Prakash’s Chronicle 2.0

‘Blogs’ பகுப்பில் உள்ள வரவுகள்

Thamizmanam – ‘vettippayal’ Balaji

April 12, 2007 · 3 மறுமொழிகள்

வெட்டிப்பயல் பாலாஜியின் இடுகைக்கு எழுதிய மறுமொழியை, சௌகரியத்துக்காக இங்கே சேமிக்கிறேன்.

*******************

உங்களை எல்லாம் தமிழ்மணம் நல்லா கெடுத்து வெச்சிருக்கு :-) . முதல்ல சில தகவல்கள்.

1. இந்திய மொழிகளிலே, தமிழிலே மட்டும் தான் , இது போன்ற சேவைகளைத் தரும் திரட்டி உண்டு. blogger என்ற மெகா வலைப்பதிவுச் சேவையில் கூட பின்னூட்டங்களைத் திரட்டும் வசதி கிடையாது.

2. தமிழ்மணம் இல்லாத ஒரு சூழ்நிலையைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். உங்க பதிவுக்கு வாசகரைத் திரட்டுவதற்குள் நாக்கு தள்ளிவிடும். உதாரணத்துக்கு, புதுசா ஒரு வலைப்பதிவு ஒன்றை ஆரம்பித்து, அதை தமிழ்மணம், தேன்கூடு போன்ற திரட்டிகளில் இணைக்காமல், கொஞ்ச நாள் நடத்திப் பாருங்கள். ரெண்டே நாளில் வாழ்க்கையே வெறுத்து விடும், அதாவது மறுமொழிகள், டிராக்பேக், எல்லாம் எதிர்பார்த்திருந்தால்.

3. இன்றைக்கு இரண்டாயிரத்து சொச்சம் பதிவுகள் இருக்கிற நிலையில், இது போல கேள்வி கேட்கிறீர்கள். இன்னும் இரண்டு வருடங்களில், பத்தாயிரம் பதிவுகளாகப் பெருகி விட்டால், தமிழ்மணம் உயரெல்லை கட்டுப்பாடு விதித்தாலும் விதிக்காவிட்டாலும், பதிவு செய்யும் frequency அதிமாகும் என்பதால் உங்க பதிவு தோன்றிய சில விநாடிகளிலேயே தொபுக்கடீர் என்று கீழே இறங்கிவிடும். அப்ப என்ன செய்வீங்க?

4. தமிழ்மணம் உருவான நோக்கம் உன்னதமானது – உருவான காலத்தில் பக்கத்தில் இருந்து பார்த்திருக்கிறேன் என்ற அடிப்படையிலும், பின்னர் கொஞ்ச நாள் நிர்வாகத்தில் பங்கு பெற்றிருக்கிறேன் என்ற அடிப்படையிலும் சொல்கிறேன். நூறோ என்னமோ பதிவுகள் மட்டும் இருந்த காலத்தில், feed reader, google reader போன்ற சேவைகள் இல்லாத நேரத்தில், தமிழ் வலைப்பதிவாளர்களை ஒன்றிணைக்கும் முயற்சியாகத்தான் துவங்கியதே தவிர, தனிப்பட்ட வலைப்பதிவாளர்களின் பாப்புலாரிட்டியை அதிகரிக்கும் நோக்கத்தில் அல்ல.

4 தமிழ்மணம் திரட்டி வேறு. பூங்கா வேறு. தமிழ்மணம், தன்னுடைய விதிகளுக்கு உட்பட்டு வரும் எல்லாப் பதிவுகளையும் திரட்டும். உள்ளடக்கம் பற்றி புகார் வந்தால் மட்டும், அங்கே மனிதத் தலையீடு இருக்கும். ஆனால் பூங்கா என்பது, வலை இதழ். ஆசிரியரின் விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டுத்தான் வெளிவரும். ஆசிரியர் குழுவின் அரசியல் பற்றி விமர்சிக்க உங்களுக்கு முழு உரிமை உண்டு – எப்படி சோவைப் பற்றி விமர்சனம் செய்கிறோமோ அப்படி-ஆனால், என்னுதைப் போட மாட்டேன் என்கிறார்கள் என்று குற்றச்சாட்டு வைக்க முடியாது.

