ஹ¤க்கா, ப.சிதம்பரம் & வாஸந்தி

ஹ¥க்கா பற்றி மரத்தடியிலே பேச்சு கிளம்பியதுமே, ஒருத்தரை ஆவலுடன் எதிர்பார்த்தேன். ஆசாத் பாய்தான். மாலன் வந்தார். பாயைக் காணவில்லை. இன்னும் யாராரோ வந்தார்கள், பாயைக் காணவில்லை. திடுமென வந்தார். சூப்பரான ஒரு மடலை உள்ளிட்டிருந்தார். அட்டகாசமான மடல் அது. கல்கத்தாவில், அப்படிப்பட்ட ஹ¥க்கா பார் ஒன்று திறந்த போது, இந்த ஹ¤க்கா பார்கள்கள் பற்றி, சென்னைக்கு வந்திருந்த ஆசாத் பாய் நிறைய சொன்னார். அல்ப சொல்பம் என்று நினைத்திருந்த ஹ¤க்காவுக்குள் இத்தனை விஷயங்களா? டேங்கப்பா. மாதாமாதம்,. சிகரட்டுக்கு ஆகும் செலவை கணக்கு பார்த்தாலே, மயக்கம் வரும். ஒரு இழுப்புக்கு 3000 ரூபாய் செலவு ஆகும் ஹ¤க்கா பழக்கம் இருக்கிறவர்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது. costly pursuit. no?

0

pchidambaram

கல்கியில் சிதம்பரம் கொஞ்சம் போரடிக்கிறார் என்று நினைக்கிறேன். கல்கியில் வரும் கட்டுரைகள் எல்லாம், கொஞ்சம் கலகலப்பாக, – சீரியஸ்ஸான விஷயமாக இருந்தாலும் – இருக்கும். ரொம்ப வறட்சியாக இருக்கிறது. என்றாலும், அந்த சிந்தனைகள் எண்ணங்களுக்காகப் படிக்க வேண்டியிருக்கிறது. சட்டத்தின் நோக்கங்களும் காரணங்களும் பற்றிய இந்த வாரக் கட்டுரைக்கு, அவர் எடுத்துக்காட்டியிருந்த, சொந்த அனுபவம் மிகப் பொருத்தம். ராஜீவ் காந்தியின் அமைச்சரவையில் அவர் வகித்த வர்த்தக அமைச்சர் ( தனிப்பொறுப்பு) பதவி, இலங்கைத் தமிழர் பிரச்சனையின் போது நடந்த பேச்சுவார்த்தையில் அவரது பங்கு, தேசிய ஜனநாயக அரசில் வகித்த நிதித்துறை அமைச்சர் பதவி, அவர் அறிமுகப்படுத்திய VDIS என்ற திட்டம், புதிய பொருளாதாரத்துக்கான ( new economy) புதிய சிந்தனைகள், எண்ணங்கள் இவை பற்றியெல்லாம் எழுதுவார், எழுதுவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

ஹ¥ம்ம்ம்ம்….

0

vaasanthi

அதே கல்கி இதழில் வந்த வாசந்தியின் கட்டுரைத் தொடர் ஒரு இனிய ஆச்சர்யம். எத்தனை நாளாகிறது வாஸந்தியைப் படித்து. அவர் என்னமோ எழுதிக் கொண்டு தான் இருக்கிறார், எனக்குத்தான் படிக்கக் கிடைக்கவில்லை. வடகிழக்குப் பின்னணியில் வந்த ஒரு நாவல், மூங்கில் பூக்கள் என்று நினைக்கிறேன். அதன் பிறகு, ஒரு சில கதைகள். திடுமென்று இந்தியா டுடேயின் ஆசிரியராகி விட்டிருந்தார். சில சமயம் அவரது அரசியல் சமூகக் கட்டுரைகளில் கூட, கவிதை தென்படும், குறிப்பாக பெண்ணியம் சார்ந்த கட்டுரைகளில். படைப்பிலக்கியத்தை பேக் சீட்டுக்கு தள்ளிவிட்டு, ஜர்னலிஸத்தை முதன்மையாகக் கருதிய அல்லது அப்படி நான் நினைத்துக் கொண்ட , எனக்குப் பிடித்த ரெண்டு எழுத்தாளர்களில் வாசந்தியும் ஒருத்தர். அந்த இன்னொருத்தர் யார்?

ஒன் செகண்ட் ப்ளீஸ்.. தோ வரேன்..

அன்புடன்

பிரகாஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s