Prakash’s Chronicle 2.0

‘general’ பகுப்பில் உள்ள வரவுகள்

வலைப்பதிவர் சந்திப்பு, என் பார்வையில்….

ஏப்ரல் 24, 2007 · 2 மறுமொழிகள்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, முதன் முதலாக நடந்த வலைப்பதிவாளர் சந்திப்பு நினைவுக்கு வந்தது. அப்போது நடந்த சந்திப்புக்கும் , இப்போது நடந்த சந்திப்புக்கும், கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை தவிர்த்து பெரிய வேறுபாடு இல்லை.

*********

ஏற்கனவே இருந்த முக்கியமான அலுவல் காரணமாக ( சினிமா பார்ப்பது) வரவேண்டாம் என்று இருந்த என்னை, சூறாவளி போல தொடர்ந்து வந்த குறுஞ்செய்திகள் பயமுறுத்தின. அதுவுமில்லாமல், ஓட்டுமொத்தமாக இவ்வளவு தமிழ்வலைப்பதிவர்களை ஒருங்கே தரிசனம் செய்யக் கிடைத்த வாய்ப்பை ஏன் விடுவானேன் என்று தோன்றியதும் நிசம்.

அதிமுக மாவட்ட அவைத்தலைவர் போல பயங்கர ஃபார்மலாக ஆரம்பித்த பாலபாரதி, சற்று நேரத்திலேயே, அமுக, திமுக, பாசக, சேபாகா, மதிமுக என்று பழைய ஃபார்முக்கு வந்தார் [ பேச்சளவில் நிற்காமல் , இணையத்தில் கல்யாண் நினைவஞ்சலிக் கட்டுரைகளைத் தொகுத்து நூலாகக் கொண்டு வந்து வெளியிட்டது, அருமையான விஷயம். பாலபாரதிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களை இங்கே பதிவு செய்கிறேன்.] . வட்டமாக உட்கார்ந்திருந்தவர்களில், இராம.கி அய்யா, சிறில், விக்கி, கிருபாசங்கர், பாஸ்டன் பாலாஜி, ரோசாவசந்த், மோகன் தாஸ், ஜி.,ராகவன், பொன்ஸ் போன்ற சிலரைத் தவிர்த்து பிறரை அடையாளம் தெரியவில்லை.

நூல் வெளியீடு முடிந்ததும், பெட்டகம் பற்றி அலெக்ஸும், பொதுவாக பாஸ்டன் பாலாஜியும் சிற்றுரை நிகழ்த்தினார்கள். எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, வட்டம் பெரிதாக, அதனால், யார் என்ன பேசுகிறார்கள் என்பதே புரியாமல் குழப்பமாக, உடனே சின்ன சின்ன குழுக்கள் தோன்றின.

தம் போட, கூட யாருமில்லாமல் கவலைப்பட்ட போது, கூந்தலழகர் மோகன்தாஸ் கை கொடுத்தார். ” நான் புடிக்க மாட்டேன், ஆனால் கம்பெனி தருகிறேன்” . கொஞ்ச நேரம் இருந்து விட்டு, நான் வசந்த், பாலா மூவரும் ‘வெளியே’ கிளம்பி விட்டோம்.

திரும்ப வந்து பார்த்த போது, கூட்டம் கலைந்து, அனைவரும் டீக்கடையில் கூடியிருந்தார்கள். மக்கள் டீவியில் இருந்து ‘கவர்’ செய்ததாகச் சொன்னார்கள். கொஞ்சம் நேரம் அங்கேயிருந்துவிட்டு, நானும் பாலராஜன் கீதாவும் கிளம்பிவிட்டோம்.

என்னுடைய கோணத்திலே இப்படித்தான் இருந்தது என்றாலும், கொஞ்சம் உருப்படியாகவும் பேசியிருக்கிறார்கள் என்பதை இந்தப் பதிவுகளைப் படித்துத்தான் தெரிந்து கொண்டேன்.

********

பகுப்புகள்: general

Shocking

பெப்ரவரி 11, 2007 · 7 மறுமொழிகள்

சரியாக இரண்டு மணி நேரங்களுக்கு முன்பு, அமீரகத்திலிருந்து ஃபோன் வந்தது. ஆசாத், சீரணிக்கவே இயலாத செய்தியைச் சொன்னார்… ‘ தேன்கூடு கல்யாண், சில மணி நேரங்களுக்கு முன்பாக உடல்நலம் குன்றி ( கார்டியாக் அரஸ்ட்) , மறைந்து விட்டார்..என்று

இந்தச் செய்தியை எப்படி உடைப்பது என்று புரியாமல் இரண்டு மணிநேரமாக கடுமையான உளைச்சலில் இருந்தேன்.

கல்யாண், சரியாக ஒரு மாதத்துக்கு முன்பு என் வீட்டீற்கு வந்திருந்தார், இரவு ஒன்பது மணிக்கு மேலாக..வந்திருந்து அதிகாலை இரண்டு மணி வரை பேசிக் கொண்டிருந்தோம். முப்பதுகளில் இருக்கும் ( இருந்த) இளைஞர்.. சாகக் கூடிய வயதல்ல..

இது குறித்து வேறு எந்தத் தகவலும் எனக்குத் தெரியவில்லை. அமீரகத்தில் ( குறிப்பாக ரியாதில் ) உள்ள நண்பர்கள் மேற்கொண்டு விவரங்களைத் தருவார்கள் என்று நம்புகிறேன்.

இந்த உலகம் வாழ லாயக்கற்றது என்று தோன்றும் சில தருணங்களில், இது முதன்மையானது.

பகுப்புகள்: general