5. தமிழ்மணம் ஏற்படுத்திக் கொடுத்த, சொகுசுகளால், எவ்வளவு நன்மை ஏற்பட்டதோ, அதே அளவு தீமையும் ஏற்பட்டிருக்கிறது. எந்த கஷ்டமும் படாமல், நாலு வரி கிறுக்கிவிட்டு ( உங்களைச் சொல்லவில்லை பாலாஜி, ஆக்சுவலி நான் உங்க சினிமா விமர்சனங்களோட தீவிர வாசகன்), அதை தமிழ் மணம், தேன்கூடு மாதிரி இடங்களிலே பதிவு செஞ்சுட்டா போதும். டிராஃபிக் என்ன?… பின்னூட்டம் என்ன, ஒவ்வொரு பின்னூட்டம் வரும் போதும், முகப்புப் பக்கத்திலே வருகிற சொகுசு என்ன… அங்க இங்க போய்ப் பாருங்க… வலைப்பபதிவுகளுக்கு டிராஃபிக் வரவெக்கிறது எவ்ளோ சிரமமான காரியம்னு..

6, இறுதியா ஒரு அட்வைஸ்…. பதிவுகளுக்காகத்தான் மறுமொழியே தவிர, மறுமொழிகளுக்காகப் பதிவு அல்ல. பதிவு நல்லா இருந்தால், கண்டிப்பா பட வேண்டியவங்க கண்ணுல கண்டிப்பா படும்… இல்லே, ‘ என் பதிவுக்கு நூத்து சொச்சம் பின்னூட்டம் வரும்,,, அதனாலே நாந்தான் டாப்பு, எப்பவும், தமிழ்மணம் முகப்பில், வலப்பக்க மூலையில் என் பேர் வந்துகிட்டே இருக்கணும்னு சொன்னா… அப்பறம் உங்க இஷ்டம்.

பகுப்புகள்: Blogs

Vodkathon 2.0

April 1, 2007 · 1 மறுமொழி

சென்ற வருடம் போலவே, இந்த வருடமும் vodkathon நடந்து முடிந்திருக்கிறது.

அழைப்பு கிடைத்தும், சென்ற வருடம் போலவே இந்த வருடமும் – பந்த், அவசியம் அட்டெண்ட் செய்தே ஆகவேண்டிய திடீர் விருந்தினர்கள், குடிக்கப் போகும் ஒன்றரை க்ளஸ் பியருக்காக அவ்ளோ தூரம் போயே ஆகவேண்டுமா என்று திடீரென்று தோன்றிய ஞானோதயம், ஆர்கனைஸ் செய்த செய்த செந்தில் தவிர வேறு யாரையும் நேரடிப் பரிச்சயம் இல்லை என்பதா ஏற்பட்ட திடீர் தயக்கம் போன்ற பல காரணங்களால் – என்னால் கலந்து கொள்ள இயலவில்லை.

சிரமம் பார்க்காமல் போய் வந்திருக்கலாம் என்று, செந்தில்
எழுதியிருக்கும் இதைப் பார்த்ததும் தோன்றுகிறது…

Many blogs were dissected, bloggers were lampooned, secrets were shared, gossips were gossipped, and above all Vodka was drunk

நிகழ்ச்சி நடந்த அதே நேரத்தில் , அதற்கு ஈடு கட்டும் விதமாக , geoffrey’s இலே இரு நண்பர்களுடன் உட்கார்ந்து , பெங்களூர் கச்சேரிக்குச் சீயர்ஸு சொன்னோம்..

கேட்டிருக்குமா?

