Prakash's Chronicle 2.0

Movies, a meme
நாகார்ஜுனன், ஒரு அருமையான பதிவு எழுதியிருந்தார். அதை அவரது அனுமதி இல்லாமலேயே ஒரு மீம் ஆகச் செய்கிறேன். கோச்சுக்கமாட்டார் ன்னு நினைக்கிறேன்

அந்த இடுகைக்கான பின்னூட்டத்தை இங்கே அப்படியே எழுதுகிறேன். நான் குறிப்பிடும் நண்பர்களும் முன்னெடுத்துச் செல்வார்கள் என்று நினைக்கிறேன்.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

எட்டு வயதில். முதன் முதலில் பார்த்தது மந்தைவெளி கபாலீ டாக்கீஸில் , சங்கராபரணம்.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

சரோஜா. சில வாரங்களுக்கு முன்பு.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

நேற்று இரவு டிவிடியில்  முக்தா ராமசாமி இயக்கிய பொம்மலாட்டம் பார்த்தேன். ஒரு துறையில் அற்புதமான திறமை கொண்டிருக்கும் சோ, அரசியலரங்கில் ஏனிப்படி கோமாளியாகிப் போனார் என்பதுதான் உடனடி நினைப்பு.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா

மௌலியின் ‘ மற்றவை நேரில்’, மகேந்திரனின் ‘மெட்டி, ஸ்ரீதர்ராஜனின் ‘ கண்சிவந்தால் மண் சிவக்கும்’

(பார்த்த மாத்திரத்தில் அவள் அப்படித்தான் படமும் தாக்கிற்றுதான் என்றாலும், ஸ்ரீபிரியா கதாபாத்திரம் மத்திய-தர-மக்களின்-பல்ஸ்-பிடித்துப்-பார்த்ததாகச்-சொல்லப்படும் பாலச்சந்தரின் பட பாத்திரம் போல கொஞ்சம் phony ஆக இருந்தது)

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

1996 இலே. கலைஞருக்கு ஆதரவாக தலைவர் ரஜினிகாந்த் குரல் கொடுத்தது.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

மைடியர் குட்டிச்சாத்தானின் முப்பரிமாண சினிமா, அபூர்வ சகோதரர்களின் குள்ள அப்பு

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

வாசிப்பதுண்டு. ஆனால் பொதுவாகத் திருப்தி இல்லை. ஒரு பக்கம், சுவாரசியமான விஷயத்தை dry ஆக எழுதும் தியோடர் பாஸ்கரன் போன்றவர்கள். இன்னொரு பக்கம், frivolous ஆன விஷயத்துக்கு முக்கியத்துவம் தரும் ராண்டார்கை போன்றார்களின் சுவாரசியமான எழுத்து, இதற்கிடையில் மயிர்பிளக்க வைக்கும் சிற்றிதழ் எழுத்துகள், தகவல்கள் அதிகம் நிரம்பிய அறந்தை, அவ்வப்போது ஆயாசம் ஏற்படுத்தும் யமுனா ராஜேந்திரன், இந்தாள் தமிழ்ல எழுதித் தொலைக்க மாட்டாரோ என்று நினைக்கும் எம்.எஸ்.எஸ் பாண்டியன் போன்றவர்கள் எழுத்துக்களை மேய்வதுண்டு.

7.தமிழ்ச்சினிமா இசை?

இசை என்றால், தமிழனுக்கு தமிழ்ச் சினிமா இசைதானே? அதிலே ஏன் ஒரு கேள்விக்குறி.

இதை derogatory ஆகச் சொல்ல வில்லை. இசை நுட்பங்கள், வடிவங்கள், நவீனங்கள், இசை படைப்புகள் போன்றவற்றுக்கு, தமிழ்ச் சினிமா இசை அமைப்பாளர்கள் சிலர், குறிப்பாக இளையராஜா, எம்.எஸ்.வி போன்றோர் பங்களிப்பு செய்ததுக்கு ஈடாக, கவிதைக்கு பாரதியார் கூடச் செய்ததில்லை.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

ஆங்கிலம் உலக மொழி என்றால், பாப்புலரான ஹாலிவு சினிமா பார்ப்பதுண்டு. உலக சினிமா பார்ப்பதில்லை. இந்திய சினிமா பார்ப்பதுண்டு. எமெர்ஜென்ஸிக்குப் பின்னான நாட்களில் கன்னடத்தில் நல்ல படங்கள் வந்ததுண்டு.நாகபரணா, கிரிஷ்கர்நாட், சங்கர்நாக் போன்றவர்கள் எடுத்த படங்கள் விருப்பம்.கன்னடம் போல அல்லாமல், மலையாளத்தின் நல்ல படங்களுக்கு பொதுவாக அங்கீகாரம் கிடைத்துவிடுவதுண்டு. அவற்றையும் பார்ப்பேன். இந்தி மொழியிலும் அப்படியே. தங்களின் கலாசாரத்தை, நிலபரப்பை, உணவுப்பழக்க வழக்கங்களை, அரசியல் நிலைப்பாடுகளைப் பிரதிபலிக்கும் ஒரிய , வங்காள, அசாமிய மொழிப்படங்களைப்ப் பார்க்க விரும்புவேன். அதை லோக்சபா தொலைக்காட்சி நிறைவேற்றி வருகிறது. நாம் உலக மொழிப் படங்களைப் பார்க்கும் முன்பு, இந்திய மொழிப் படங்களை பார்க்கவேண்டும் என்று சொல்வேன். மாநிலங்களுக்கு இடையில் உள்ள வெளியைக் குறைப்பதில் திரைப்படங்கள் உதவி செய்யும் என்பது என் கருத்து. உதாரணமாக ஆந்திரா சாப்பாடு காரம் என்று தெரியும், ஆனால் ஜார்க்கண்ட் சாப்பாடு?

9.  தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

இல்லை. இதுவரை இல்லை

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

வளமாக இருக்கிறது. கலைப்படைப்புக்கு உதவி செய்யும் நுட்பத்தில் விலை மட்டுப்படும் பொழுது அங்கே ஜனநாயகம் தலை தூக்கும். நேர் நேர் நிரை நேர் போன்ற இலக்கண நுட்பம் எல்லாம் தேவை இல்லை, வெறும் போஸ்ட்கார்ட் போதும் புதுக்கவிதை எழுத என்று ஆனது போல. இந்த நிலைமை, குறைந்த செலவில் நிறைய நல்ல படங்களுக்கு வழி வகை செய்யும்.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

இதற்கு, ஒரு அரசு உயர் அதிகாரி , பிரஸ் மீட்டில் சொல்வது போல பதில் சொல்ல வேண்டும் என்றால், ” We appreciate your interest in this issue. There can, however, be no clear answer to such hypothetical questions.”

இவர்கள் தொடரவேண்டும் என்று நினைக்கிறேன்.

பரத்

பாஸ்டன் பாலாஜி

பா.ரா

லக்கிலுக்

சித்தார்த்

google க்கு மட்டும் வாய் இருந்தா
ஓ ன்னு அழும்

[ ஒரு அவசர பின்குறிப்பு : சுழித்துக் காட்டப்பட்டுள்ள பதங்கள் நான் தேடியதல்ல. அதைத்தான் தேடுகிறேனாக்கும் என்று க்ரோம் உலாவி நினைத்துக் கொண்டு, auto suggest மூலம் காட்டியது. ]

Use only Internet Explorer please
சொல்றது நான் இல்லை… துக்ளக் சோ ராமஸ்வாமி

Hardware X Software
[ஐந்து வருடங்களுக்கு முன்பு,  குறிப்பாக நவம்பர் 2003 இலே ராகாகி குழுமத்தில் எழுதியது]

ம்மா, எத்தனை தரம் சொன்னாலும் கேக்க மாட்டியா? இந்த பெண் பார்க்கிற பிசினஸ் எல்லாம் வேண்டாம்..

அப்படி சொன்னா எப்படிடா ரங்கா? பொண்ணு பாக்காமே எப்படி கல்யாணம் செய்யறது.

அதல்லாம் வேண்டாம். நீயும், அப்பாவும் போய்ப் பாருங்க. கூட வேணா சியாமளாவை கூட்டிக்கோ. வந்து பாத்துட்டு ஓகேன்னா சொல்லு. நான் பண்ணிக்கிறேன். தலைக்கு மேல வேலை இருக்கு. டிஸ்டர்ப் பண்ணாதே.

சரிடா.

0

என்னடி, திருச்சிலேந்து போன் வந்துது போல இருக்கே. என்ன சொல்றாங்க?

அவங்க கைக்கு அஸ்வின் ஜாதகமும் போயிருங்குங்க. அஸ்வினையே முடிக்கலாம்னு அபிப்ராயப் படறாங்க போல இருக்கு. நம்ம பையன்  வேலை வேற ஒரு சிக்கல்.

யாரது அஸ்வின்? நம்ம சம்மந்தியோட, அக்கா பையனா? அமெரிக்காலே இருந்தானே அவனா? அவன் இப்ப மெட்ராஸ்லே வேலைன்னா தேடிக்கிட்டு இருக்கான்? ஆனா பத்து பேருக்கு வேலை குடுக்கறாண்டி நம்ம சிவில் எஞ்சினியர். இவன விட அவன் ஒசத்தியா?

