Prakash’s Chronicle 2.0

‘Rasam’, Kongunad Restaurant – Review

Posted by: Prakash on: செப்டம்பர் 25, 2007

கோவை ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் குழுமம், ‘ ரசம்’ என்ற பெயரிலே கொங்கு நாட்டு உணவகம் ஒன்றைத் திறந்திருக்கிறது. புரசைவாக்கம் அண்ணாமலைச் சாலையில், MCtM பள்ளிக்கு அருகிலே , ஒரு பழங்காலத்து வீட்டை, பாரம்பரியம் கெடாமல் சீரமைத்து, அருமையான பராமரிக்கிறார்கள்.

சென்னையில் செட்டிநாடு உணவகங்களுக்குப் பஞ்சமில்லை. அதென்ன கொங்குநாட்டு உணவு என்ற ஆர்வத்திலே தான் சென்றிருந்தோம்.

பொள்ளாச்சி, திருப்பூர், கோவை, உடுமலைப்பேட்டை, பள்ளிப்பாளையம், காங்கேயம், அவினாசி ஆகியவை உள்ளிட்ட பிரதேசங்களின் சிறப்பான சைவ உணவு வகைகளை இங்கே ஒரிஜினல் சுவை மாறாமல் அளிக்கிறார்கள் அல்லது அப்படிச் சொல்கிறார்கள்.

* அனேகமாக எல்லா ஐட்டங்களிலும் வேர்க்கடலை உபயோகிக்கிறார்கள்.

* சுவைகளிலே வித்தியாசம் தெரிகிறது. நிசமாகவே கொங்குநாட்டு ஃப்ளேவர் இருக்கிறதா என்பதை விஷயமறிந்தவர்கள்தான் சொல்ல வேண்டும்.

* மெனுகார்டில் ஏகப்பட்ட ஐட்டங்கள் இருந்தாலும், அவை இரவில் மட்டுமே. மதியம் ஒன்லி மீல்ஸ்.

* வத்தக்குழம்பு போல கொழ கொழ என்று இருந்த ஒன்றைச் சந்தேகத்துடன் பார்த்த போது, சும்மா டேஸ்ட் பண்ணிப்பாருங்க சார்.. கருப்பட்டி பாயசம்… நல்லா இருக்கும் என்று உணவு பரிமாறியவர் ஆலோசனை சொன்னார். கருப்பட்டியையும் ஜவ்வரிசியையும் சேர்த்துச் செய்த ஐட்டம் அது. அட்டகாசமாக இருந்தது. அதே போல குங்குமப்பூ தோசை + வாழைப்பூ வடையும்.

* எரிச்சல் ஏற்படுத்தாத நல்ல சர்வீஸ்.

* முடிவிலே வாழைப்பழம், பீடா போன்றவற்றுக்குப் பதிலாக துளிர் வெற்றிலை, சுண்ணாம்பு & பாக்கு.

விலை விவரம் : தோராயமாக ரூ 350/- ( இருவருக்கு )

3 பதில்கள் -க்கு "‘Rasam’, Kongunad Restaurant – Review"

பனகல் பூங்காவுக்கு கிழபுறம், ‘ஆச்சி’ (என்று நினைக்கிறேன்) என்னும் பெயரில் ஒரு துரித உணவகம் பொதுவாக ஓட்டல்களில் கிடைக்காத குழாய்ப்புட்டு, கார அடை போன்ற அசாதாரண வகைகள் மட்டும் வழங்கிக் கொண்டிருந்தார்கள். அது இன்னும் இருக்கிறதா ?

சத்யராஜ்குமார் : ஆச்சி செட்டிநாடு என்று எழும்பூரில் ஒன்று இருக்கிறது. தி.நகரில் அப்படி எதுவும் இல்லை. அதுவுமில்லாமல், குழாய்புட்டு எல்லாம் இப்போது சென்னையில் சர்வசாதாரணமாகக் கிடைக்கிறது.

[...] by பிரேமலதா on September 27th, 2007 பிரகாஷ் கொங்குநாட்டு உணவகத்தை  விமர…. முகவரி தெரிந்து கொள்ள  கீழே  [...]

மறுமொழி இடுக

TwitterCounter for @icarusprakash

அண்மைய மறுமொழிகள்

SnapJudge மேல் Movies, a meme
WA மேல் Movies, a meme
கற்றதும் பெற்றதும் ஹ… மேல் மிக்சர் – II
WA மேல் Movies, a meme
செந்தழல் ரவி மேல் சங்கச் சித்திரங்கள்- ஜெயம…

RSS Latest From Gilli

  • ஒரு பிழை நடந்துள்ளது; செய்தி ஓடை செயற்படவில்லை. சிறிது நேரத்தில் மீண்டும் முயற்சிக்கவும்.

Subscribe

c

Blog Stats

  • 54,837 hits