பழைய சரக்கு! (It’s me…. again…..)

இன்னிக்காவது வலைப்பூவை தூசி தட்டி எடுக்காட்டி, மவனே கிழிச்சிறுவேன் என்று ‘அன்பர்’ ஒருத்தர் மிரட்டல் விடுத்திருந்தார். அன்பர் நல்ல நண்பரும் கூட. அதனாலே மீண்டும் ஒட்டடை அடித்து, புது வண்ணம் பூசி, ஒரு சாளரத்தில் நோட் பேட், மற்றொன்றில் சுரதா எழுத்துரு மாற்றியுடன் உட்கார்ந்த பின்னர்தான் என்னத்தை எழுதுவதென்று புரியலை.

அதிகம் பேர் கண்ணில் பட்டிருக்க வாய்ப்பில்லாத ஒரு பழைய சரக்கை இங்கே தருகிறேன். சில காலம் முன்பு நண்பர்கள் வட்டம் என்ற அமைப்பிலே வந்த சரக்கு இது

நாளையில் இருந்து மீண்டும் ுதுச்சரக்குடன்.

***********

முருகனின் இங்கிலாந்து ·ஹாங்க் ஓவர் ( pun intended:-) )இன்னும் குறையவில்லை என்று

தெரிகிறது.

முருகன் குறிப்பிட்டிருந்த வீதிநாடகங்கள் பற்றி கேள்விப்பட்டிருந்தாலும் , அவ்வப்போது படித்திருந்தாலும், பிரளயன் போன்றவர்களின் துணை கொண்டு கமலஹாசன் , வீதி நாடகங்கள் பற்றிய ஒரு தோற்ற மயக்கத்தை ஏற்படுத்தினாலும், சென்னையின் கபாலிதியேட்டருக்கு அருகில் இருந்த

சடையப்ப முதலி தெருவில், ” ஹஹ்ஹா.. நீர்தான் ஜாஸ்சன் துரையோ ? , என்று வீர வசனம்பேசி நடித்த , நான் ஜாக்சனாக தோன்றிய அந்த நிஜமான வீதி நாடகத்தை தவிர்த்து இன்னொன்றை சிறப்பானது என்று என்று என்னால் ஒத்துக் கொள்ளவே முடியாது. இந்த அபிப்ராயம் மாறுதலுக்குட்பட்டதா என்றால், it depends.

0

வட்டத்துக்குள் நுழைந்த சரியாக பத்தாவது நிமிடத்தில், ஊருக்கு கிளம்பவேண்டி வந்தது.

போய் வந்து வந்து ஊடுகட்டலாம் என்று புறப்பட்டு அரக்கோணம் வழியாக சோளிங்கர் செல்லும்பேருந்தில் ஏறி அமர்ந்த கொஞ்ச நேரத்தில் காலியாக கிடந்த பக்கத்து சீட்டில் வந்து அமர்ந்தது ஒரு சிட்டு. சிட்டுக்கு ஒரு இருபது வயது இருக்கலாம்.

சாதாரணமாக மொபெசல் பஸ்ஸில் எல்லாம் இந்த மாதிரி அதிர்ஷடம் அடிக்காது. அன்றைக்கு லாட்டரி.

கையில் இருந்த ஜூவியை சுவாதீனமாக கேட்டு வாங்கி படித்தாள். ஓரிருமுறை லேசாக

புன்னகையை சிந்தினாள்.

கூட்டம் நிரம்பி வழிந்ததில், அந்த பெண்ணின் அருகாமை இன்னும் கொஞ்சம் அதிகமாகவே கிட்டியது. எதிர்பாராத தோள் உரசல்களும், ரோட்டின் குண்டு குழிகளும், சடன் ப்ரேக்குகளும் என்னை என் விடலை வயசுக்கு தள்ளின. ” கல்லூரியில் கூடப்படித்த டென்மார்க்கும் ( காரணப் பெயர்)

சேர நாட்டு ‘தாராள ‘ டெஸ்ஸி ஜேம்சும் நினைவுக்கு வந்தார்கள்.

இறங்குவதற்குள்…. ஒரு முறை…

சும்மா பேச்சுக் கொடுத்தேன். அரக்கோணம் போகிறாளாம். நான் சோளிங்கர் போகிறேன்

என்றதும் ‘ஓ’ என்றாள்.

” படிக்கிறீங்களா? ”

” இல்லைங்க ”

” பின்ன? எங்கேயாச்சும் வேலை பாக்கறீங்களா? ” என்று கேட்டதும்.

” ஆமா, ரெயில்வே போலீஸில் கான்ஸ்டபிளாக இருக்கிறேன். ஏன் கேக்கறீங்க? ”

0

கோபிகிருஷ்ணன்.

ஒரு வாரம் முன்னால் தான் இவரைப் பற்றி தெரியவந்து, இந்தாள் எழுதினமத்த கதையை எல்லாம் தேடணும் என்று முடிவுக்கு வந்த இந்த வாரத்தில்,இவர் மறைந்து விட்டார் என்று செய்தி கேட்கும் போது, என்ன மாதிரி

ரீயாக்ட் செய்ய வேண்டும் என்று கூட புரியவில்லை.