ஆமாம். அவனுக்கு வேலையில்லேனாலும் அவன் சா·ப்ட்வெர் தான். உங்க புள்ளே மொதலாளின்னாலும் உள்ளூர்லே மேஸ்திரி வேலைதான்

John Abraham – Nagarjunan – Jeyamohan
ஜான் ஆபிரகாம் பற்றி, நாகார்ஜுன னுடைய மூன்று ( ஒன்று, இரண்டு, மூன்று ) பகுதிகள் தொடர், ஒரு முக்கியமான ஆவணம். ஜெயமோகன், இதே ஜான் பற்றி எழுதி இள மனங்களில் ஏற்படுத்த முயன்ற பிம்பத்தை, நாகார்ஜுனன் எழுத்து முற்றிலுமாகக் கலைத்துப் போடுகிறது. ஜானின் முதல் படமான, ‘ வித்யார்த்திகள் இதிலே இதிலே’ என்ற படத்தைப் பற்றி நாகார்ஜுனன் இவ்வாறு எழுதுகிறார்.

வித்யார்த்திகளே இதிலே இதிலே (1971).

கதை என்றால், பள்ளியில் கால்பந்தாட்டம். ராஜு என்ற மாணவன் பந்தடித்து, பள்ளி நிறுவனரின் சிலை உடைந்துவிடுகிறது. சிலை ரிப்பேர் செய்யப் பணம் தர வேண்டும் இல்லையேல் பள்ளியிலிருந்து விலக்கப்படுவான் ராஜு என்ற நிலை. மாணவர்கள் ஒன்றிணைந்து ஷூ பாலிஷ் செய்து, லாட்டரி டிக்கெட் விற்றுப் பணம் சேர்க்கிறார்கள். தலைமையாசிரியருக்கு இது பிடித்துப்போகிறது. நிர்வாகமே சிலையை ரிப்பேர் செய்கிறது. மாணவர்கள் சேர்த்த பணத்தில் சுற்றுலா போக அவர் ஏற்பாடு செய்கிறார். மீண்டும் கால்பந்தாட்டத்தில் சிலை உடைகிறது.

இந்தப்படத்தில் அடூர் பாஸி, ஜெயபாரதி, எஸ். பி. பிள்ளா தவிர மனோரமா, எஸ். வி. ரங்காராவ் போன்ற தமிழர்கள் கொண்டாடும் நடிகர்களும் இருந்தார்கள். ஆனால் தமிழர்கள் இந்தப்படத்தைப் பேசுவதில்லை.

சமகாலச்சூழல் கண்டுணரத் தவறிய ஜி.நாகராஜன், கோபிகிருஷ்ணன் போன்ற பெரும் படைப்பாளிகள் போலவே, நாசூக்கற்ற சில பழக்க வழக்கங்களைக் கொண்டு இருந்த ஜான் ஆபிரகாமை, அதன் காரணமாகவே, அவரது படைப்புகளை நிராகரிக்கும் ஜெயமோகனுக்கும்,

‘அவரை நண்பர் என்று கூறமுடிகிற சமயம், அதை அறுத்துக்கொள்ளும் வகையில் எதையாவது செய்துவிடுவார். இதையெல்லாம் கண்ட உடனிருந்த சில தமிழ் நண்பர்கள் “இவர் படமெல்லாம் எடுப்பவரா என்ன, அறையைக் காலிசெய், அல்லது நாங்கள் காலிசெய்வோம்” என்று பயமுறுத்தினார்கள். மலையாள நண்பர்கள் பரவாயில்லை, உதவினார்கள்’

என்று இரண்டே வாக்கியங்களில் ஜானின் இயல்பு பற்றிச் சொல்லிக் கடந்து விடுகிற நாகார்ஜூனனுக்கும் தான், அணுகுமுறை அளவில் எத்தனை வேறுபாடு? எத்தனை நேர்மை?

நிசத்தில், இந்தத் தொடரை வாசித்து முடிந்ததும், நாகார்ஜுனனை கட்டிப் பிடித்துக் கைகுலுக்க வேண்டும் போல இருந்தது. விசாரித்தால், அவர் இலண்டனில் இருப்பதாகச் சொன்னார்கள். ஆகவே, எனக்கு விசா கிடைத்து பாங்க் பாலன்ஸு உயரும் வரை நாகார்ஜுனன் பொறுமை காக்க வேண்டும்.

ஜான் ஆபிரகாமின் திரைப்படப் பிரதிகள் பற்றி, நிழல் திருநாவுக்கரசுவிடம் விசாரித்தால் தெரியும் என்கிறார்.திருநாவுக்கரசை, செல்ஃபோனில் முயற்சி செய்தால், ஒரு அக்கா இங்கிலீஸில் என்னமோ சொல்கிறது. என்ன அர்த்தமோ எவன் கண்டான்?

ஸ்டாலின் ராஜாங்கம் என்ற சிற்றிதழ் எழுத்தாளர், ஒரு கட்டுரையில்

‘ இந்திய தத்துவ வரலாற்றில், நாத்திகம் என்பது தனித்த சிந்தனைப் போக்காக எப்போதும் இருந்து வந்துள்ளது. என்றாலும், நாத்திகம் வெகுஜன அரசியல் தளத்தை எட்டியது பெரியார் ஈ.வெ.ரா.காலத்தில் தாம். ‘

என்று எழுதியிருந்தார்.

இந்த பெரியாருக்கு முன்பான நாத்திக மரபிலே, முக்கியஸ்தர்கள் யாவர்? யாருக்காவது தெரியுமா?

சுகுணா திவாகர், ‘ மறக்கப்பட்ட கலைஞர்கள்’ என்ற வரிசையிலே, கவுண்டமணி பற்றி எழுதும் தொடர், முக்கியமான பதிவு. முதல் பகுதியை வாசித்த பொழுது, எங்கே கவுண்டமணியை, ஒரு எதிர்கலாச்சாரவாதி பிம்பத்துக்குள் அடைக்க முயல்கிறாரோ சுகுணா என்று கொஞ்சம் அச்சமாக இருந்தது. இரண்டாம் பகுதியில் அச்சத்ததைப் போக்கினார்.

திரையில் இருந்து கொண்டே, திரையுலகம் கட்டமைத்த தோற்ற வழிபாடுகளையும், ‘பக்தி’ கலாசாரத்தை, கவுண்டர் போல எதிர்த்தவர் இன்னொருவரில்லை என்கிறார் சுகுணா. முழுமையாக உடன்படுகிறேன்.

பாபாவில் ரஜினிகாந்தும், சிங்காரவேலன், இந்தியனில் கமல்ஹாசனும் கவுண்டமணியின் சொல்வீச்சுக்கு ஈடு கொடுக்க முடியாமல் தடுமாறியது நினைவுக்கு வருகிறது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு நியூபுக்லாண்ட்ஸ் விஜயம்.

புத்தகம் வாங்கி நீண்ட நாளாகிறது. முருகனின் ரெட்டைத் தெரு வந்துருச்சா என்று, சமீபத்திய சாருநிவேதிதா மொட்டை மாடிச் சந்திப்புக்காக கிழக்குக்கிருக்கப் போன பொழுது கேட்டால், வந்துருச்சு, ஆனா வரலை, என்றார்கள் வைகைப்புயல் பாணியில்.

அரிப்பு தீர்வதற்குள் வாங்கிவிட வேண்டும் என்பதால், இன்று புக்லாண்ட்ஸுக்கு ஒரு அவசர விஜயம். தி.நகர் என்ற நிலப்பரப்பு நம் கையை விட்டுப்போய் , வணிகர்கள் கையில் சிக்கிச் சீரழிவது நிதர்சனமாகத் தெரிகிறது. மேம்பாலம் கட்டி முடிந்து போக்குவரத்துக்குத் திறந்து விடப்பட்ட பின்புதான், புக்லாண்ட்ஸ் பக்கமெல்லாம் போக முடிகிறது. சில புத்தகங்களும், நிழல், தமிழினி பிரதிகளும் வாங்கி வந்தேன்.  மாதந்திரச் சிற்றிதழ் ஒன்று டிவிடி வடிவத்தில் வருகிறது. 70 ரூபாய். வாங்கவில்லை.

நல்ல படங்கள் வருவதில்லையா, நாம் பார்ப்பதில்லையா?
பத்ரியின் பதிவுக்கான பின்னூட்டமாக எழுதியது நீண்டுவிட்டதால், இங்கே தனி இடுகையாக….

இதழியல், எப்படி, பெரு ஊடகம், சிற்றிதழ்கள் என்று இரு கூராகப் பிரிந்து நிற்கின்றதோ, அதே போலத் தான் திரைப்படங்களும்.

பதிவிலே நீங்க (பத்ரி) சொன்னது போன்ற, வரலாற்று நிகழ்வுகளை, குறும்படங்களாக அல்லது விவரணப்படங்களாகத் தயாரிக்கத்தான் வாய்ப்பிருக்கிறதே தவிர, பெருவாரியான மக்கள் பார்க்கும் மக்கள் சினிமாவாகத் தயாரிக்கப்பட வாய்ப்பே இல்லை. அப்படியே தயாரிக்கப்பட்டாலும், அரசியல் குறுக்கீடுகள், தணிக்கை போன்ற அதிகாரக் குறிக்கீடுகள் தாண்டி அரங்குக்கு வர வாய்ப்பு மிகவும் குறைவு. அப்படியே அரங்குக்கு வந்தாலும், அதைப் பார்ப்பதற்கான மக்கள் குறைவு.

சினிமா என்கிற ஊடகத்தை, வரலாற்று நிகழ்வுகள், ஒடுக்குமுறைகள், அரச பயங்கரவாதம் ஆகியவற்றைப் பதிவு செய்வதற்கான ஊடகமாக மாற்ற நிறைய மெனக்கெட வேண்டியிருக்கும். அதற்கு யாரும் தயாராக இல்லை.

சில வருடங்களுக்கு முன்பு, நாராயண் எழுதிய பதிவு ஒன்றிலே என்னுடைய பின்னூட்டத்தின் ஒரு பகுதி

குறும்படம் ( short film), விவரணப் படம் ( documentary ), மாற்று சினிமா ( parallel cinema) வகை திரைப்படங்கள், வெகுசன சினிமா ( mainstream) அளவுக்கு அறியப்படவில்லை/ விரும்பப்படுவதில்லை என்பது முற்றிலும் உண்மை. அதற்கு நம் தமிழ் கலாசாச் சூழ்நிலையைத் தான் குறை சொல்ல வேண்டும்.