பகுப்புகள்: Blogs · thanni

Blogs in Tamil, A Letter dated May 14, 2003

மார்ச் 12, 2007 · 2 மறுமொழிகள்

ராயர் காபி க்ளப் குழுமத்தில், மாலன் அவர்கள் நான்கு வருடங்களுக்கு முன்பு எழுதிய மடல்,

அன்பு நண்பர்களுக்கு,

இணையத்தில் உலாவுகிறவர்களில் பலர், Blog என்பதைப்பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். நம் எண்ணங்களைப் பதிந்து கொள்ள, பகிர்ந்து கொள்ள, பிரசுரிக்கிற உதவும் இணைய வாய்ப்பு அது. ஆங்கிலத்தில் ஆயிரக்கணக்கில் Blogகள் இருக்கின்றன. தமிழில் நான் அறிந்த வரை அதிகம் இல்லை.

தமிழில் Blogகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். இது வரை தமிழில் இரண்டு Blogகளை வெவ்வேறு தளங்களில் உருவாக்கியுள்ளேன்.ஒன்று என் எழுத்துக்களை வெளியிடும் Blog.மற்றொன்று தமிழ் ஹைக்கூக்களை வெளியிட.

அவை:

http://maalanblog.blogspot.com

http://tamilhaiku.rediffblogs.com

கணினி உலகைச் சேர்ந்த சிலர் இந்த Blog களைப் படித்து கருத்துக்கள் அனுப்பியுள்ளார்கள். ஆங்கிலththil Blog ஒன்றை வெளியிட்டு வரும் நானறியாத கிங்ஸ்லி என்ற நண்பர் இந்த Blogகளைப் பார்த்து உற்சாகம் அடைந்து அவரது Blogl தமிழில் எழுதிப்பார்த்து இருக்கிறார்.

என்றாலும் பலர் இந்த Blogகளை படிக்க முடியவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

Blogல் ஆர்வம் உள்ள நண்பர்கள் இந்த இரு முகவரிகளுக்கும் சென்று அவற்றை வாசிக்க முடிகிறதா என்று தெரிவித்தால், தமிழில் Blogகள் உருவாக்கும் முயற்சியைத் தொடர இயலும். தொழில் நுட்ப வல்லுநர்கள் பிரசினைக்குத் தீர்வுகளையும் சொல்ல முன்வந்தால் மகிழ்ச்சி அடைவேன். இணையத்தின் எல்லா நவீன அம்சங்களுக்கும் நாம் தமிழை எடுத்துச் சென்று தமிழ் எந்தவகையிலும் எவருக்கும் சளைத்ததல்ல என்பதை நிறுவக் கடமைப்பட்டுள்ளோம்.

நன்றி

இந்த நான்கு வருடங்களில் எத்தனை மாற்றம்? பிரமிப்பாக இருக்கிறது

பகுப்புகள்: Blogs · flashback

படித்ததில் பிடித்தவை

நவம்பர் 29, 2005 · 9 மறுமொழிகள்

கொஞ்ச நாளாகவே நான், எழுதுவதை நிறுத்தி விட்டு படித்துக் கொண்டிருக்கிறேன். உண்மையாகச் சொல்ல வேண்டும் என்றால், வலைப்பதிவுகள் ரொம்பவே போரடிக்கிறது. இதற்கு முக்கியமான காரணம், இரண்டு வருடங்களாக தொடர்ந்து வாசித்து வந்ததில் இருந்து, எந்தப் பிரச்சனையில் யார் என்ன எழுதுவார்கள் என்பதை முன்கூட்டியே ஊகித்து விட முடிவதுதான். நாளை, ரஜினிகாந்துக்கு சந்திரமுகி படத்துக்காக தேசிய விருது கிடைத்து விட்டது என்று அறிவிப்பு வந்தால், அடுத்த சில நாட்களுக்கு, வலைப்பதிவுகளில் யார் யார் என்ன எழுதுவார்கள் என்று ஊகிப்பது வெகு சுலபம். அடிப்படையில் வாசகனாகவும், எதேச்சையாக எழுத வந்தவனுமாக இருக்கிற எனக்கு, இந்த டெம்ப்ளேட் தன்மை மிகுந்த சலிப்பை உண்டு செய்கிறது. அதையும் மீறி தொடர்ந்து படித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

……இஷ்ட்டாப்ப்ப்ப்..