வருத்தமாக இருக்கிறது.

இவர் எழுதிய மற்ற படைப்புகளை முருகன் , பா.ரா போன்றவர்கள் முடிந்த போது வட்டத்துக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.

0

விருட்சம் கதைகள் கூடவே கிடைத்த இன்னொரு கலக்ஷன், ஆஸ்கர் பெற்ற திரைப்படங்களைப் பற்றிய ஒரு விவரமான தொகுப்பு. குடுத்த

முருகனுக்கு நன்றி.

இரண்டு புத்தகங்களாக இருக்கும் இத்தொகுதியில் ஆஸ்கர் பரிசுபெற்ற அனைத்து திரைப்படங்கள் பற்றிய விவரங்களும் இருக்கின்றன. படம் வெளியான வருடம், படத்தின் சினாப்சிஸ், நடிகர்கள், இயக்கியவர்

பெயர், அந்த படத்தில் யார் யாருக்கு விருது கிடைத்தது, யார் யார்விருதுக்காக நாமினேட் செய்யப்பட்டார்கள் போன்றவை வரிசைக்கிரமமாக

பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அதிலே பல படங்களை கேள்விப்பட்டிருக்கிறேன். சில படங்களைபார்த்திருக்கிறேன். படித்து முடித்த உடன், இது போல, நம் தேசியவிருது பெற்ற படங்களையும் யாராவது தொகுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தோன்றியது நிசம்.

படித்த பல சங்கதிகளை உடனடியாக யாரிடமாவது பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற உந்துதல் பலமாக எழுந்தது. எழுதுகிறேன்.

குறிப்பாக ஒன் ·ப்ளூ ஓவர் குக்கூஸ் நெஸ்ட்டின் என் கல்லூரி தொடர்பான நினைவுகள்.

சினிமா ஹிஸ்டோரியன் என்ற ஆசாமிகள் நம் ஊரில் குறைவு. தேடித்தேடி பிடித்தால், ராண்டார்கையும், தியோடர் பாஸ்கரனையும் இந்த

லிஸ்டில் சேர்க்கலாம். பிலிம் ந்யூஸ் ஆனந்தனை இந்த கணக்கில்சேர்க்க முடியாது. அறந்தை நாராயணன் இருந்தார். தினமணிகதிரில்

கிட்ட தட்ட நூறுவாரம் தொடராக வந்த அறந்தையின் சினிமா கட்டுரைகள் தொகுக்கப்

பட்டிருக்குமா என்று தெரியவில்லை. அதில் வந்த பல கட்டுரைகள்இன்னும் பசுமையாக நினைவிருக்கிறது. எஸ்.டி சுப்புலக்ஷ்மி, கிட்டப்பாடி.வி.குமுதினி, விஎன் ஜானகி, கே.ஆர்.ஆர், ரஞ்சன். பி.யு.சின்னப்பா

போன்ற பல பிரபலங்களை பற்றி வாரம் ஒருவர் என்ற கணக்கில்எழுதி வந்தார். கதிர் அப்போது குமுதம் சைசில் வந்துகொண்டிருந்தது.

கதிரில் கௌசிகனின் ஜுலேகா என்ற கதையும் அந்த நேரத்தில் வந்து கொண்டிருந்தது என்று நினைவு.

0

பாராவின் ரேடியோ எ·ப்எம் புரட்சிக்கு ஒரு ரீஜாய்ண்டர்.

இது நான் சத்தியமாக கேட்ட ஒரு விஷயம்.

வண்ணமணிமாலை என்ன்றொரு நிகழ்ச்சி, மாலை மூன்று மணிக்குசென்னை பண்பலையில் வரும். இப்போது வருகிறதா என்று தெரியவில்லை.

தினம் ஒரு பிரமுகர் வருவார். அவர் துறை சம்மந்தமாக நேயர்கள் தொலைபேசியில் கேள்வி கேட்பார்கள். இடையிடையே சினிமா பாட்டும் போடுவார்கள்.

இந்த நிகழ்ச்சியில் ஒருநாள்,

” அலோ, நான் ….. பேசுறங்க.. ” நேயர் ஒருவர்.

” வணக்கம் நேயரே, ..” இது நிகழ்ச்சியை நெறிப்படுத்தும் சர்க்கரை முருகேச

பாண்டியன்.

வந்திருக்கும் பிரமுகரும் ( நீரிழிவு நோய் எக்ஸ்பர்ட் டாக்டர் ஒருவர் ) அலோ சொல்கிறார்.

” இந்த நோய் சம்மந்தமா, ஏதாவது உங்களுக்கு சந்தேக இருந்தா கேக்கலாம். அவர் கிட்ட பேசறீங்களா?

” இல்ல.. வேணாங்க.. எனக்கு … படத்துலேந்து ….. பாட்டு போடுங்க ”

” சரிங்க, போடறோம். நன்றி வணக்கம் ”

வேலை மெனக்கெட்டு ரேடியோ ஸ்டேஷனுக்கு வந்து நேரத்தை செலவழித்தஇதை விட அதிகமாக அந்த டாக்டரை அவமானப் படுத்த முடியுமா?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s