ஆகாசம் நீல நிறம்

ஒருத்தர் எழுதியிருந்தார், ( அவர் பெயரை இன்னும் நாற்பத்து எட்டு நாட்களுக்கு எழுதுவதில்லை என்று சங்கல்பம்:-) ,வேறொரொன்றுமில்லை, விடலைப் பட தீட்டை கழிக்க:-) )

He writes….

போன வருஷச் சாரலுக்கு குற்றாலம் போய்
கை (ப்) பேனா மறந்து
கால் (ச்) செருப்பு தொலைத்து
வரும் வழியில் கண்டெடுத்த
கல்வெள்ளிக் கொலுசு ஒண்ணு
கற்பனையில் வரைந்த
பொற்பாத சித்திரத்தை
கலைக்க முடியலையே இன்னும்.

விக்ரமாதித்யன் எழுதிய ‘ஆகாசம் நீல நிறம்’ என்ற தொகுப்பில் இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளியான அபாரமான கவிதை இது…..

இந்த அபாரமான கவிதை கவனிக்கப் படாதது ஆச்சர்யம்தான். அதற்குப் பரிகாரமாக, லட்சக்கணக்கான வாசகர்கள் இதை கவனிக்கட்டும் என்று தீக்குச்சி என்ன தீப்பந்தம் ஏற்றிக் காண்பிப்பதில் பெருமை அடைகிறேன்.

இந்தக் கவிதையும் புரிவதில் உங்களுக்கு சிரமம் இருக்காது என்று தோன்றுகிறது. கை (ப்) பேனா, கால் (ச்) செருப்பு ப்பன்னா, ச்சன்னாவை எதற்கு கவிஞர் அடைப்புக் குறிக்குள் போட்டார் என்று கேட்டு உங்களைச் சங்கடப்படுத்த விரும்பவில்லை.

என் கேள்வி? அந்த ப்பன்னாவையும் ச்சன்னாவையும் பிராக்கெட்டுக்குள் போட்டதன் தாத்பர்யம் என்ன? வெளியே போடுவதற்கும், உள்ளே போடுவதற்கும் என்ன வித்தியாசம்? கிளப்புக் கவிராயர்கள் சொல்வார்களா?

ஏதேது, நீயெல்லாம் கவிதை பத்தி பேச ஆரம்பிச்சுட்டியா, கிழிஞ்சது லம்பாடி லுங்கி என்று ஆராவது முறைப்பதற்குள்ஓடிவிடும்

ஒரு வெள்ளந்திராயன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s