மாற்றான் மனைவி மீது காதல் கொள்ளுவது தவறு , அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று போன்ற எளிய நல்லொழுக்கம் கூட நமக்கு காப்பிய , கதை வடிவத்தில் தான் சொல்லப்பட்டது. நம் ஊரில் திரைப்படங்கள் எடுக்கத் துவங்கிய 1900 களில் , காப்பியங்களும் புராணங்களும் தான், திரைப்படங்களை பெருமளவில் ஆக்கிரமித்தன. அந்தக் காலத்திலேயே குறும்படங்களும், விவரணப்படங்களும் இருந்தன என்றாலும், இவை ‘கதை சொல்லும் படங்களுக்கு’ ஈடாக பரவலாகவில்லை. மௌனப்படங்களுக்குப் பிறகு வந்த டாக்கீ யுகத்திலும், காப்பியங்களில் இருந்து கிளைத்த உபகதைகள் தான் சினிமாவாகத் தயாரிக்கப்பட்டன. மேடை நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு இறக்குமதியான பல கலைஞர்கள், மேடைநாடகத்தையே, சினிமாவாக எடுத்தனர். இரண்டிற்குமான வேறுபாடு அவர்களுக்குத் தெரியவில்லை. புகைப்படக் கருவி தரும் சாத்தியக்கூறுகளை முயற்சி செய்து பார்க்காமல், காமிராவை, ஒரே கோணத்தில் வைத்து படமாக்கினார்கள். திராவிட இயக்கம், சினிமாவுக்குள் நுழைந்த போது, சினிமா இளங்கோவன், டி.வி.சாரி, மு.கருணாநிதி போன்ற வசனகர்த்தாக்கள் கைக்கு வந்தது. ( மு.கருணாநிதி வசனம் எழுதிய மந்திரிகுமாரி, மனோன்மணீயம் காப்பியத்தை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம்). திரைப்படம் என்ற கலை வடிவத்தில், ஒரு கோர்வையான கதையை எதிர்பார்ப்பது , நம்முடைய நூற்றாண்டு கால மரபு.

காட்சிப்படமங்களையும் குறியீடுகள் மூலமாக உணர்த்தும் மாற்று சினிமாவும், மற்ற வகைத் திரைப்படங்களும் பரவலாக ரசிக்கப்படாமல் போனதற்கு இவையும் ஒரு காரணம்.

மாற்று சினிமா/விவரணப்படங்கள் பார்க்க ஆளில்லை. ஆனால், எடுக்கவாவது ஆளிருக்கிறார்கள என்றால், இருக்கிறார்கள். வெகு குறைச்சலான அளவில். மௌனப்பட யுகத்திலேயே, குறும்படங்களும் விவரணப்படங்களும் எடுக்கப்பட்டிருக்கின்றன என்று சினிமா வரலாற்றாசிரியர் தியோடர் பாஸ்கரன் ஒரு கட்டுரையில் குறிப்பிடுகின்றார்.

அவரே, “1937இல் துவங்கி, இரண்டரை ஆண்டுகள் உழைத்து, பல நாடுகள் பயணம் செய்து காந்தி பற்றிய திரைக்காட்சிகளை தொகுத்தும், பல காட்சிகளைப் படமாக்கியும், ( ஏ.கே) செட்டியார் தயாரித்த ” மகாத்மா காந்தி ‘ என்ற ஆவணப்படம் 1940 இல் வெளியிடப்பட்டது, தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான நிகழ்வு” என்றும் வேறு ஒரு கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கிறார் . இந்தியாவின் அதிசயங்கள் பலவற்ற்றை காமிராவால் சுட்டு, அயல்நாட்டு international newsreel corp போன்ற திரைப்படக் கம்பெனிகளுக்கு விற்று, ஒரு அடிக்கு ஒரு டாலர் என்று சம்பாதித்தவர்களும் இருக்கிறார்கள்.

நம் விவரணப் படங்களுக்கு நல்ல பாரம்பரியம் இருக்கிறது. தமிழ் மாற்று சினிமாவும் அதைப்ப் போலத்தான். லே மிசரபிள் என்ற ருஷ்ய நாலைத் தமிழ்ப்படுத்தி எடுத்த கே.ராம்நாத்தின் ஏழைபடும் பாடு, அவன் அமரன், ஜெயகாந்தனின் உன்னைப் போல் ஒருவன், என்று மாற்று சினிமா இயக்கம் வெகுகாலம் முன்பே துவங்கி விட்டது, அதிலே பணக்கவ்ர்ச்சி இல்லாததால், அந்த மாற்று சினிமா இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல, திரை முக்கியஸ்தர்கள் தவறிவிட்டனர்.

பெரு ஊடகத்தின் பக்கமே வராமல், நல்ல ஆவணப்படங்கள் , விவரணப்படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளில் அப்படி வந்து, குறிப்பிட்ட சில வட்டத்துக்குள் மட்டும் திரையிடப்பட்டு, அவர்களின் கவனத்தைக் கவர்ந்த பல படங்க்ள் உண்டு. ஆனால், அவற்றை நாம் தான் தேடிச் சென்று பார்க்க வேண்டியுள்ளது. காரணம், நிதர்சனம். அவற்றை நம்மிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில், இன்னும் நான்கைந்து படங்களை அவர்கள் தயாரிக்கலாம்

யமுனா ராஜேந்திரன் எழுதி, ஒரு இணையக்குழுவில் பிரசுரமான மடல் ஒன்றை, என்னுடைய சேமிப்பில் இருந்து இங்கே பகிர்ந்து கொள்கிறேன். அது 2001 இலே நடந்த முதல் உலகத் தமிழ்த் திரைப்பட விழாவிலே திரையிடப்பட்ட படங்களின் பட்டியல். பாருங்கள். நல்ல படங்கள் வருவதில்லையா அல்லது அவை வரும்போது நாம் கவனிப்பதில்லையா என்று சொல்லுங்கள்.

1. Escape from Genocide: இனக் கொலையிலிருந்து தப்பி ஐரோப்பாவுக்கு வந்து நிறவாத குடியேற்றக் கொள்கைளால் இலங்கைத் தமிழ் அகதி மக்கள் அடையும் துயர் பற்றிய விவரணப்படம். கோரமும் துயரும் நிறைந்த பிம்பங்கள் கொண்ட நிஜவாழ்வைத் திரையில் சொல்லும் விவரணப் படம். இயக்கம் : நாவலாசிரியர் ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம். ஆங்கிலத்தில் விவரிக்கப்படும் படம்.

2. ஊருக்கு நு¡று பேர் : பு¢ரபல இலக்கியவாதியான ஜெயகாந்தனின் நாவலை அடிப்படையாகக் கொண்ட படம். இயக்குனர் : படத்தொகுப்பாளர் பி.லெனின். ஆங்கிலத் துணைத் தலைப்புகள் கொண்ட படம்.

3. நதியின் மரணம். தமிழகத்தில் பரபரப்பேற்படுத்திய தாமிரபரணி தலித்படுகொலைகள் பற்றிய விவரணப்படம். பயங்கரமும் கோரமும் துயரும் நிறைந்த அதிரச்சிதரும் காட்சிகள் கொண்ட சித்திரம். இயக்குனர் ஆர். ஆர். சீனிவாசன். ஆங்கிலத்துணைத் தலைப்புகள் கொண்ட படம்.

4. நாக் அவுட் : ந்தியாவில் விளையாட்டு வீரர்களின் சோகம் மற்றும் கவனிக்கப்படாத மரணம் குறித்த படம். டென்மார்க் நாட்டுப் படவிழாவில் திரையிடப்பட்டகுறும்படம். இயக்கம் : பி.லெனின். ஆங்கிலத் துணைத் தலைப்புகள் கொண்ட படம்.

5. நிழல் யுத்தம் : ஸ்விட்சர்லாந்துக்குப் புலம் பெயர்ந்த இலங்கையைச் சேர்ந்த தமிழ் இளந்தம்பதியர் இடையில் தோன்றும் பிணக்கும் காதலும் பற்றிய குறும்படம். இயக்குனர் :ஜீவன். திரையிடலின் போது ஆங்கிலத்தில் கதைச் சுருக்கம் வழங்கப்படும்

6. எச்சில் போர்வை : அகதி வாழ்வின் நிலையாமை பற்றிய குறும்படம்.ஏஜென்ட் ஒரு புறம். தஞ்சம் நிராகரிப்பு இன்னொருபுறம். தாய்நாட்டில் சொந்தங்களின் தேவைகள் இன்னொறுபுறம். தனிடையில் சிக்கித் தவிக்கும் ஒரு இலங்கைத் தமிழ் இளைஞனின்சோக வாழ்வு இக்குறும்படம்.. பிரான்ஸ் கலை பண்பாட்டுக் கழகம் நடத்திய குறும்படப்போட்டியில் விருது பெற்ற படம். இயக்குனர் : ஜீவன். திரையிடலின் போது ஆங்கிலத்தில் கதைச் சுருக்கம் வழங்கப்படும்

7. ஆயிஷா : தொலைக் காட்சிப்படத் தயாரிப்பாளரான செல்வி புவனேஸ் வழங்கும் குழந்தைகள் திரைப்படம் 3 ஊர்வசி விருதுபெற்ற அர்ச்சனா மற்றும் சந்தோஸ் சிவனின் `மல்லி’ படப்புகழ் சிறுமி சுவேதா ஆகியோர் நடித்துள்ளனர். இயக்கம் : பி. சிவக்குமார். ஆங்கிலத் துணைத் தலைப்புகள் கொண்ட படம்.

