விகடன் தீபாவளி மலர்.

தீபாவளி மலர்களுக்கு என்று ஒரு அடையாளம் இருக்கிறது. பளபளா அட்டைகள், முதல் எழுபது எண்பது பக்கங்களுக்கு விளம்பரங்கள், கடைசி எழுபது எண்பது பக்கங்களுக்கு மறுபடியும் விளம்பரங்கள், அழகாக வரையப்பட்ட ‘உம்மாச்சி’ படங்கள், மதத்தலைவர்களின் அருளூரைகள், ஒரு நகைச்சுவை நாடகம் ( தலை தீபாவளிக்கு வரும் மாப்பிள்ளையின் கதை 🙂 ), டீவி , திரைப் படம் பக்கம் ஒதுங்கி விட்ட சில எழுத்தாளர்களின் கதைகள் ( பத்து பன்னிரண்டு வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட ஒரு ஸ்டாம்ப் சைஸ் போட்டோ அவசியம்) ,முழுப்பக்கத்துக்கு ஜோக்குகள், ரெண்டு சினிமா கட்டுரைகள் என்று தீபாவளி லேகியம் போல கலந்து கட்டி இருக்கும்.

விகடன் மலரும் அப்படித்தான் இருக்கிறது.

குண்டு குண்டாக பார்த்த கலைமகள், கல்கி, அமுதசுரபி மலர்களுடன் ஒப்பிட்டால் இது மூஞ்சூறு சைஸ்.வடிவமைப்பிலும், பேக்கேஜிங்கிலும், காகிதத்தின் தரத்திலும் முதல் தரமாக இருக்கிறது.
சுஜாதா , ராகிர, ஜராசு, புனிதன், நம்ம ஆனந்த் ராகவ், நரசய்யா, ரமணிச்சந்திரன்,
க.சீ.சிவக்குமார், நரசய்யா , வண்ணதாசன் , இன்னும் சிலருடைய சிறுகதைகள், ஜெயகாந்தன் , ஏ.கேஅந்தோணி ஆகியோரின் பேட்டிகள், கமலஹாசன், யுகபாரதி, ந.மகுடேசுவரன், உமா மகேஸ்வரியின் கவிதைகள், விவேக்கின் சினிமா கட்டுரை, ராண்டார்கை, தென்கச்சியாரின் கட்டுரைகள், ஜோக்குகள், அப்துல் கலாமின் சிறப்புக் கட்டுரை என்று பலமான ஒரு விருந்துதான் போங்கள்.

இன்னமும் முழுதாகப் படிக்கவில்லை.

விலை கொஞ்சம் ஜாஸ்திதான் என்றாலும், படித்த ஒரு சில விஷயங்கள், சரி பரவாயில்லை என்று தோன்றச் செய்தது , வாத்தியாரின் சிறுகதையும் பழைய விகடன் தீபாவளி மலர்களில் வந்த தாணு, ராஜு, கோபுலு ஆகியோரின் நகைச்சுவை துணுக்குகளின் மறு பிரசுரமும்,சுஜாதாவின் ” ஒரு சொட்டு ரத்தம்” என்கிற கதையைப் பற்றி ஒன்றும் சொல்லப் போவதில்லை. முதல் இரண்டு
வரிகளை மட்டும் தருகிறேன்.

‘பாய்ஸ்’ படம் விட்டு வசந்தும் கணேஷ¤ம் வெளியே வந்து கொண்டிருந்தனர்.

” படம் எப்படி பாஸ்? ”

மீதிக்கதையை புத்தகத்தில் படித்துக் கொள்ளுங்கள்

One thought on “விகடன் தீபாவளி மலர்.

  1. உற்பத்தி அதிகமாகும் போது விலை குறையும் என்பதுதான் வணிகத்தின் தாத்பரியம். ஆனால் தமிழகத்தில் அதிகம் விற்பணையாகும் விகடன் பத்திரினை வாசகரிடம் கொள்ளையடிப்பதையே வாடிக்கையாக கொண்டுள்ளது. நாம் கொடுக்கும் பணத்திற்கு உகந்த்தாக படைப்புகள் இருந்தாலும் வழ வழ, கொழ கொழா பேப்பரெல்லாம் எவன் கேட்டது. ஏசி பஸ்விட்டு கொள்ளையடிப்பவர்களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்.

    மீதிக்கதையை புத்தகத்திலெல்லாம் படிக்க முடியாது. …. நீங்களே உங்கள் வலைப்பூவில் எழுதிவிடுங்கள் அதுதான் தமிழ் கூறும் நல்லுலகத்தீற்கு நல்லது.

    சென்னைத்தமிழன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s