்ட சமயத்திலே நான் பள்ளி மாணவன்கிறதால, காசட்டு வாங்கற அளவுக்கு எல்லாம் துட்டு இல்லை. வயசுக்கு வந்த பின்னாலே வாங்குவோம்னு நெனைச்சு விட்டுட்டேன். . பிறகு தேடித் தேடிப் பார்த்தும் கிடைக்கவேயில்லை

அந்தப் பாட்டின் முதல் சில வரிகள் மட்டும் நினைவில் இருக்கு. யார் பாடின பாட்டு, யார் எழுதினது, மத்த வரிகள் என்னன்னு ஞாபகம் இல்லை. யாருக்காவது முழுப்பாட்டும் தெரியுமா?

நா ஆத்துப் பக்கம் குளிக்கப் போனா

அந்த அம்பிப் பய என்னப் பாக்குறான்

நான் அரிசி வாங்க கடைக்குப் போனா

அந்த அல்லாப்பிச்சை என்னப் பாக்குறான்

நா கோயிலுக்கு கும்பிடப் போனா

அந்த கோவிந்தன் குட்டி என்ன பாக்குறான்

நான் சிம்லா ஸ்பெஷல் சினிமா போனா

விசிலடிக்கும் வில்லியம்ஸ¤ என்னப் பாக்குறான்

ட்யூன்

தானானனா தன்ன தனனானனா தன்ன

தனனானனா தன்ன தானனா

தானானனா தன்ன தனனானனா தன்ன

தனனானனா தன்ன தானனா

தானானன்னா தன்னனனானா தன்ன

தானன தானன தானன்னா

தானானன்னா தன்னனனானா தன்ன

தானன தானன தானன்னா

இந்த ட்யூன்லே பாடிப் பார்த்து, எங்கயாச்சும் கேட்ட மாதிரி

இருக்கான்னு சொல்றீங்களா?

3 thoughts on “பொழுது போகலைன்னா….. இப்படித்தான் ஏதாச்சும்….

  1. ஒரு தமிழ்ப்படத்தில, ஜெயமாலினி இந்தப் பாட்டுக்கு ஆடி இருக்கிறார் பிரகாஷ்…

    சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்குங்க…:-)

  2. கொஞ்சம் விரசமாவெல்லாம் கூட இருக்கும்… இல்லே இல்லே… நம்ம நவீன பெண்கவிஞர்கள் டைப்ல இல்லே… இது கி.ரா டைப்.

    :)விவகாரமான ஆளுங்க நீங்க

  3. I don’t know about the root of this song, but I heard it in the movie ‘Paritchaikku Neramachu’ sung by LR Easwari, music by MSV and the actress is ‘Silk’ Smitha.

    Well…If you ask me about Pythogres theorem that I learnt during that time…I don’t remember that :).

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s