iraNdu ilakkiya kootangaL

ஞாயிறன்று நடந்த இலக்கியக்கூட்டம், இளையபாரதி வெளியிட்ட ஏழு நூல்களின் வெளியீட்டு விழா.

கல்யாண்ஜி தலைமையேற்க, அசோகமித்திரன், ஞானக்கூத்தன், இன்குலாப், கலாப்ரியா, கவிக்கோ
அப்துல்ரகுமான், நடிகர் நெப்போலியன், முன்னாள் அமைச்சர் ஆர்காடு வீராசாமி ஆகியோர் வாழ்த்திப் பேச,கலைஞர் ஏழு புத்தகங்களையும் வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார்.

அரங்கு முழுக்க, பல எழுத்து, சினிமா பிரபலங்கள், இவர்களுடன் எனக்கு ஏற்கனவே அறிமுகமான பா.ராகவன்,மற்றும் வெங்கடேஷ்.

வாழ்த்திப் பேசிய பலரும், கலைஞர் அவர்களை வாழ்த்திப் பேசிவிட்டு, போகிற போக்கில்,
இளையபாரதிக்கும் வாழ்த்துச் சொன்னார்கள். இதிலே, அசோகமித்திரனும், ஞானக்கூத்தனும் விதி விலக்கு.மேலும், வெளியிடப்பட்ட நூல்கள், பெரும்பாலும் கவிதை நூல்களாகவும், குருதத், அகிரா குரோசாவா போன்ற திரைப் படைப்பாளிகள் பற்றிய நூல்களாவும் இருந்ததாலும், நான் அவற்றை இதற்கு முன் வாசித்திராததாலும்,என்னால், அந்த பேச்சுக்களில் ஒன்ற முடியவில்லை.

அழகிய சிங்கர் , பாராவுக்கு தந்த லேட்டஸ்ட் ” நவீன விருட்சத்தை’ சுட்டுக் கொண்டு ஒரு மூலையில் பதுங்கிவிட்டேன்.

( யாராவது படித்தீர்களோ? அதும் குறிப்பாக அ.சி எழுதிய ஸெல்போன் கவிதை? சூப்பர்)

இறுதியாக, கலைஞர் தன் உரையின் இறுதியில், ” இளையபாரதி, ஒரு திராவிட இயக்க எழுத்தாளர்தான் ‘ என்று அடித்துச் சொன்னதும், அருகில் அமர்ந்திருந்த பல எழுத்தாளப் பிரபலங்கள் நமுட்டு சிரிப்பு சிரித்தனர். என்ன காரணமோ அறியேன்.

விழாவுக்கு சென்றதிலே முக்கியமாக நினைப்பது, மூத்த கவிஞரும், ராயருமான, திரு. வைத்தீஸ்வரன் அவர்களை சந்தித்து ஒரு சில மணித்துளிகள் உரையாட கிடைத்த சந்தர்ப்பத்தைத்தான்.

இனி,

ஜெயமோகனின் புத்தக வெளியீட்டு விழா.

இந்த விழாவினை முழுதாக பத்ரி ‘ கவர்’ செய்து விட்ட படியால், விழாவில் கண்ணில் பட்ட சில
விஷயங்களை மட்டும் தருவதோடு நிறுத்திக் கொள்கிறேன்.

1. அழைப்பிதழிலே பெயர் போட்டிருந்த லா.சா.ரா வரவில்லை.

2. முதலிலே பேசிய தோழர் ஜோதிபிரகாசம், எடுத்த எடுப்பிலேயே கன்னா பின்னா வென்று
எழுத்தாளர்களையும், நவீன இலக்கியவாதிகளையும் தாக்கோ தாக்கென்று தாக்கிவிட்டு, பின், ஜெயமோகன் தன் நண்பர் , அதனால், அவர் அழைத்ததால் விழாவுக்கு வந்தேன் என்றார்.