ரொம்ப ஓவரா சீன் போடறேன் போலிருக்கு…

ஆரம்பம் இங்க

மேட்டர் என்னன்னா, கொஞ்ச நாள் முன்னாடி வரை, பத்மப்ரியான்னு ஒரு அம்மிணி வலைப்பதிவுல, கதை எழுதிட்டு இருந்தாங்க.. தொடர்கதை எல்லாம் படிச்சு ரொம்ப நாளாச்சு.. இருந்தாலும், நினைவுப்பெட்டகம் னு ஒரு தொடர்கதையை விடாமப் படிச்சு வந்தேன். இப்ப திடீர்னு காணோம். சில சமயம் நான் எப்பவோ எழுதினதைப் படிச்சுப் பார்த்தாலே, அட, இத்தனை கேவலமா எழுதீருக்கோமான்னு கடுப்பா இருக்கும். சில பேர் எழுதினதை அடிக்கடி படிச்சுப் பாக்கணும்னு தோணும். தொடர்ந்து எழுதினா நல்லா இருக்குமேன்னு சில பதிவுகளைப் பார்த்தா தோணும்.. இந்த மூணாவது கேடகரியிலே விழறவங்க ரொம்ப கம்மி. அப்படி எழுதிட்டு இருந்தாங்க… திடீர்னு ஆளைக் காணோம்.. மதி சுட்டியிருந்த கொலைவாணி, அடச்சே, கலைவாணி எழுதற பதிவுகளை சமீபத்துல படிச்சதுலேந்து… , தெலுங்குப் பையன் ஒர்த்தனுக்கு தமிழ் கத்துக்குடுத்த கதையும் நல்ல கூத்து, மெட்ராஸ் பொண்ணு.. நல்லா நின்னு விளையாடுது… தமிழ்பதிவு ஒண்ணும் ஆரம்பிச்சுருக்காங்க போல பார்ப்போம்..

அதன்னெமோ, தமிழ்ல கூட்டு வலைப்பதிவுங்கற concept அத்தனை பிரபலமாகவில்லை.. இன்னிக்குப் புதுசா பத்ரி, கிரிக்கெட் பத்தின கூட்டு வலைப்பதிவு ஒண்ணை ஆரம்பிச்சுருக்கார்.. கொஞ்ச நேரம் முன்னாடி வரைக்கும் ஸ்கோர் மூணு ( அதாவது உறுப்பினர் எண்ணிக்கை ).. இது எப்படிப் போகுதுன்னு பார்க்கணும்.. இந்த மாதிரி niche வலைப்பதிவுக்கு, டார்கெட் ஆடியன்ஸ் யாருன்னு மொதல்லயே முடிவு செஞ்சுடறது நல்லது… புள்ளிவிவரங்களை கையிலே வெச்சுகிட்டு சுத்தறவங்களுக்கு மட்டுமா இல்லாட்டி, பொஜ்ஜனதுக்காங்கறது முக்கியம்… ஏன்னு கேட்டீங்கன்னா, நான் தொடர்ந்து படிக்கிற ஆங்கில வலைப்பதிவு ஒண்ணு இருக்கு..சுமார் ஏழுட்டு பேர் சேர்ந்து நடத்தறது.. பொருளாதாரம் தொடர்பானது.. இருங்க இருங்க ஓடாதீங்க…நடைமுறையிலே நம்மோட வாழ்க்கையை, பொருளாதாரம் எந்த அளவுல தாக்கம் ஏற்படுத்துதுங்கற மாதிரியான கட்டுரைகள், சுட்டிகள் நிறையக் கிடைக்கும்… அதுல அமித் வர்மா போன வாரம் எழுதிய மேட்டர்லேந்து ஒரு பகுதி

Consider this experiment: you are a punter, and you get a letter from me sayingthat I have the ability to forecast the result of all cricket matches, and ifyou pay me Rs. 10,000, I shall tell you what will happen in the next game so that you can make a killing — perhaps in crores — by betting on it. I invite you to pay me Rs 10,000 for the results of the next game. I promise you that I shall return the money if my prediction turns out to be incorrect. We work out an online mechanism by which you can cancel the payment right after the game if you wish to.