8. தங்கம் : பல சர்வதேசப் படவிழாப் பரிசுகளை வென்ற குழந்தைத் தொழிலாளர் பற்றிய சோக காவியம். தங்கம் படத்தின் தொகுப்பாளர் Life is beautifulபடத்திற்காக ஆஸகார்  விருதுபெற்ற கிழக்கு ஐரோப்பியரான ஸைடன் பெக்கி ஆவார். இத்தாலித் திரைப்படவிழாவில் திரையிடப்பட்ட படம். இயக்கம் : சொர்ணவேல். ஆங்கிலத்துணைத் தலைப்புகள் கொண்ட படம்.

9. கால்களின் ஆல்பம். : தமிழின் முக்கிய கவியான மனுஸ்ய புத்திரனின் கவிதையொன்றை அடிப்படையாகக் கொண்ட குறும்படம் . இயக்குனர்: பி.லெனின். ஆங்கிலத்துணைத் தலைப்புகள் கொண்ட படம்.

10. Untouchable Country : தமிழக அறிஞர்களின் நேர்முகங்கள் அடங்கிய விவரணப்படம். வுரலாறு முழுக்க தலித் மக்கள் இந்திய வாழ்வில் அனுபவித்து வரும்துயர்களைச் சொல்லும் விவரணப்படம். இயக்கம் : ஆர்ஆர்.சீனிவாசன. ஆங்கிலத்துணைத் தலைப்புகள் கொண்ட படம்.

11. மதி எனும் மனிதனின் மரணம் : ரா.நடராசனின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்ட குறும்படம் . பெங்களுர் உலகப்படவிழாவில் திரையிடப்பட்ட படம். இயக்கம் :பி.லெனின் ஆங்கிலத் துணைத் தலைப்புகள் கொண்டபடம்.

12. சினிமாவுக்குப் போன சித்தாளு . நாவலாசிரியர் ஜெயகாந்தனின்நாவலை அடிப்படையாகக் கொண்ட படம். நடிகை லட்சுமியின் மகள் ஐஸ்வர்யா மற்றும்தலைவாசல் விஜய் போன்றோர் நடித்த படம். கெளதமன் அடுத்து நாவலாசிரியர் நீல..பத்மநாபனின் பள்ளிகொண்டபுரம் நாவலைப் படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இயக்குனர் : கெளதமன். திரையிடலின் போது ஆங்கிலத்தில் கதைச்சுருக்கம் வழங்கப்படும்

13. Power : ஸ்விட்சர்லாந்தில்  தயாரிக்கப்பட்ட ஒரு சை ஆலபத்தின் பகுதிகள் படம். ஸ்விஸ் இளம் பெண்களும் ஆணும் தோன்றும் நடனத் தெறிப்பு க்குறும்படம். இயக்கம் : ஜீவன்.

14. வில்லு : தமிழக கிராமப்புற இசைக்கருவியான வில்லு பற்றியதொரு விவரணப்படம். 1998 பிரெஞ்சு மானுடவரைவியல் திரைப்படவிழாவில் திரையிடப்பட்டபடம். இயக்குனர் : சொர்ணவேல். ஆங்கிலத் துணைத் தலைப்புகள் கொண்ட படம்.

15. சுப்பிரமணிய பாரதி : இறவா மானுடன் மகாகவி பாரதி பற்றிய விவரணப்படம். இயக்குனர் : அம்ஷன்குமார். தமிழகப் பத்திரிக்கைகளால் பரவலானபாராட்டுப் பெற்றதும் மிகுந்த ஆய்வின் பின் எடுக்கப்பட்டதுமான பாரதி பற்றிய முதல் விவரணப்படம். இந்தியத் ¦¡லைக்காட்சியான து¡ரதர்ஷனில் ஒளிபரப்பட்டு 1999 ஆம்ஆண்டுக்கான சிறந்த விவரணப்படம் எனும் மைலாப்பூர் அகாதமி விருது பெற்ற விவரணப்படம். இயக்கம் : அம்ஷன்குமார். ஆங்கிலத்தில் விவரிக்கப்படும் படம்..

16. Knowledge Centres : தகவல் தொழில்நுட்பம் தமிழக கிராமங்களில் ஏற்பத்தியிருக்கும் விளைவுகளும் பெண்களின் வாழ்வில் ஏற்படுத்தியிருக்கும் மாற்றமும் பற்றி விவரணப்படம். இயக்கம் : அம்ஷன்குமார். ஆங்கிலத் துணைத் தலைப்புகள் கொண்ட படம்.

17. விட்டு விடுதலையாகி : சமஸ்கிருத ஆண்டுக்குச் சமர்ப்பணமான ஜாதியம் குறித்த குறும்படம் இயக்குனர் : அருண்மொழி. குணச்சித்திர நடிகர் சாருஹாஸன் பாலுமகேந்திராவின் கதை நேரம் புகழ் மெளனிகா நாடக நடிகை அ.மங்கை.மற்றும்பி.ஆர். அர்ச்சனா போன்றோர் நடித்த குறும்படம். எமது திரைப்படவிழாவில்தான் ப்படம் இத்திரைப்படவிழாவில் முதன் முதலாகத் திரையிடப்படுகிறது. இயக்கம் : அருண்மொழி திரையிடலின் போது ஆங்கிலத்தல் கதைச் சுருக்கம் வழங்கப்படும்

18. Indian National Army : சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் பற்றிய குறும்படம். 1998 ஆம் ஆண்டு தொடங்கி ரோம் மிலான் பம்பாய்போன்ற இடங்களில் நடைபெற்ற திரைப்படவிழாக்களில் திரையிடப்பட்ட மிக முக்கியமானவரலாற்று விவரணப்படம். யக்கம் : சொர்ணவேல் ஆங்கிலத் துணைத் தலைப்புகள்கொண்ட படம்.

19. நிலப்பறி : தமிழக விவசாயிகளின் போராட்டமாக எழுந்த நிலமீட்சி இயக்கம் பற்றிய விவரணப்படம். இயக்குனர் அருண்மொழி; ஏர்முனை, காணிநிலம் போன்ற படங்களை இயக்கியதோடு பல சர்வதேச திரைப்பட விருதுகளையும் பெற்ற தமிழக இயக்குனராவார்.டெல்லி திரைப்படவிழாவில் திரையிடப்பட்ட படம். இயக்குனர் : அருண்மொழி. திரையிடலின் போது ஆங்கிலத்தில் கதைச் சுருக்கம் வழங்கப்படும்

20. யாத்திரை : ஐரோப்பாவில் குறிப்பாக ஸ்விட்சர்லாந்தில்  அடைக்கலம் புகுந்து தஞ்சம் நிராகரிக்கப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் இலங்கை அகதி மகனின் துயர்சொல்லும் குறும்படம். இயக்குனர் : ஜீவன்  திரையிடலின் போது ஆங்கிலத்தில் கதைச்சுருக்கம் வழங்கப்படும்

21. கவிக்குயில் : புகலிட வாழ்வில் தமிழ்க் கலாச்சார வேர்களைத் தேடும் தமிழ்ப்பெண்ணொருத்தியின் ஆசையும் தமிழ் இசையும் பற்றிதொரு குறும்படம். இயக்குனர் :ஜீவன். திரையிடலின் போது ஆங்கிலத்தில் கதைச் சுருக்கம் வழங்கப்படும்

22. கூலி : சிங்கப்பூருக்கு கூலியாகவரும் ஒரு தமிழக இளம்பெண்ணின் துயரும்சந்தோஷமும் நிறைந்த வாழ்வு. சிங்கப்பூர் வசந்தம் சென்ட்ரல் தொலைக்காட்சிக்காக எடுத்த குறும்படம். இயக்குனர் : கனடா மூர்த்தி . ஆங்கிலத் துணைத் தலைப்புகள்கொண்ட படம்.

23. Teasing : ஸ்விஸ் இளம் பெண்களின் தனித்ததொரு இளைஞனிடமானகுறும்பு பற்றியதொரு நிமிடத் தெறிப்பான குறம்படம். இயக்கம் : ஜீவன்.

24. கடைசி யுத்தம் : தமிழகத்தில் வேலையில்லாத் திண்டாட்டத்தின் டையில் வாழநேர்ந்து தற்கொலைக்கு முயலும் இளைஞன் பற்றிய குறும்படம். இறுதியில் காலம் கடந்து விடமரணம் தவிர்க்கவிலாமல் நிகழ்கிறது.. இயக்குனர் : விஜய் சேகர் திரையிடலின் போதுஆங்கிலத்தில் கதைச் சுருக்கம் வழங்கப்படும்

25. கூண்டு : ஜெர்மனிக்குப் புலம் பெயர்ந்த ஒரு இலங்கைத் தமிழப் பெண்ணின்வாழ்வு பற்றிய குறும்படம்.. அண்ணன் அண்ணியோடு வாழத் தலைப்பட்ட அவர்மேற்கொள்ளும் பாலியல் சார் உளவியல் போராட்டம் பற்றிய குறும்படம். இயக்குனர் :ஜெகாதரன் திரையிடலின் போது ஆங்கிலத்தில் கதைச் சுருக்கம் வழங்கப்படும்

26. Labyrinth : நமது அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் பல்வேறு வாழ்வுச்சம்பங்களில் இடம் பெறும் திரும்பத் திரும்ப நிகழல் மற்றும் வட்டவடிவமான வாழ்வுபோன்றவற்றைப் பற்றிச் சித்தரிக்கும் சோதனைப்படம். இயக்கம். ஆர். ஆர். சீனிவாசன். ஆங்கிலத் துணைத் தலைப்புகள் கொண்ட படம்.

