Posted by: Prakash on: மார்ச் 20, 2008
பணியாற்றிக் கொண்டிருந்த திரைப்படத்தில் இருந்து ஜெயமோகன் வெளியேற்றப்பட்டதாகச் சற்றுமுன் செய்தியைப் படித்ததில், இதை விட மோசமாகக் கருத்துச் சுதந்திரத்தை யாரும் கேலி செய்து விட முடியாது என்றே தோன்றியது.
நகைச்சுவை என்ற வகைப்பாட்டில் எழுதப்பட்ட , சிவாஜி, எம்ஜிஆர் குறித்தான அந்த வலைப்பதிவுக் கட்டுரையுடன் உடன்படுகிறோமா இல்லையா என்பது வேறு விஷயம். ஜெயமோகன் எழுதியதிலே நகைச்சுவை அம்சம் இருந்ததா, நேர்மை இருந்ததா, கூட்டம் கூட்டமாக சென்று பார்த்த தமிழ்ச்சினிமா ரசிகர்களின் ரசனை பற்றிய தெளிவு இருந்ததா, தமிழ்ச்சினிமா இயங்கிய விதம் குறித்த புரிதல் மற்றும் விவரஞானம் இருந்ததா என்பதல்லாம் விவாதத்துக்கு உரிய விஷயங்களே.
ஆனால், ஒருவர், தன் மனதுக்குச் சரி என்று பட்ட அபிப்ராயங்களைப் பொதுவிலே பதிவு செய்தால், அதிகாரத்தில் இருப்பவர்கள் அவரைத் தண்டிக்கமுடியும் ( வாய்ப்புகளையும், வருவாயையும் தட்டிப் பறிப்பதன் மூலம்) என்கிற நிலைமை ஆபத்தானது.
சக வலைப்பதிவர் என்கிற முறையிலே, – ஜெயமோகன், தான் பணியாற்றிய சினிமாவில் இருந்தது வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார் என்ற செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் – ஜெயமோகனுக்கு என் ஆதரவையும், நினைத்தால் கூட்டம் போட்டு யாரையும் தண்டிக்க முடியும் என்பது போலத் தன்னிச்சையாகச் செயல்படும் சினிமாக் கோஷ்டிக்கு என் கண்டனத்தையும் பதிவு செய்கிறேன்.
கருத்துச் சுதந்திரத்தை இவர்கள் எங்கே மதிக்கிறார்கள். உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்.
கூடவே என் கண்டனங்களையும்
இதெல்லாம் உண்மையா என்பதை உறுதி செய்ய,
ஜெயமோகன் தளத்தில் எந்த தகவலும் இல்லையே, ஏன்?.
உண்மையென்றால் அது வருத்தமளிக்கும் செய்தி.
உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது. மேலும் அதிகமான இணைய நண்பர்களுக்கு உங்கள் பதிவினை கொண்டு செல்ல http://www.tamilish.com -ல் சமர்பிக்கவும். வாழ்த்துக்கள்
Hi
Let’s come together on http://www.tamiljunction.com to bring all the Tamil souls unite on one platform and find Tamil friends worldwide to share our thoughts and create a common bond.
Let’s also show the Mightiness of Tamils by coming together on http://www.tamiljunction.com
மார்ச் 20, 2008 இல் 6:56 பிற்பகல்
///வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார் என்ற செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் – ஜெயமோகனுக்கு என் ஆதரவையும், நினைத்தால் கூட்டம் போட்டு யாரையும் தண்டிக்க முடியும் என்பது போலத் தன்னிச்சையாகச் செயல்படும் சினிமாக் கோஷ்டிக்கு என் கண்டனத்தையும் பதிவு செய்கிறேன்.///
கூடவே என் கண்டனங்களையும்.
- Saravanan