I get it right. I make the same offer regarding the next game.You pay me Rs 10,000 more, and this time make a modest bet with your bookie on the result I predict. I get it right again. You pay me my fee for the third game as well, and bet an even bigger amount with the bookie. I get it right again. You make a killing. I up my fee to Rs 1 lakh per game. You accept, having already made far more than that.

So are you a schmuck for having done all this?

இதை இல்லாட்டி, இதை படிச்சுப் பாருங்களேன்.. கூட்டு வலைப்பதிவாளர்களுக்குள்ள இருக்கிற சினர்ஜி ரொம்ப முக்கியமானது… தமிழ்ல அதுமாதிரி ( பொருளாதாரம்னு மட்டுமில்லை, எந்த துறையாக இருந்தாலும்..) சாத்தியம்னு நினைக்கிறவங்க கைய தூக்குங்க..

ரொம்ப நாளா தேன்துளி பத்மாவைத் தேடி, இன்னிக்குத்தான் இங்க கண்டு பிடிச்சேன்..ஏன் தொடர்ந்து வலைப்பதியறதில்லைங்கறதுக்கு ஒரு காரணம் சொல்லி இருந்தாங்க… நடுவில ரெண்டு வாரம், வலைப்பதிவுகள் பக்கம் வராம இருந்ததால, எனக்கு context புரியலை… இருந்தாலும், பாசாங்கில்லாம , மேல்பூச்சு இல்லாம நேர்மையாக எழுதறவங்க, கொறைச்சலாக இருக்கிற சூழ்நிலையிலே , அவங்க சொன்னது வருத்தமா இருந்தது… மேசைல உக்காந்து கூகிள் செய்து, கண்டு பிடிக்கிற விஷயங்களை விடவும், அவங்க எழுதின நேரடியாக அனுபவங்கள் ரொம்ப அழுத்தமாக இருந்தது..நாளைக்கே மீண்டும் வந்து புதுசா ஒரு பதிவைப் போடுவாங்கன்னு நம்புவோம்..

நகைச்சுவையாக எழுதறவங்க ரொம்ப கம்மியாயிட்டாங்க.. ஏதோதோ வழியாப் போய் சட்டுன்னு இவங்க மாட்டினாங்க.. இவங்க ஒரு வடக்கத்திப் பொண்ணுங்கறது என்னுடைய அனுமானம். பொண்ணு பாக்க வந்த விஷயத்தை எழுதியிருக்காங்க.. hilarious ன்னுவாங்களே, அந்த கேடகரி..வயிறு வலிக்கச் சிரிக்கலாம்..தமிழ்ல இந்த அளவுக்கு எழுதக் கூடியவ்ர் ஒர்த்தர் கீறார். ஆனா, எழுதவே மாட்டார்..கேட்டா, வேலை, ரொம்ப பிசி ன்னுவார்.. சஞ்சீத், சந்தோஷ், சசின்னு நெறையப் பேர் நல்லா எழுதறாங்க… குறிப்பாக, சசிகுமார்.. வலைப்பதியும் போது, அது தொடர்பான விஷயங்களை தோண்டி எடுத்து, தகவல் சேகரித்து எழுதறதுங்கறதை எத்தனை பேர் செய்யறாங்கன்னு தெரியலை.. அய்யோ… எதுக்கு வம்பு, நான் செய்யறதில்லை. ஆனால், சசிகுமார் தருகிற புள்ளி விவரங்களும், சொல்ற விதமும், ஆச்சர்யமும் சந்தோஷத்தையும் தருது… சின்னப் பசங்கதான் இப்படின்னா, வலையிலே ஊறி கொட்டை போட்ட ஈரோடு செல்வராஜும், சமயத்துல பேஜார் பண்றார்… இன்னிக்கு செஞ்ச மாதிரி

சமீபத்துல துவங்கிய பதிவுகளிலே குறிப்பிட்டுச் சொல்லணும்னா, மதுரை காமராசர் பல்கலைக் கழக, இதழியல் பிரிவு துவங்கியிருக்கிற வலைப்பதிவுதான்…துறை மாணவர்களின் பயிற்சி இதழாக அது இருக்கும்னு டாக்டர். ஆர். சாந்தா சொறார்.. இந்தியாவிலேயே முதல் முறையா இது போல நடக்குதுன்னு நினைக்கிறேன்..