3. வாழ்த்திப் பேசிய அசோகமித்திரன், முந்தைய நாள் நடந்த விழா பற்றி ‘பொடி’ வைத்துப்
பேசினார். இரண்டு விழாக்களிலும் தலை காட்டியவர்கள் புரிந்து கொண்டு சிரித்தார்கள். என்றாலும் எனக்கு பாதி புரியவில்லை. போகப் போக இதல்லாம் புரியத் துவங்கிவிடும் என்று பாரா சொன்னார். 🙂

4. எழுத்தாளர் கந்தர்வன் பேசிய போது ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டார். ஜெயகாந்தன் தொடர்பான சம்பவம் அது. கந்தர்வன், மு.வ படைப்புக்கள் மீது காதல் கொண்டிருந்த ஒரு சமயத்தில், மு.வ . ஒரு இலக்கியக்கூட்டத்தில் பேசிக் கோண்டிருந்தார். அக்கூட்டத்துக்கு வந்திருந்த ஜெயகாந்தன், அருகில் இருந்த சிறுவரான கந்தர்வனிடம், ” யாரு பேசறா ? ” என்று கேட்டிருக்கிறார். அதற்கு கந்தர்வன், ” மு.வ., பேசிக் கொண்டிருக்கிறார்ம் கோட்டு போட்டுக் கொண்டு ” என்று சொல்லவும், அதற்கு ஜெயகாந்தன், ” என்ன, இன்னும் குளிர் விடலையாமா? ” என்று கேட்டாராம். இதை கந்தர்வன் சொன்னபோது, அரங்கில் எழுத்த சிரிப்பலை அடங்க நெடு நேரமாயிற்று.
நான் இதை சொன்னவிதத்தில், உங்களை சிரிக்கவைத்தேனா என்று தெரியவில்லை. ஆயினும், அந்த டைமிங்கும், கூடவே, முவ., ஜெயகாந்தன் பற்றி அறிந்தவர்களும், அங்கே இருந்ததால், அது நிகழ்ச்சியில் ஹைலைட்டாக இருந்தது.

4. ஜெயகாந்தன் பேசி இதுவரை நான் கேட்டதில்லை. அதிரடிகளுக்கு பஞ்சமிருக்காது என்று
கேள்விப்பட்டிருக்கிறேன். முன்னதாகப் பேசிய ஜோதிப் பிரகாசம் அவர்களது பேச்சுக்கு பதில் தருவதாக இருக்கும் என்று நினைத்தேன். ( குறிப்பாக, ” அது என்ன இலக்கியவாதி? இலக்கியத்துக்கு வாதம் வந்தா அது இலக்கியவாதமா?” என்று அவரது கிண்டலுக்கு). ஆனால், ஜெயகாந்தன் அதைப் பற்றியெல்லாம் பேசவில்லை. அவரது பேச்சு சௌஜன்யமாக இருந்தது. தான் விஷ்ணூபுரத்தை இன்னும் படிக்கவில்லை என்று சொன்னபோது ஆச்சர்யமாக இருந்தது. அதற்கு விளக்கமும் அளித்தார். ( ” ஒரு புத்தகத்தை படித்துத் தான் ஆகவேண்டும்”. அதன்
மீதான விவாதங்கள் எல்லாம் ஓய்ந்த பிறகும் மெதுவாக அதைப் படிக்கலாம்” )

5. இறுதியாக ஏற்புரை நிகழ்த்திய ஜெயமோகன், பாதி பேசிக் கொண்டிருக்கும் போதே நேரம்
ஆகிவிட்டததால் புறப்படும் படியாகிவிட்டது.

” என்ன பிரகாஷ், எப்படி யிருந்தது ஜே.கே பேச்சு? ”

” சூப்பருங்க, நா எதிபார்க்கவேயில்ல. இவரு பேச்சை கேட்க முடியுன்னே,”

” கொஞ்ச நாளைக்கு முன்னால, வெங்கடேஷ் ஆ·பீஸ் மாடியிலே, சுந்தர. ராமசாமியோட புஸ்தகத்தை ஜே.கே வெளியிட்டு பேசினார். ‘ படீர் படீர் எனக் கதவுகள் திறந்தன’ ன்னு ஒரு இடி முழங்கறப்போல ஆரம்பிப்பார். அதை கேட்டிருக்கியோ? ”

” இல்ல பா.ரா.. ஏன் கேட்கறீங்க?”

” ஒண்ணும் இல்ல சும்மாத்தான். நான் வரேன்”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s