27. ஜட்ஜ்மென்ட்.: கொலைகாரன் எனத் தன் கணவனைக் குற்றம் சுமத்திய ஒருபெண்ணின் கதை. அதே வேளை தவறாகக் குற்றம் சாட்டப்பட்டு தற்கொலை செய்துகொள்ளும் ஒரு கணவனின் கதை பிரகாஸ்ராக நடித்த குறும்படம். . இயக்கம் : தமிழ்த் திரைப்பட நடிகை சுகன்யா திரையிடலின் போது ஆங்கிலத்தில் கதைச் சுருக்கம்வழங்கப்படும்

28. Ruins. : கோயில்  ஒன்றின் சிதைவையும் ஆண் பெண் உறவின் சிதைவையும்  ஒப்பு நோக்கி கவித்துவத்தோடு சிதிலத்தின் சோகத்தைச் சொல்ல முயலும்சோதனைப்படம் . கவிதைச் சினிமா என இதனைக் குறிப்பிடலாம். இயக்கம்  : ஆர்.ஆர்.சீனிவாசன். ஆங்கிலத் துணைத் தலைப்புகள் கொண்ட படம்.

29. சந்தன மொட்டுக்கள் : சந்தனக் கடத்தில் வீரப்பனின் சாகசங்களினிடையில் வாழ நேர்ந்த குழந்தைகள் பற்றிய சென்னை லயோலா கல்லு¡ரி மாணவ மாணவிகளின் கூட்டுப் படம். மேற்பார்வை: பேராசிரியர் :ராஜநாயகம். ஆங்கிலத் துணைத் தலைப்புகள் கொண்ட படம்.

30. மதவாதம் : தமிழகத்தில் பரவி வரும் மதவெறியும் அதனைத் தொடர்ந்த மானுட அழிவும் பற்றிச் சொல்லும் படம். சென்னை லயோலா கல்லு¡ரி மாணவ மாணவிகளின்  கூட்டுப் படம வெகுஜனங்களின் நேர்முகங்களால் ஆன படம். மேற்பார்வை:பேராசிரியர் : ராஜநாயகம். ஆங்கிலத் துணைத் தலைப்புகள் கொண்ட படம்.

31. Feel the Pain : புலம்பெயர்ந்த ஆசிய மக்களின் மீதான ஐரோப்பியர்களின் நிறவாத்தையும் வெறுப்பையும் விலக்கக் கோரும் அன்பு குறித்த இசைத் தெறிப்பு. இப்படம். யக்கம் : ஜீவன். திரையிடலின் போது ஆங்கிலத்தில் கதைச் சுருக்கம்வழங்கப்படும்

32. வேர்களாகி. : தமிழகம் எங்கும் பயணம் செய்து ஊழல் எனும் எரியும் பிரச்சினை பற்றி வெகுஜனங்களிடம் கேட்டறிந்த அபிப்பிராயங்கள் பற்றிய சென்னை லயோலாகல்லு¡ரி மாணவ மாணவிகளின்  கூட்டுப் படம வெகுஜனங்களின் நேர்முகங்களால் ஆன படம். மேற்பார்வை: பேராசிரியர் : ராஜநாயகம். ஆங்கிலத் துணைத் தலைப்புகள் கொண்ட படம்.

33. Now and Forever : இலங்கைப் பாடகரொருவரின் காதலிக்கான உருக்கமானபாடல். இயக்கம் : ஜீவன்.

34. தப்புக் கட்டை : தப்பட்டை அடிக்கும்போது கேவலப்படுத்தப்படும் தலித்மக்கள் சிலர் தப்படிப்பதை நிறத்தி விடுகின்றனர். அம்மாவின் மரணத்தின் பின் அவளது இறுதி ஆசையான தப்பாட்டம் இல்லாது தவிக்கும் ஒரு தலித் ளைஞன் ஆவேசத்தோடு தானேதப்பட்டை அடிக்கத் தொடங்குகிறான். உக்கிரமும் உணரச்சியும் நிறைந்த ஆவேசமானகுறும்படம்.. இயக்கம் : தாஸ் திரையிடலின் போது ஆங்கிலத்தல் கதைச் சுருக்கம்வழங்கப்படும்

35. அன்னமயில்.. : ஆண் பெண் உறவு பற்றியதோடு அறம் ஒழுக்கம்போன்றவற்றின் சார்பு நிலைகளை விசாரணை செய்யும் குறும் படம். யக்கம் : தாஸ் திரையிடலின் போது ஆங்கிலத்தில் கதைச் சுருக்கம் வழங்கப்படும்

36. Close your eyes : விழியிழந்தோர் பள்ளியில் எடுக்கப்பட்ட அந்தகக்குழந்தைகளின் அழகும் வாழ்வும் துயரும் பற்றியதொரு விவரணச்சித்திரம். கண்ணீரைவரவழைக்கும் காட்சிகள் கொண்ட படம். இயக்கம் : ஆர்.ஆர்.சீனிவாசன். ஆங்கிலத்துணைத் தலைப்புகள் கொண்ட படம்.

37. உயிரே என்னை அழைத்ததேன் : இங்கிலாந்துக்குப் புலம் பெயர்ந்த இளைஞனொருவனின் காதலும் தற்கொலையும் பற்றிய கதைப்படம். இங்கிலாந்தில் வாழும்ஜான்சன் போன்றோர் நடித்த படம். இயக்கம் : குமரேஸ்வரன். திரையிடலின் போதுஆங்கிலத்தில் கதைச் சுருக்கம் வழங்கப்படும்

38. ஜெயகாந்தன்  : நாவலாசிரியர் ஜெயகாந்தன் பற்றிய இரண்டு விவரணப்படங்கள்.. இயக்கம் : நாவலாசிரியர் சா.கந்தசாமி மற்றும் எழுத்தாளர்  கனடாமூர்த்தி திரையிடலின் போது ஆங்கிலத்தில் கதைச் சுருக்கம் வழங்கப்படும்

39. அடிமைகளின் தேசம் : தலித் பெண்ணொருத்தி தேர்தலில்போட்டிய§ட்டதற்காக பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகிறார் தலித் மக்களின்பாலான நீதித்துறையின் இரட்டை நிலைபாட்டை ஆவேசமாக விமர்சிக்கும் குறும்படம்.. இயக்குனர் தீஸ்மாஸ். ஆங்கிலத் துணைத் தலைப்புகள் கொண்ட படம்.

40. குற்றவாளியைத் தேடி.: பெற்றோர்களின்  கட்டுபாடுகளை மீறி நடந்த திருமணத்தின் பின் மணந்து கொண்டவள் துரோகம் செய்கிறாள். அவளைக் கொலைசெய்யத் தேடித்திரிபவன் இறுதியில் மரணமுற்ற அவளையும் நிர்க்கதியான அவளதுகுழந்தையையும் காண்கிறான். கொல்லப் போனவன் குழந்தைக்கு பெறுப்பேற்றுத் திரும்புகிறான்.. இயக்குனர் ஜோ திரையிடலின் போது ஆங்கிலத்தில் கதைச் சுருக்கம்வழங்கப்படும்

41. வசந்த காலப் பூக்கள் : இங்கிலாந்துக்குப் புலம் பெயர்ந்து மனம் பேதலித்துவாழும் ஒரு புகலிட இலங்கைத் தமிழ் இளைஞரொருவரின் வாழ்வு பற்றிய சோகநாடகம்.. இங்கிலாந்தில் வாழும் ஜான்சன் போன்றோர் நடித்த படம். இயக்கம் : குமரேஸ்வரன். திரையிடலின் போது ஆங்கிலத்தில் கதைச் சுருக்கம் வழங்கப்படும்

42. The Pesticide Trap : பன்னாட்டு மருந்துக் கம்பெனிகள் மூன்றாம் உலக நாடுகளில் விளைவிக்கும் சேதம் பற்றிய விவரணச்சித்தரம். இதில் இடம் பெறும் வீதிநாடகம் வ்விவரணப்படத்தின் சிறப்பான பகுதியாகும். இயக்கம் : எம்.சிவக்குமார். ஆங்கிலத் துணைத் தலைப்புகள் கொண்ட படம்.

43. வேர்கள் கடந்தும் : தமிழகத்தில் வாடும் லங்கைத் தமிழ் அகதிகள்படும் அல்லல்கள் மற்றும் துயர்கள் பற்றிய படம். அதிகார வர்க்கத்தவர் அம்மக்கள் மேல்மேற்கொள்ளும் அத்துமீறல்கள் பற்றிய விவரணப்படம். இயக்கம் : ரகுராம3 திரையிடலின் போது ஆங்கிலத்தில் கதைச் சுருக்கம் வழங்கப்படும்

44. சேமிப்புக்கு அப்பால்: தமிழகப் பெண்களிடம் உருவாகிவரும்கூட்டுணர்வையும் கிராமப்புறப் பெண்களின் சேமிப்புப் பழக்கத்தையும் அவர்களின்மீது அறிவொளி இயக்கத்தின் தாக்கத்தையும் எடுத்துரைக்கும் விவரணப்படம். இயக்கம்: எம்.சிவக்குமார்  ஆங்கிலத் துணைத் தலைப்புகள் கொண்ட படம்.