டிஜே

மரம்

காசி ஆறுமுகம்

பகுப்புகள்: Blogs

மறந்தே போச்சு….. ரொம்ப நாள் ஆச்சு

நவம்பர் 6, 2005 · 28 மறுமொழிகள்

தமிழ் தட்டச்சு டச் விட்டுப் போகக்கூடாதுங்கறதுக்காக அவசரமா அவசியமா இந்தப் பதிவு.

எழுதணும்னு நினைச்சு, மனசின் ஓரத்திலே போட்டு வெச்ச விஷயங்களின் எண்ணிக்கை கூடிக்கிட்டே போகுது.. எழுதியிருக்க வேண்டிய பதிவுகள் அனைத்தையும் , சுருக்கமா ஒரே பதிவிலே இங்கே எழுதறேன். ….

1. மரவண்டு கணேஷ் நடத்தின போட்டியிலே புத்தகப் பரிசு பெற்ற கார்த்திக் ராமாஸ், தன்னுடைய சார்பா, என்னை அந்தப் புத்தகம் வாங்கிக்கச் சொன்னார். நானும் ரொம்ப பிகு செய்யாம வாங்கிகிட்டேன். காரணம், அது பிரமிள் எழுதின கட்டுரைத் தொகுதி. இதுக்கு முன்னாடி பிரமிள் எழுதின புத்தகம் ஏதும் படிச்சதில்லை. இதை படிச்சு முடிச்சதும், சும்மா அப்படியே உருவி விட்ட மாதிரி ஆயிடுச்சு. புதிய சொல்லாடல்களால், மொழி நடையால் என்னை அதிகம் ஈர்த்தவர் காலம் சென்ற சு.ரா. பிரமிளும் அதே வரிசையில் , குறைந்த பட்சம் என்னளவில், வருகிறார். வெகுசன ஊடகங்ககளில் பிடியில் இன்னும் சிக்காமல் மிக நவீனமாக அதே சமயம் உயிர்ப்புடன் எழுதி வலையில், மேற்படி இடங்களிலும் உலாவரும் சில ’strictly-for-private-circulation’ எழுத்தாளர்கள் எங்கிருந்து புறப்பட்டு அல்லது எந்த வழியாக பயணப்பட்டு வந்தார்கள் என்று நிதர்சனமாகத் தெரிகிறது. இன்னும் பிரமிளின் புத்தகங்கள் சிலவற்றை வாங்கிப் படிக்க இருக்கிறேன்.

‘நாம்கே வாஸ்தே’ ஆக அல்லாமல் மனப்பூர்வமாகச் சொல்கிறேன். கணேஷ், கார்த்திக், ரொம்ப நன்றி.

2. ஒரு மாத காலமாக குவிந்து விட்ட வலைப்பதிவுகளில் இருந்து, தமிழ்மணம் சர்ச்சை தொடர்பான பதிவுகளைத் தேடிப் படிப்பதில் சிக்கல் ஏதும் இருக்கவில்லை. அதான் தமிழ்மணம் ஆவணக்கிடங்கு இருக்கிறதே… இந்தப் விவகாரத்தில், இந்திய வாழ், குறிப்பாக தமிழ்நாடு வாழ் வலைப்பதிவாளர்கள், அந்தக்கால சரத்பாபு மாதிரி, அதாவது ரொம்பவும் ஜென்டில்மேன் தனமாக நடந்து கொண்டார்கள் என்பதில் எனக்கு வருத்தம் உண்டு. கருத்து அல்லது மாற்றுக் கருத்து எதுவாக இருப்பினும் அதைப் பொதுவில் பகிர்ந்து கொண்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும், காசி மீதான தனிப்பட்ட தாக்குதல்கள், உள்நோக்கத்தை சந்தேகித்து எழுதிய பதிவுகள் ஆகியவற்றின் வீரியம் குறைந்திருக்கும் என்பது என் அபிப்ராயம். இது தொடர்பாக செல்வராஜ், சன்னாசி ஆகியோர் எழுதிய கருத்துக்களுடன் முழுமையாக உடன்படுகிறேன்.

