Prakash’s Chronicle 2.0

Blowing my own trumpet

ஜூன் 18, 2007 · 23 மறுமொழிகள்

வெங்கட்டின் அழைப்பை ஏற்று….

நானே என்னைப் பற்றிப் பெருமையாக நினைக்கும் எட்டு விஷயங்கள்.

1. நாங்கள் தொழில் தொடங்கிய புதிதில் பணத்துக்காக நிறைய அலைந்து கொண்டிருந்தோம். ஒரு கட்டத்தில் இழுத்து மூடிவிட்டு, வேறு வேலைக்குச் செல்லலமா என்று யோசித்துக் கொண்டே, அதே சமயம், சில்லறைக்காக பிற நிறுவனங்களுக்குச் சில்லறையாக வேலை செய்து கொண்டிருந்தோம். என்ன மாதிரி வேலை என்றால், அந்த காலகட்டத்தில், [2000- 2001 ஆண்டு], புதிதாக நிறைய இணையத்தளங்கள் வந்து கொண்டிருந்தன. அந்த இணையத்தளங்களுக்குத் தேவையான தரவுகளைச் சேகரித்து, சேமித்துக், முறைப்படுத்தித் தந்து, அதற்கேற்றாற் போல கூலி வாங்கிக் கொள்ளுதல். அதே சமயம் திட்ட அறிக்கையுடன் வங்கிகள் , ப்ரைவேட் இன்வெஸ்டர்கள் ஆகியோரையும் முற்றுகை இட்டுக் கொண்டிருந்தோம்.

அப்போது சாலிடேர் நிறுவனம், டிஜிவிஷன் என்ற பெயரில் ஒரு நிறுவனம் ஒன்றைத் துவக்கி, ஏகப்பட்ட முதலீட்டுடன், ஒரு மெகா இணையத்தளம் ஒன்றை நிறுவ முயற்சி செய்து கொண்டிருந்தது. அடையாறில் புதிதாக அலுவலகம் ஒன்றைத் திறந்து, மானாவாரியாக ஆட்களை வேலைக்கு எடுத்துக் கொண்டிருந்தது. சில ரெப்ஃரர்ன்ஸ்கள் மூலமாக அந்த நிறுவனத்தின் சீஈஓ வைப் பார்க்க ஏற்பாடு ஆகியிருந்தது, எங்கள் திட்டத்தின் முதலீட்டுக்காக.

அன்று அந்த அலுவலகத்தின் ஒரு அறையில் நானும் என் பார்ட்னரும் காத்திருந்த போது, ஒரு நாற்பத்தைந்து வயது மாது, கணிப்பொறியில் ரொம்ப நேரமாக முட்டிக் கொண்டிருந்தார். எட்டிப் பார்த்தோம்.

அவர் முட்டிக் கொண்டிருந்தது மைக்ரோசாஃப்ட் ஆக்ஸ்ஸ் தரவுத்தளம். எளிமையான filter , sort போன்றவற்றைக் கூட எப்படி உபயோகிப்பது என்று தெரியாமல், குழம்பிக் கொண்டிருந்தார். உதவி செய்யலாமா என்று கை துறுதுறுவென்றாலும், எதற்கு வம்பு என்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல், கிட்டே போய், நாங்க வேணா ஹெல்ப் செய்யட்டுமா என்று கேட்க, நாங்கள் யார், எதற்காக வந்திருக்கிறோம் என்றே தெரியாமல், சரி என்று சொல்லிவிட்டு, சுமார் இரண்டாயிரம் முகவரிகள் கொண்ட அந்த தரவுத் தளத்திலிருந்து, சென்னை முகவரிகளை மட்டும் தனியாகப் பிரித்து எடுத்து, மெய்ல்மெர்ஜ் மூலமாக அந்த முகவரிகளுக்கு மட்டும் கடிதம் அனுப்ப முயற்சி செய்வதாகச் சொன்னார். மிக எளிமையான வேலை. அரைமணி நேரத்தில் அதைச் செய்துவிட்டு, கூடவே, மைக்ரோசாஃப்ட் ஆக்ச்ஸ்சின் சில அடிப்படைகளைக் கற்றுக் கொடுத்தோம். ஆச்சர்யத்துடன் அவற்றைக் கற்றுக் கொண்டார். தானே சிலவற்றைச் செய்து பார்த்தார். பிறகுதான், அவர் நாங்கள் யார் என்றும், எதற்காக வந்திருக்கிறோம் என்று கேட்டார்.

சொன்னோம். அவர் சிரித்துக் கொண்டே, நான் தான் அந்த நீங்க பார்க்க வந்த அந்த சீஈஓ என்று கைகுலுக்கிவிட்டு தன்னுடைய அறைக்கு அழைத்துச் சென்றார்.

எட்டுமாதங்கள்.

பணம் கிடைத்ததா, பிசினஸ் வளர்ந்தா என்பதல்ல பிரச்சனை. அந்த எட்டுமாதங்களில் நாங்கள் கற்றுகொண்ட சங்கதிகளை, எந்த டாப் பிசினஸ் ஸ்கூலிலும், எவ்வளவு துட்டு செலவழித்தாலும் கற்றுக் கொண்டிருக்க முடியாது.

2. சுஜாதா எனக்கு எழுதிய ஒரு கடிதம்.

3. நான் நடத்தும் நிறுவனம் தொடர்பாக என்னைப் பற்றி ஆனந்த விகடனில் வந்த கட்டுரை.

4. படிப்பு விஷயத்தில் எப்போதுமே சுமாரான நான், கல்லூரிப் பட்டப்படிப்பில், கணிதத்தில் இரண்டு செமஸ்டர்களிலும் சென்டம் அடித்தது.

5. நினைவாற்றல்.

6. நினைவு தெரிந்த அல்லது இசையை உணர முடிந்த நாளாய் இளையராஜாவின் தீவிர ரசிகனாக இருப்பது.

7. முதன் முதலாக கல்கியிலே வெளிவந்த என் கட்டுரை.

8. வாசிக்கச் சுவாரசியமான அளவிலே, ஓரளவுக்கேனும் எழுத முடிவது.

இனி ஆட்டத்துக்கு அழைக்கும் எட்டு பேர்.

1. பிரேமலதா
2. விக்னேஷ்
3. சிவா
4. ஜெயஸ்ரீ
5. பாலாஜி
6. சாத்தான்
7. ப்ரியா
8. சேவியர்

விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்

பகுப்புகள்: tag

23 பதில்கள் இது வரை ↓

கருத்துத் தெரிவிக்கவும்