45. அதிசயம் அற்புதம் : மனிதர்களின் மூடப்பழக்கங்களைப் பயன்படுத்தி அவர்களின் அறியாமையைச் சுரண்டும் தமிழகத்தின் திடீர் கடவுள்களின் சாகசங்களின் பின்னிருக்கும் பொய்மையை விஞ்ஞான பூர்வமாக விமர்சனத்துக்கு உட்படுத்தும் படம். பிரபல தமிழ் நடிகர் நாஸர் நடித்த படம். இயக்கம் : எம்.சிவக்குமார். திரையிடலின் போது ஆங்கிலத்தில் கதைச் சுருக்கம் வழங்கப்படும்

46. சி.சு.செல்லப்பா : முது பெரும் இலக்கியவாதி சி. சு. செல்லப்பாவின் வாழ்வு அவரது உதாரணமான இலக்கியப்பணி பற்றிய விவரணப்படம். பாலசுப்ரமணியம் அருண்மொழி கூட்டாகத் தயாரித்த விவரணப்படம். காணற்கரிய ஆவணங்கள் கொண்டது இப்படம். இயக்கம் : அருண்மொழி திரையிடலின் போது ஆங்கிலத்தில் கதைச்சுருக்கம் வழங்கப்படும்

47. Getting Lost : சர்வதேச அளவில் உருவாகி வரும் இனவரைவியல்  திரைப்பட வகையினம் சார்ந்த படம். தமிழர் கலாச்சாரத்தில் பண்டிகைகள் சடங்குகள்போன்றவை பெறும் இடம் குறித்ததொரு விவரணச்சித்திரம். இயக்கம் : ஆர்.ஆர்.சீனிவாசன். ஆங்கிலத் துணைத் தலைப்புகள் கொண்ட படம்.

48. பச்சை மண் : தமிழகத்தைக் குலுக்கிய பெண் சிசுக்கொலைபற்றிய படம்.ஒரு நாடகத்தை கிராமமொன்றில் நிகழ்த்துவதன் வழி பார்வையாளர்களின் உரையாடலைத் தூண்டி விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும் குறும்படம் இது. இயக்கம் : மினி ஹரி ஆங்கிலத் துணைத் தலைப்புகள் கொண்ட படம்.

49. Three Songs : குழந்தைகளை விளையாட விடாது அவர்கள் மீது சுமத்தப்படும் காலனியக் கல்வி முறை பற்றிய விமர்சனம். பாடல்களின் வழி பெற்றோர்களுக்கு அறிவுறுத்தும் விவரணப்படம். இயக்கம் ஏ.எஸ். பத்மாவதி திரையிடலின் போது ஆங்கிலத்தில் கதைச் சுருக்கம் வழங்கப்படும்

50. Message that Move : வேலைக்குச்  செல்லும் பெண்கள் குழந்தை வளர்ப்பதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றிய படம். சகல விதங்களிலும் ஆண்கள் பொறுப்பெடுக்க வேண்டியதன் அவசியத்தைக் கோரும் விவரணப்படம். இயக்கம் :ஏ.எஸ்.பத்மாவதி மற்றும் ஜனனி திரையிடலின் போது ஆங்கிலத்தில் கதைச் சுருக்கம் வழங்கப்படும்

51. பவளக்கொடி அல்லது குடும்ப வழக்கு : மரபான தமிழ் நாடகத்தை அடிப்டையாகக் கொண்ட படம். அல்லி அர்ஜூனா நாடகத்தின் இடையில் பிரதான நடிகையின் கணவன் அவளது தமக்கையை மணம் முடித்துக் கொடுக்குமாறு கலாட்டா செய்கிறான். சமகால பலதார மணம் குறித்த நையாண்டியாகவும் இந்நாடகம் திகழ்கிறது. ஒளிப்பதிவு மற்றும் குறும்பட உருவாக்கம் : அருண்மொழி திரையிடலின் போது ஆங்கிலத்தில் கதைச் சுருக்கம் வழங்கப்படும்

52. The Ball: நோர்வேயில் வாழும் இருபது மாதக் குழந்தை ஒன்றுக்கும் பந்து ஒன்றுக்கும் இடையிலான ஒப்புமைகளைக் கொண்டிருக்கும் குறும்படம். தகப்பனால் வன்முறைக்குள்ளாகும் குழந்தையொன்று வீட் டைவிட்டு வெளியேறி விளயாட்டுப் போக்கில் ஏரியில் மூழ்கி மரணமுறுகிறது. பெற்றோருக்குச் செய்தி சொல்லும் படம். இயக்கம் :தமயந்தி. திரையிடலின்போது ஆங்கிலத்தில் கதைச் சுருக்கம் வழங்கப்படும்

வேர்ல்டு மூவிசுக்கு இடையில் இந்தப் படங்களையும், தேடிப் பிடித்துப் பார்த்து இன்புறலாம் (?) தானே?

Update : New Jersey Short Film & Documentary Film Festival . – a post from Boston Bala’s blog archives

மிக்சர் – II
‘A wednesday’ என்று ஒரு படம் பார்த்தேன். மும்பை குண்டு வெடிப்புகள் ஈன்ற மற்றொரு திரைப்படம். Cinematic என்று வர்ணிக்கத் தக்க கதைக் கருவை, அசலான களத்தில் படமாக்கியிருந்தார்கள்.  படத்தின் சஸ்பென்ஸை, பாதியிலேயே ஊகிக்க முடிந்தது. சுமார் ஒன்றரை மணி நேரம் ஓடும் இப்படத்தில், பாடல்கள் கிடையாது.

சின்ன வயசிலே, ‘பார்’ ( Paar), என்ற படத்தைப் பார்த்து, இந்த ஆளலெல்லாம் எனன் நடிகன் ( நசீருத்தின்ஷா)  என்று, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள் என்று புரியாமல் இருந்தது. இந்தப் படத்தில் தான் சந்தேகம் விளங்கியது.

பல வருடங்களுக்கு முன்பு, மணிரத்னத்திடம், பிடித்த நடிகர்கள் யார் என்று கேட்ட பொழுது, மோகன்லால், நசிரூத்தின் ஷா என்று குறிப்பிட்டிருந்தார்.

மத்த விஷயங்களில் எப்படியோ, இந்த விஷயத்தில் நானும் மணிரத்னமும் ஒண்ணு.

சென்ற வார காஃபி வித் அனு நிகழ்ச்சியில் பாலுமகேந்திரா வந்திருந்து சிறப்பித்தார்.  மனம் திறந்து பேசினார் என்று சொல்லிவிட முடியாது. ஷோபா, மூன்றாம் பிறை பற்றி உணர்ச்சி வசப்பட்டுப் பேசிக் கொண்டிருந்த பொழுது, கற்றது தமிழ் ராமும் , ‘பொல்லாதவன்’ வெற்றிமாறனும் இடையில் புகுந்து நிகழ்ச்சியின் போக்கை திசை திருப்பினார்கள்.

சஞ்சிகைகளில் வரும் தொடர்களைத் தொடர்ந்து வாசிக்கும் பழக்கம் போய் மாமாங்கம் ஆகிறது. என்றாலும் ஆனந்த விகடனில், நாஞ்சில் நாடன் எழுதும், ‘தீதும் நன்றும்’ என்ற தொடரும், ‘உயிர்மை’ இதழில் ‘ பாரதி மணியின் எழுதும் தில்லி அனுபவங்களும், பிரபஞ்சன் சமீபத்தில் தொடங்கியிருக்கும் ‘குமுதத்தின் கதையும்’ கீழே வைக்க இயலாதவாறு இருக்கின்றன.

பாரதி மணி.  பொலிடிகல் கரக்ட்னெஸ் இல்லாத அவர் எழுத்து, தில்லியின், நடுத்தர, உயர்நடுத்தர தமிழர்கள் பற்றிய அருமையான பதிவு. நிறையத் தகவல்கள். சென்ற இதழில் தொடரை நிறுத்துவதாகச் சொல்லியிருக்கிறார். நிறுத்த வேணாம், தொடர்ந்து எழுதுங்க என்று, மெயில் ஒன்று தட்டிவிட்டேன்.

பிரபஞ்சன் எழுதும் தொடர், குமுதத்தில் அவரது உதவி ஆசிரிய வாழ்க்கையை விவரிக்கிறது. தொடரெங்கும் எஸ்.ஏ.பி. அண்ணாமலை பற்றிய , அதிகமாக புழக்கத்தில் இல்லாத தகவல்கள் விரவியிருக்கின்றன. இது போல எழுதி, புனித பிம்பங்களைக் கலைக்கலாமா என்று, ‘பெரியவர்கள்’ பேசித் தீர்மானிக்கட்டும். அது வரை நான் கொஞ்சம் வாசித்துக் கொள்கிறேன்.

நாஞ்சில் நாடனை, அவரது ‘ தலைகீழ் விகிதங்கள்’ படமாக்கத்தைப் பார்த்து விட்டு, ஒரு கே.எஸ் கோபால கிருஷ்ணன் அல்லது பீம்சிங் டைப் படைப்பாளி என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன். ( குற்றம் என்னுடையதல்ல, தங்கர் பச்சானுடையது   ), இல்லை, தானொரு கி.ராஜநாராயணன் வகையறா என்று விளங்க வைத்துவிட்டார். விளிம்பு நிலை மனிதர்கள் குறித்து, அவரது கட்டுரைகளில் தெறிக்கும் அக்கறை, இதம்.

சமீபகாலமாக நிறைய எழுத்தாளர்களை வலைப்பதிவில் பார்க்கிறேன். [அனேகமாக அனைவருமே வலைப்பதிவு என்ற வடிவத்தை, கட்டுரை எழுதுவதற்கான ஊடகமாக customize செய்து, எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.]அவர்களிலே, வலைப்பதிவு என்ற வடிவத்தைச் சரியாகப் புரிந்து வைத்திருக்கும் மிகச்சிலரில், ஆர்.பி.ராஜநாயகமும்  ஒருவர். சின்னச் சின்னப் பதிவுகள், occasional name dropping, பின்னூட்டங்கள். வரும் பின்னூட்டங்களுக்குப் பதில் மரியாதை , சுவாரசியமான எழுத்து, இன்ன பிற….