3. நேற்றைக்கு வெங்கட் சாமிநாதனை, அவரது இல்லத்தில் வைத்து, நானும் கசாகூளம் சந்தோஷ¤ம் சந்தித்தோம்.
ஏறக்குறைய அமெரிக்காவுக்குப் பக்கத்தில் இருக்கிற மடிப்பாக்கத்தில், அவரது வீட்டை கண்டு பிடிக்கவே நாழியாயிற்று. இறுதியில், தெருமுனையில் இருந்து அவரே வந்து அழைத்துக் கொண்டு சென்றார். நடந்தது இலக்கிய ரீதியிலான சந்திப்பு என்று நினைப்பீர்கள்… அதுதான் இல்லை. கணிணி பற்றி கற்றுக் கொடுப்பதற்காக…மேலும், விகிபீடியாவில் கொஞ்சம் உருப்படியாக வேலை செய்வதற்குத் தேவையானதகவல்கள் சேகரிக்க… கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தோம். என்னை கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்து விட்டு, ” are you from kizakku pathippakam? ” என்றார். சரி எதுக்காச்சும் உபயோகப்படும் என்று நினைத்து ‘ ஆமா சார்.. அங்க ப்ரூ·ப் ரீடரா வேலை பாக்கறேன்..” என்று சொல்லாம் என்று நினைத்தேன். ஆனால் அவருக்கும் கிழக்குப்பதிப்பகத்தாருக்கும் இடையிலான டேர்ம்ஸ் எப்படி என்று உத்தேசமாகக் கூடத் தெரியாது என்பதால் இல்லை சார் என்று சொன்னேன். பிறகு, ஏகப்பட்ட குப்பைகள் சேர்ந்திருந்த அவரது கணிணியை சுத்தம் செய்து, ஒருங்குறி நிறுவி, ஜிமெயிலில் நேராகவே தமிழில் அடிக்கக் கற்றுக் கொடுத்து விட்டு, அட்டகாசமான ·பில்டர் காபி சாப்பிட்டு விட்டு, கிளம்பிய போது மணி ஆறரை. பாடம் பாதியிலே நிற்கிறது. இன்னும் இரண்டு வாரங்கள் கழித்துத் தொடரும். ஒரு ஆப்பிரிக்கப் படத்தைப் பற்றிச் சொன்னார். அடுத்த முறை வரும் போது போட்டுக் காமிக்கிறேன் என்று சொன்னார். நந்தா கந்தசாமி அனுப்பிய ஓவியங்கள் சிலவற்றை காண்பித்தார். அற்புதமாக இருந்தன. அடுத்த முறை செல்லும் போது, யாத்ராவில் அவர் எழுதிய கலை இலக்கிய விமர்சனங்கள், சமகால இலக்கியவாதிகளுடான அவரது உரசல்கள், அக்கிரகாரத்தில் கழுதை, சுந்தர.ராமசாமியுடன் அவரது நட்பு, நட்பின்மை, பிரமிளுடன் அவர் நடத்திய சர்ச்சைகள், காலம் விருது பெற்றபோது நடந்த சர்ச்சைகள் இவற்றைப் பற்றி எல்லாம் பேச வேண்டும்.

4.தீபாவளி ரிலீஸ் படம் ஒண்ணு கூட இன்னும் பார்க்கலை.