அ.இ.அ.தி.மு.க உறுப்பினரும், திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை அமைச்சருமான, ஆற்காடு வீராஸ்வாமியவர்கள், ஜெயலலிதாவின் கோரிக்கைக்குப் பதிலளித்துப் பேசுகையில், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்து விட்டதாக கலைஞர் செய்தியில் பார்க்க நேர்ந்தது. இப்படிப்பட்டவர்களை எல்லாம் கட்சியில் வைத்துக் கொண்டு அம்மா எப்படிச் சமாளிக்கிறார் என்று யோசனையாக இருக்கிறது.

Saroja – கலாய்த்தலும், கலாய்த்தல் நிமித்தமும்
ஆடியன்சின் எதிர்பார்ப்புக்கு ஏற்றது போல, அவர்களுக்குப் பிடித்த மாதிரி படம் எடுத்து வெற்றி பெறுவது ஒரு வகை. ட்ரெண்டு பற்றியெல்லாம் கவலைப் படாமல் தன்னிஷ்டம் போலப் படம் எடுத்து, பார்ப்பவர்களை ரசிக்க வைப்பது மற்றொரு வகை.

வெங்கட் பிரபுவின் படங்கள் இதிலே இரண்டாவது ரகம்.

சரோஜா.

வெங்கட் பிரபுவின் முதல் வெற்றி தற்செயலானது அல்ல என்பதை இப்படம் அழுத்தமாக நிரூபித்திருக்கிறது.

ஒரிசாவில் இருந்து சரக்கேற்றிக் கொண்டு கிளம்பும் மித்தல் கெமிக்கல்ஸ்ஸின் டேங்கர் லாரி, ஹைவே யில் விபத்துக்குள்ளாக, அதனால், அந்த வழியாக இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் மாட்ச் பார்க்க, ஹைதராபாத் செல்லும் நாலு பேர் கொண்ட நண்பர் குழு, மாற்று பாதை மூலமாக ஹைதராபாத் செல்ல முயலும் போது, கோடீசுவரர் பிரகாஷ்ராஜின் மகளைக் கடத்தி வைத்துப் பணம் பறிக்க முயலும் கும்பலிடம் சிக்கிக் கொள்கிறார்கள்.

தமிழ்ச் சினிமா பார்க்கும் வழக்கம் கொண்டவர்கள், இறுதியிலே என்ன நடந்தது என்பதை ஊகித்துக் கொள்வார்கள்.

வினோதமான சைன்ஸ் பிராஜெக்ட்டுகளை மகளுக்குச் செய்து தரும் ஜெகபதிபாபு ( எஸ்.பி.சரண்) தான் குழுவிலேயே சீனியர். அவரது தம்பி காதல் தியாகி ராம்பாபு (வைபவ்), சீரியல் ஆர்ட்டிஸ்ட் அஜய்ராஜ் ( மிர்ச்சி ஷிவா), சமயசந்தர்ப்பமில்லாமல் சதா ஜோக்கடிக்கும் கணேஷ் ( பிரேம்ஜி)ஆகிய நால்வர் கூட்டணி படம் முழுக்க செய்யும் செய்யும் அட்டகாசங்கள், அரங்கை அதிர வைக்கின்றன.

இந்த நண்பர்கள், பாலியகாலத்தில் கமர்க்கட்டை காக்காகடி கடித்து, செபியா டோனில், ‘அறியாத வயசு… புரியாத மனசு’ என்று தொண்டை அடைக்கப் பாடிய நண்பர்கள் அல்ல. பிற்காலத்தில், தொழில் நிமித்தம் சந்தித்து , ஒன்றாக டென்னிஸ் விளையாடி, பியர் குடித்த நண்பர்களாக இருக்ககூடும். ஒருத்தரை ஒருத்தர் சார் என்று (தான்) விளிக்கும் நட்பு. எக்கச்சக்கமான சந்தர்ப்பங்களில் மட்டும் ‘டேய்’.

பிற படங்களில் சொதப்பும் பிரேம்ஜி, தமையன் கைகளில் ஜொலிக்கிறார். ‘ இக்கட்டான சூழ்நிலையில், மனைவியின் புகைப்படத்தைப் பார்த்து செண்டிமெண்டாக புலம்பும் சரணிடம், ‘ யாரு சார் இந்த ஃபிகர்?” என்று கேட்கும் இடம் 10000 வாலா சரம். படத்தில், எல்லாரையும் தூக்கிச் சாப்பிடுபவர், எஸ்.பி.சரண். சும்மா சொல்லக்கூடாது. பின்னுகிறார். நாலுபேரும் மானாவாரியாகக் கலாய்க்கிறார்கள், தங்களையும், பாரதிராஜாவையும்   அரங்கில் சதா சிரிப்பலை.

சாதா கதை, சாமர்த்தியமான திரைக்கதை. விறுவிறுப்பான எடிட்டிங். பத்திக்கிற மாதிரி ஒளிப்பதிவு. இந்தப்பக்கம் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை. அந்தப்பக்கம் நிதிதாவில் கலக்கலான டான்ஸ். எந்தவிதமான இண்டலெக்சுவல் பாவனையும் கிடையாது. இதுதான் சரோஜாவின் ஃபார்முலா.

நிச்சயமா பார்க்கலாம்.

madras day,gnani, manushyaputhran & vikatan
வரும் ஆகஸ்ட் 17 முதல், மெட்ராஸ் தின நிகழ்ச்சிகள் துவங்க இருக்கின்றன. வழக்கம் போல இந்த ஆண்டும் பல சுவாரசியமான நிகழ்வுகள் இடம் பெற உள்ளன. மெட்ராஸ் தின நிகழ்வுகளில் பொதுவாக, வடசென்னையின் பங்கு இருக்காது. இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வுகள், ராயபுரத்தில் நடைபெறுகின்றன. கலந்து கொள்ளலாம் என்று எண்ணியிருக்கும் நிகழ்வுகள்,

- ஆகஸ்ட் 18. மாலை 6.30 மணி . ‘அந்நாளைய சென்னைக் கொலைகள்’. ராண்டார்கை இந்தத் தலைப்பில் பேச இருக்கிறார்.

- ஆகஸ்ட் 20. மாலை 6.30 மணி. ‘ ‘எம்.ஆர்.ராதா – நூறாவது ஆண்டு அஞ்சலி. படத்துணுக்குகள் மற்றும் உரை வழங்குபவர் மோகன் ராமன்.

- ஆகஸ்ட் 22. மாலை 6.30 மணி . சென்னைத் தமிழ் (மெட்ராஸ் பாஷை) பற்றிய ஒரு ஆடியோ விஷுவல் பிரசண்டேஷன், வழங்குபவர். அதிர்ச்சி அடையவேணாம்…பத்ரி சேஷாத்ரி

மேற்கண்ட மூன்று நிகழ்ச்சிகளும் அவ்வைக் கலைக்கழகம், 15/9, சோமு செட்டி நாலாவது சந்து, ராயபுரம் என்ற முகவரியில் நடைபெற உள்ளன.

ஆனந்த விகடனின் புதிய வடிவம் எனக்கு மட்டும் தான் பிடிக்கவில்லையா அல்லது எல்லாருக்குமே அப்படித்தான் இருக்கிறதா ? இளைய தலைமுறையை குறி வைக்கிறோம் என்று பேர் பண்ணிக் கொண்டு, இருக்கிற வாசகர்களை இழந்து வருகிறார்கள் என்று படுகிறது. வெறுமனே, வண்ண வண்ணப் படங்கள் கலந்த துணுக்குத் தோரணம். பழைய கல்கண்டு இதழை சினிமாஸ்கோப்பில் பார்ப்பது போலத்தான் இருக்கிறது. இவர்கள் குறிவைப்பதாகச் சொல்கிற மல்ட்டிப்ளக்ஸ் இளையர்களிடம், இந்தப் புதிய விகடனைக் காட்டினால், ‘lousy’, என்று ஒற்றை வார்த்தையில் ஒதுக்கிவிடுவார்கள்.

நாஞ்சில் நாடனின் தொடர் தவிர, வேறு ஏதும் உருப்படியாக அதிலே இருப்பதாகத் தோன்றவில்லை. யாராவது, நாஞ்சில் நாடனை வலைப்பதிவு ஆரம்பிக்கச் சொல்லுங்கள். வாரம் பதினைந்து ரூபாய் மிச்சமாகும்.

மனுஷ்யபுத்திரன் , சாருநிவேதிதாவுக்கு எழுதிய ஒரு கடிதத்தில், ‘பொதுவாக புத்த்கங்கள் தொடர்பாக இணைய வாசகர்கள் காட்டும் பதட்டம் அதன் விற்பனையில் பிரதிபலிப்பதில்லை’ என்று குறிப்பிட்டிருந்தார். அதே கடிதத்தில், சீரோ டிகிரி நாவல், இது வரை மூன்றே பிரதிகள் தான் ( உயிர்மையின் மின்கடை மூலமாக) விற்கப்பட்டிருப்பதாகச் சொன்னது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ஆன்லைன் வாசகர்களிடையே நட்சத்திர அந்தஸ்து பெற்ற சாருநிவேதிதாவுக்கே இந்த கதியா? அல்லது இப்படியும் இருக்கலாம். ‘எழுத்தைக் காசு கொடுத்துப் படிக்க, பெரும்பான்மையான இணைய வாசகர்கள் விரும்புவதில்லை.

சில நாட்களுக்கு முன்பு, முன்பு எழுதிக் கொண்டிருந்து, தற்பொழுது எழுதுவதை நிறுத்திவிட்ட ஸ்ரீகாந்தை, நானும் நாராயணும் சந்தித்துப்  நீண்ண்ண்ண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். சுவாரசியமான மனிதர். எவ்வளவு நேரம் மொக்கை போட்டாலும், அதைத் தாங்கும் அளவுக்கு நல்லவர்.