5. CBSE பள்ளிகளில், ஒரு குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை இருந்தால், அந்தக் குழந்தைகளுக்கு கல்வி இலவசமாகச் அளிக்க வேண்டும் என்று ஒரு ஆணை பிறப்பிக்கப் பட்டிருக்கிறது. இதை விட பேத்தலாக இருக்க முடியாது. பெண் குழந்தைகளின் கல்வி முக்கியமானது என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால், இந்த விதிமுறையை பின்பற்றினால், என்ன நடக்கும் என்று யோசித்துப் பார்க்கவேண்டும். பெரும்பான்மையான சிபிஎஸ்ஈ பள்ளிகள், அரசு உதவி பெறாமல், தனியார்களால் நடத்தப்படுகின்றன. அவர்கள், இலவசமாகக் கல்வி அளிக்க வேண்டுமே என்ற காரணத்தால், நட்டத்தை குறைக்க முடிவு செய்தால் என்ன நடக்கும்? படிக்கும் பெண்களின் எண்ணிக்கை குறையும். ஏதாவது காரணம் காட்டி பெண்களை சேர்த்துக் கொள்ளவே மாட்டார்கள். தனியார் பள்ளிகளுக்கு tuition fees தான் முக்கியமான வருவாய். இந்த விதிமுறை அமுலுக்கு வந்தால், சிக்கலாகிவிடும் என்ற காரணத்தால், பள்ளிகளை மெட்ரிக் முறைக்கு மாற்றிக் கொள்வார்கள். இன்னும் பல சிக்கல்கள் இதனால் ஏற்படும்.

அரசுக்கு இந்த திட்டத்தை முன்மொழிந்த அதிகாரி, ஒரு கோய்ந்த்சாமியாகத்தான் இருப்பார் என்று திடமாக நம்புகிறேன்.

6. சமீபத்தில் சென்னைக்கு வந்து செட்டில் ஆகிவிட்ட, ரவிஸ்ரீனிவாஸின் ஆருயிர்த் தோழர், தொலைபேசியில் கூப்பிட்டுச் சொல்லி இருக்காவிட்டால், திவாலீ என்று ஜெயா தொலைக்காட்சியில் இடம் பெற்ற இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சியை தவற விட்டிருப்பேன். சுமார் ஐந்து மணிநேரம் கட்டிப் போட்டு விட்டது. நிகழ்ச்சியில் பாடிய. ‘ நான் தேடும் செவ்வந்திப் பூவிது’ பாட்டுக்காக, கோடி ரூபாய் கொடுக்கலாம். என்கிட்ட அத்தனை ரூவா இருக்குதாங்கறது அடுத்த பிரச்சனை. அந்த நிகழ்ச்சியின் இறுதிப்பகுதி வரும் ஞாயிற்றுக்கிழமை, அதாவது நாளைக்கு மாலை நாலு மணிக்கு ஒளிபரப்பாகும். தவறாமப் பாருங்க…

7.ஹரிக்கேன் முனிம்மாவால், இரண்டு நாட்கள், மின்சாரம், தொலைத் தொடர்பு, பால், மெழுகுவத்தி, இந்து நாளிதழ், கோல்ட் ·ப்ளேக் கிங்க்ஸ், போன்றவை கிடைக்காமல் பாதிக்கப்பட்ட ஜந்துக்களில் நானும் ஒருவன். வானொலியே துணை. 1987 மழை தான் நினைவுக்கு வந்தது. நிவாரணப் பணிகள் துரிதமாக நடந்தன. ஜெயலலிதா அரசு இத்தனை விரைவாகவும், நேர்த்தியாகவும் செயல்பட்டுப் பார்த்ததில்லை. ‘தேர்தல் வருதுல்லா…அதான்…’ என்று டீக்கடையில் பேசிக் கொண்டார்கள். இருந்தாலும், இந்த மழை பாதிப்பை சமாளிக்க தனித்திறமை வேண்டும். அது இந்த அரசுக்கு இருந்திருக்கிறது.

8. ரெண்டாவது இன்னிங்ஸை துவக்கி இருக்கும் பசுபதிராயருக்கு வாழ்த்துக்கள்.

பகுப்புகள்: Blogs