‘ஹௌ டு நேம் இட்’ ஆல்பத்தில் ஒரு பாட்டையும், அதன் ‘மூலமான’ Bach இன் ஒரு இசைத் துணுக்கையும் ஒருங்கே போட்டுக் காட்டினார். கேட்டு முடித்த பிறகு அங்கே நடந்த சுவாரசியமான விவாதத்தை ரெக்கார்ட் செய்திருக்க வேண்டும் என்று வீட்டுக்குச் சென்ற உடன் தோன்றியது.

சாருநிவேதிதா, ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், இரா.முருகன் வரிசையிலே, ஞாநியும் புதிதாகத் தளம் தொடங்கி இருக்கிறார். ஆனால், உறுப்பினராகப் பதிவு செய்த பின்னர்தான் அவர் எழுதுவதை வாசிக்க முடியும். இந்த ஏற்பாட்டின் பின் உள்ள தர்க்கத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

தன் தளத்தை எத்தனை பேர் வாசிக்கிறார்கள் என்று ஒரு எழுத்தாளர் தெரிந்து கொள்ள விரும்புவது இயற்கை. அதே சமயம், அதை யார் யார் வாசிக்கிறார்கள், அவர் பெயர், பால், வயது, விலாசம் போன்ற தனிப்பட்ட தகவல்கள் எல்லாம் ஒரு எழுத்தாளருக்கு எதற்கு என்று புரியவில்லை. ஒரு வேளை, customer profiling செய்து, தன் புஸ்தகங்களை விற்பதற்காக இருக்குமோ?

சோதனைப் பதிவு
நாலைந்து மாதங்களுக்குப் பிறகு எழுதுவதால், வலைப்பதிவுக் கணக்கு உயிருடன் இருக்கிறதா என்பதற்கான சோதனையா அல்லது ‘டச் விட்டுப்

போயிடும்’ என்று பலரும் சொல்வதால், கொஞ்சமேனும் நீளமாக எழுத முடிகிறதா என்று சோதனையா என்பதை அவரவர் விருப்பப்படி, தலைப்புடன் பொருத்திக் கொள்ளலாம்.

வலைப்பதிவுக் கணக்கு உயிருடன் தான் இருக்கிறது.

எழுத்து?

சென்னையில் வெயில் குறைந்து மழை அடிக்கத் துவங்கியிருக்கிறது. நாள் ஒன்றுக்கு இருமுறையாவது ‘கண்கள் இரண்டால்’ பாட்டைக் கேட்டுக் கிறங்குறேன். எதிர்பார்ப்பில் இருக்கும் குழந்தை, பெண்ணாக இருந்தால், ரீதிகௌளை என்று பெயர் சூட்ட வேண்டும் என்று  சொல்லி, ஆடீ மாசத்துக்கு சீராட அம்மா வீட்டுக்குப் போயிருக்கும் சம்சாரத்திடம் செல்பேசியில் திட்டுவாங்கிவிட்டு, தொந்தரவு இல்லாமல் டீவி பார்க்க

உட்கார்ந்தால், கே டீவியில், காதல் பரிசு.

ஒரு காலத்தில் கலக்கோ கலக்கு என்று கலக்கிய அம்பிகா, ராதா சகோதரிகளுடன், ‘ காதல் மகராணி கவிதை பூவிரித்தாள்’ என்று கமலஹாசன் டூயட்டுப் பாடும் அமெச்சூர் படம். வில்லனாக ராஜ்குமார், ‘எம்ஜிஆர்’ லதாவின் தம்பி. ஆரம்பகால ராதிகா போன்றவர்களோடு சில படங்களில் பார்த்த நினைவு. பின்னாளில் ஸ்ரீபிரியாவைக் கட்டிக் கொண்டு பிசினஸ் பக்கம் செட்டில் ஆகிவிட்டார் என்று சினிமா எக்ஸ்பிரசிலோ, வேறு ஏதோ திரைப் பத்திரிக்கையிலோ படித்ததாக நினைவு. சினிமா எக்ஸ்பிரஸ் சந்தைக்கு வந்த பொழுது, பேசும்படம், சந்தமாமா நிறுவனத்தின் பொம்மை, ராம்நாத் ஆசிரியராக இருந்த பேசும்படம் போன்ற பத்திரிக்கைகள் தான் அதிக சர்க்குலேஷனில் இருந்ததாக நினைவு. பேசும் படத்தின் ஒவ்வொரு இதழிலும் கடைசிப் பக்கங்களில், ஒரு புதிய திரைப்படத்தின் கதை வசனம் இடம் பெறும். இப்போது, திரைப்படங்களின் ஸ்கிரிப்ட்டுகளை நூல் வடிவத்தில் வருகிறதே, அது போல அல்லாமல், நிசமாகவே படிக்கத் தோதாக இருக்கும். கிட்டதட்ட படம் பார்த்த திருப்தி அளிக்கும்.

பழனியப்பன் ராமசாமி, ஜெமினி சினிமா என்ற ஒல்லிப் பத்திரிக்கையை நடத்தி பின், இழுத்து மூடினார். ராம் பப்ளிசிடீஸ் என்ற சினிமா மக்கள்

தொடர்பு நிறுவனத்தை நடத்தி வந்த சித்ரா லட்சுமணன் கூட ‘திரைக்கதிர்’ என்ற பெயரிலே ஒரு ஒரு சினிமா பத்திரிக்கை நடத்தி வந்தார். அதிலே சினிமா கால்பாகமும், குறுநாவல் ஒன்று முக்கால் பாகத்திலும் இருக்கும். சுஜாதாவின் சில முக்கியமான குறுநாவல்களை வாசித்ததாக நினைவு. பழைய பேப்பர் கடையிலே, நாலணாவுக்கும் எட்டணாவுக்கும் பொறுக்கிப் படித்துக் கொண்டிருந்த போதுதான், அசோகமித்திரனும் ( பாவம் டல்பதடோ என்கிற மாலைமதி நாவல்), சுப்ரமண்ய ராஜுவும் ( இரவுகள் தவறுகள் என்ற மாலைமதி நாவல்) அறிமுகம் ஆனார்கள்.

பின்னால், பாலகுமாரன் எழுதிய முன்கதைச் சுருக்கம் ( தாய் இதழில் தொடராக வந்தது ) தொடரில் தான், சுப்ரமண்யராஜு பற்றி மேலதிகமாகத் தகவல்கள் தெரிய வந்தது. இறந்து விட்டார் என்று தெரிந்தது, கஷ்டமாக இருந்தது. நண்பணின் மரணம் பற்றி, அட்டாக் என்ற பெயரில் கதையாக குமுதம் இதழில் படித்தது நினைவுக்கு வருகிறது. ‘ சின்னச் சின்ன வட்டங்கள்’ என்ற சிறுகதைக்குப் பிறகு, பாலகுமாரன் மேல் அதிக மதிப்பு

ஏற்படுத்திய சிறுகதை அது.

அப்போது, பிரபல சஞ்சிகைள் அனைத்துமே தங்கள் குழுமத்தில் இருந்து மாத நாவல் பத்திரிக்கைகளை நடத்திக் கொண்டிருந்தது. குமுதத்தில்

இருந்து மாலைமதி, ராணியில் இருந்து ராணிமுத்து, குங்குமத்தில் இருந்து குங்குமச்சிமிழ், சாவியில் இருந்து மோனா. இது தவிர, ஜெயகாந்தன், கல்பனா என்கிற மாத நாவலையும், மறைந்த எழுத்தாளர் ராஜேந்திரகுமார் , ராஜாராணி என்கிற வினோத வடிவிலான மாதநாவலையும் வெளியிட்டு வந்தார்கள். இவற்றின் வெற்றிதான், பாக்கெட் நாவல், க்ரைம் நாவல் என்ற பல்ப் (pulp) நாவல் வகையறாக்களுக்கு முன்னோடியாக இருந்தது. நூல் நிலையங்கள் பிரசுரம் செய்யும் நூல் வடிவிலான கதைப் புத்தகங்கள், விலை அதிகமாகவும், அதே சமயம் எளிதில் கிடைக்காததாகவும் இருந்த காலகட்டத்தில், வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தவும், ஏற்பட்ட பழக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும், இந்த மலிவு விலை பல்ப் ஃபிக்ஷன்கள் உதவி செய்தன.

சமீபத்திலே, இந்த மாதநாவல் என்கிற எழுத்து வகையைச் சீரியசாக எடுத்துக் கொண்டு, blaft என்கிற ஆங்கிலப் பதிப்பகம், தேர்ந்தெடுத்த சில

குறுநாவல்களை, மொழிமாற்றம் செய்து பதிப்பித்தது என்பதை, நாளிதழ்களில் படித்துத் தெரிந்து கொண்ட போது மகிழ்ச்சியாக இருந்தது. எத்தனை புத்தகங்கள் விற்றன, எப்படி வரவேற்பு என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது.

புதிய தலைமுறையினரிடம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த, பதிப்பு நிறுவனங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய அம்சம், ‘ உள்ளடக்கம்’ அல்ல எழுத்திலே சுவாரசியம். வேலைக்குத் தயாராகும் இளையருக்கு, நேர்முகத்துக்கான டிப்ஸுகளைக் கூட, எவ்வளவு சுவாரசியமாக, தேவைப்படாதவர்கள் கூட, படிக்கும் வண்ணம் வாத்தியார் எழுதினார் என்பதை நினைத்துக் கொள்கிறேன்.

” நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், உங்கள் மாணவப்பருவம் முடியப் போகிறது ” என்று முடியும் அந்த ஒரு பக்கக் கட்டுரை குமுதத்தின் எந்த இதழில் வந்தது என்று தேசிகனிடன் விசாரிக்க வேண்டும், அல்லது சுப்புடுவிடம்?